26/05/2025
சுய தொழில்கள்-நண்டு வளர்ப்பு:
சேற்று நண்டு(mud Crab) வளர்ப்பு
சேற்று நண்டு
ஏற்றுமதி சந்தையில் அதிகம் தேவையிருப்பதால், சேற்று நண்டு, பிரபலமாகி வருகிறது. வர்த்தக ரீதியாக நண்டு வளர்ப்பு இப்பொழுது புத்தளம், மன்னர், நீர்கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை கடலோர பகுதிகளில் வேகம் பரவி வருகிறது.
சேற்று நண்டின் வகைகள்
கடலோர பகுதிகள், கழிமுகம் மற்றம் உப்பங்கழி ஆகிய பகுதிகளில், கருப்பு நண்டு (Scylla)என்ற வகை சேற்று நண்டுகள் காணப்படும்.
i. பெரிய இனங்கள் :
பெரிய வகை நண்டுகள் வட்டார மொழியில் 'பச்சை/கருப்பு/இறைச்சி சேற்று நண்டு' என்ற அழைக்கப்படும்
இவை அதிகபட்சமாக 22 செ.மீ அகலமும், 2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை.
இவை சுதந்திரமாக வாழக்கூடியவை. இவைகளின் கால் போன்ற பகுதிகளில், பல கோண வடிவ வரிகள் காணலாம்.
ii. சிறிய வகைகள்:
சிறிய வகைகள், 'கடுகான்(கிண்ணியவில்)' என்று அழைக்கப்படும்
இவை அதிகபட்சமாக 12.7 செ.மீ அகலமும், 1.2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை
இவைகளில் பல கோண வடிவ வரிகள் காணப்படாது. இவை மண் தோண்டும் பழக்கமுடையவை.
இரு வகைகளுக்கும், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் அதிக தேவையுள்ளது.
வளர்ந்த சேற்று நண்டு
வளர்ப்பு முறைகள்
சேற்று நண்டுகளை, இரு முறைகளில் வளர்க்கலாம்
i.குரோ - அவுட் ((Grow out) முறை
இம் முறையில் இள நண்டுகள், தேவையான அளவு வளரும் வரை (5-ல் இருந்து 6 மாதம் வரை), வளர்க்கப்படும்.
இம்முறையில், நண்டுகள் வளர்ப்புக்கு, சாதாரணமாக குட்டைகள்(pond) பயன்படுத்தப்படுகின்றன. இதில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படலாம் அல்லது காணப்படாமலும் இருக்கலாம்.
குட்டையின் அளவு 0.5-லிருந்து 2 ஹெக்டெர் வரை இருக்கலாம். போதுமான வரப்பு மற்றும் கடல் நீர் மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
குட்டை சிறியதாக இருப்பின், வேலிகள் இருக்க வேண்டும். இயற்கையான பெரிய குட்டைகளில், நீர் வெளியேறும் பகுதிகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும்.
10லிருந்து 100 கிராம் வரை அளவுடைய, இளம் நண்டு வாகைகளை களப்பிலிருந்து எடுத்து விதை(seeds) நண்டுகளாக வைத்துக் கொள்ளலாம்.
வளர்ப்பு காலம் 3ல் இருந்து 6 மாதங்கள் ஆகும்
ஒரு சதுர மீட்டருக்கு 1-லிருந்து மூன்று நண்டுகள் வரை இட்டு உணவு (மீன் வகைகள்)அளிக்க வேண்டும்.
பொதுவாக கழிவாகக் கருதப்படும் மீன்களுடன், வட்டாரத்தில் கிடைக்கும் ஏனைய உணவு வகைகள் நண்டுகளுக்கு உணவாக கொடுக்கப்படலாம். (உடல் எடையின் அளவின் 5 % எடை, ஒரு தினத்திற்கு உணவாக கொடுக்கப்பட வேண்டும்)
அடிக்கடி வளரும் நண்டினை எடுத்து, பொதுவான வளர்ச்சி மற்றும் உடல்நலத்தை கண்காணிக்க வேண்டும்.
மூன்றாவது மாதத்திலிருந்து தகுந்த எடையையுடைய நண்டினை அறுவைடை செய்யலாம். இந்த எண்ணிக்கை குறைப்பு மூலம், மற்ற நண்டுகள் நன்றாக வளர வாய்ப்பு உள்ளது.
ii. ஃபேட்டனிங்க (fattening) (கொழுபூட்டல்) (தடிமனாக்கம் ) முறை
மென் ஓடு நண்டுகளை, சில வாரங்கள், வெளி ஓடு தடிப்பு ஆகும் வரை வளர்க்கப்படும். இந்த கடின ஓடுடைய நண்டுகள், வட்டார வாக்கில் தண்ணி நண்டு (சதை) என்று வழங்கப்படும்.
a. குட்டைகளில் தடிமனாக்கும் முறை
1 - 1.5 மீ நீரின் ஆழம் கொண்ட, 0.025 - 0.2 ஹெக்டர் அளவுடைய கடலோர குட்டைகளில் தடிமனாக்கும் முறையை கையாளலாம்.
விதை மென் நண்டுகளை விடுவதற்கு முன்னர், குட்டையின் அடிப்புற நீரை வடிகட்டி, சூரியனால் உலர்த்தி, தேவையான அளவு சுண்ணாம்பை இட வேண்டும்.
குட்டையின் வரப்பை ஓட்டைகள், விரிசல்கள் இல்லாதவாறு, மொழுக வேண்டும். மதகு பகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இதன் வழியாக தான் நண்டுகள் தப்பிச் செல்லும்.
நுழைவாயில் பகுதியில், வரப்பை, மூங்கில் பாய்க் கொண்டு வலுவூட்ட வேண்டும்.
வரப்பினை மூங்கில் குச்சிகள் மற்றும் வலையினை கொண்டு சரியான முறையில் வேலியிட வேண்டும். நண்டு வெயியேறுவதை தவிர்க்க, இந்த வேலிகள், குட்டையில் உட்புறம் சாய்வலாக அமைய வேண்டும்.
மீனவர்கள் அல்லது நண்டு விற்பவர்களிடமிருந்து, விதை மென் நண்டினை வாங்கி, இதன் அளவை பொறுத்து, ஒரு சதுர மீட்டருக்கு 0.5-லிருந்து 2 வரை இட வேண்டும்.
சந்தையில், 550 கிராம் எடைக்கு மேல் உள்ள நண்டுகளுக்கு கிராக்கி அதிகம். எனவே இவ்வகை நண்டுகளை விதை நண்டாக விடுவது நல்லது. இவ்வாறு விடும் போது ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நண்டே இட வேண்டும்.
கிராமத்தில் மற்றும் நீர் நண்டு கிடைப்பதை பொறுத்து, 6 - 8 தடிமனாக்கும் சுழற்சிகளை கையாளலாம்.
வளர்ப்பு குட்டை பெரியதாக இருப்பின், அதனை வெவ்வேறு பாத்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து, வெவ்வேறு அளவுடைய நண்டினை வெவ்வேறு பாத்திகளில் விட்டு வளர்க்கலாம். இதனால் எளிதாக உணவு அளிப்பது, கண்கானிப்பது, அறுவடை செய்வது முடியும்
விதை நண்டு இடும் இடைவெளி அதிகமாக இருப்பின், ஒரே பாத்தியில் ஒரே மாதிரியான நண்டினை இடலாம்.
ஆண் நண்டு, பெண் நண்டினை தனித்தனி பாத்திகளில் வளர்ப்பத
மூலம், வலிய ஆண் நண்டின் தாக்குதலை குறைக்க முடியும்.
நண்டு விலைகளை பார்த்தால் பெரிய நண்டு (large) 2500ரூப
மிகப்பெரிய (Extra Large) 3500
சிறிய (small) 1000-500 வரைக்கும் விற்கலாம். அது உங்கள் கிராமத்தில் இருக்கும் விலையை பொறுத்தவரை.