SN Book Centre

SN Book Centre All stationery items, books, gift items, Whole sale& retail

18/11/2025
படிவம் தொடர்பு 0232051111.🔴  : இலங்கை போக்குவரத்து சபையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான ஆட்சேர்ப்பு!இலங்கை போக்குவ...
19/07/2025

படிவம் தொடர்பு 0232051111.
🔴 : இலங்கை போக்குவரத்து சபையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான ஆட்சேர்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 107 டிப்போக்களில் 25,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் தற்போது இயங்கி வரும் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பத்திரிகை விளம்பரம் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, சாரதி பதவிக்கு 450 வெற்றிடங்களும் (ஆண்களுக்கு 425, பெண்களுக்கு 25), நடத்துனர் பதவிக்கு 300 வெற்றிடங்களும் (ஆண்களுக்கு 275, பெண்களுக்கு 25) உள்ளன.

விண்ணப்பங்களுக்கான கடைசி திகதி ஜூலை 31, 2025 ஆகும். விண்ணப்பிக்கும் பதவி மற்றும் சம்பந்தப்பட்ட மாகாணம் என்பன உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சையின் போது தமது அசல் பாடசாலை விடுப்புச் சான்றிதழ் (மாணவர் முன்னேற்ற அறிக்கை) மற்றும் பிற கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையற்ற அல்லது விதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30/03/2025
வெளியாகி  விட்டது யாழ்  ஆசானின் மூன்றாம்  தவணைப் பயிற்சி வினாத்தாள்கள் 📚📚📚🧑‍🎓023205111107797707780713057001
08/09/2024

வெளியாகி விட்டது யாழ் ஆசானின் மூன்றாம் தவணைப் பயிற்சி வினாத்தாள்கள் 📚📚📚🧑‍🎓
0232051111
0779770778
0713057001

இதையும் படிக்கலாமே...!!! ஒரு சீன நாட்டு தத்துவக் கதை...ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை...
27/08/2024

இதையும் படிக்கலாமே...!!!

ஒரு சீன நாட்டு தத்துவக் கதை...
ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.
அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள். நான் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.
அப்பா சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்.
அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்..’
இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப் படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.
`எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்.
மூன்றாவது நாள். மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை... மற்றொன்றில் இல்லை.
அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.
`அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.
அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தேன்.
அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். என் கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.
நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!
எப்பேர்ப்பட்ட தத்துவம் பார்த்தீர்களா... அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்.

Address

No. 32, China Bazzar
Mannar
41000

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00

Telephone

+94232051111

Website

Alerts

Be the first to know and let us send you an email when SN Book Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SN Book Centre:

Share

Category