08/03/2021
சவுதியில் 1,200 இந்திய (தமிழர்கள் உட்பட) கைதிகள் தாயகம் திரும்பினார்
ரியாத் மற்றும் தம்மாம் தர்ஹீல் (Tharheel) மையங்களில் 1,200 க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் வேலை மற்றும் விசா சட்டங்களை மீறியதல் மேலும் ஹுரூப் (Huroob) உள்ளவர்கள் சவுதி அரேபிய போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் ஒன்றரை மாதங்களுக்குள் தாயகம் அனுப்பப்பட்டுள்ளனர்.
900 கைதிகள் கடந்த மாதமும் 300 கைதிகள் இந்த வாரமும் ரியாத் விமான நிலையம் வழியாக சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லிக்கு அனுப்பப்பட்டார்கள்.
இகாமா (Iqama) காலாவதி ஆனவர்கள் , ஒரு ஸ்பான்சரிடமிருந்து ஹூரூப் (தப்பியோடியது) மற்றும் தொழிலாளர் குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 300 நபர்கள் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், அசாம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
இவர்களை ஊருக்கு அனுப்பும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள் சுனில் குமார், ராஜேஷ் குமார், யூசுப் கக்கஞ்சேரி, அப்துல் சமத் மற்றும் துஷார் ஆகியோர் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த 10 மாதங்களில் சவூதி அரேபிய tarheel மையத்திலிருந்து இந்திய கைதிகள் 5,208 நபர்கள் நாடு திரும்பி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழர்களுக்கு இதுமாதிரி பிரச்சினை உள்ளவர்கள் காலாவதியான இகாமா அல்லது ஹூரூப் (huroob) நிலையில் இருப்பவர்கள் final exit யில் தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இகாமா காலாவதி ஆனவர்கள் அல்லது ஹூரூப் நிலையிலுள்ளவர்கள் final exit பெற்று தாயகம் திரும்ப வேண்டும் என்று எண்ணுபவர்கள். இந்திய தூதரக இணையத் தளத்தில் பதிவு செய்யுங்கள் அதற்கான லிங்க்>>>>>
https://www.eoiriyadh.gov.in/news_detail/?newsid=35
சவுதியின் இந்திய தூதரக தொடர்புக்கு:
ரியாத் இந்திய தூதரக தொலைபேசி எண் மற்றும் இமெயில்
+966 54 610 3992, [email protected]
ஜித்தா தூதரக தொலைபேசி எண் மற்றும் இமெயில் +966556122301/ 8002440003,
[email protected] / [email protected]
இந்திய தூதரக Whatsapp சேவை
(Ask doubts & Enquire in English only)
CGI JEDDAH: 00966556122301
EOI RIYADH: 00966542126748
Twitter: