Nskxpress

Nskxpress im Journalist my media NSKXPRESS.I WORKING ON THE MASJITH

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி சாய்ந்தமருதில் உருவாக்கப்பட்ட வரலாறு ....------------------------------------------------------...
31/03/2026

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி
சாய்ந்தமருதில் உருவாக்கப்பட்ட வரலாறு ....
--------------------------------------------------------------------------
77 வருடங்களுக்கு முன் அதாவது 1949 ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று சாய்ந்தமருதில் ( 60’X20’ ) ஒரு ஓலைக் கொட்டிலில் "Junior English School" என்ற பெயரில் தோற்றம் பெற்றதுதான் தற்போது வளர்ச்சி அடைந்து தலை நிமிர்ந்து நிற்கும் தேசிய பாடசாலையான கல்முனை ஸாஹிறாக் கல்லூரி ஆகும்.

மர்ஹும் கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்களே இக்கல்லூரியின் ஸ்தாபகர் ஆவார்.

1947ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தேர்தல் தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்கள் முதல் வேலையாக Junior English School ஐ அமைக்கும் முயற்சியில் அன்று முழு மூச்சுடன் இறங்கினார்.

அச்சமயம் நாட்டின் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த மேஜர் ஈ.ஏ.நுகேவெல அவர்களிடம் கல்முனைப் பிரதேசத்தில் Junior English School அமைத்துத் தரும்படியும் இதற்காக இப்பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து இங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிடுமாறும் முதலியார் காரியப்பர் வேண்டினார்.

இதன்படி 1948 ஆம் ஆண்டு கல்வியமைச்சர் மேஜர் ஈ.ஏ.நுகேவெல கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், கிழக்கு மாகாண கல்வி அதிகாரி எஸ்.வி சோமசேகரம் ஆகியோருடன் முதற் தடவையாக கல்முனைப் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சருக்கும் அவரோடு விஜயம் செய்த கல்வி அதிகாரிகளுக்கும் 1948ஆம் ஆண்டில் பெரு வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது.

இவ்விஜயத்தின் போது அமைச்சர் மேஜர் ஈ.ஏ.நுகேவெல காணி வசதியுடன் தற்காலிகமான ஒரு கட்டட வசதியை ஏற்படுத்தித் தந்தால் Junior English School ஒன்றை சாய்ந்தமருதில் அமைத்துத் தருவதாக உறுதி அளித்தார்.

உடனே முதலியார் காரியப்பர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பை முற்றிலும் இலவசமாக பாடசாலை அமைப்பதற்கென எழுதிக் கையளித்தார். எனினும் காலம் கடந்தும் Junior English School அமைக்கும் பணிகள் அங்கு ஆரம்பிக்கப்படவில்லை.

1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் முதலியார் காரியப்பர் தனது அமைச்சு பற்றிய விவாதத்தை ஆரம்பித்து உரை நிகழ்த்துவதற்கு முன் தனது பகுதியில் Junior English School ஒன்றை அமைத்துத் தருவதாக கல்வி அமைச்சர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

இதன் பயனாக முதலியார் காரியப்பரால் வழங்கப்பட்ட காணியில் பொதுமக்களால் 60’X20’ அளவில் கிடுகுகளால் அடைக்கப்பட்ட ஒரு ஓலைக் கொட்டில் அமைக்கப்பட்டது.

இக்கொட்டகையிலேயே 1949.11.16 ஆம் திகதி கொழும்பு வித்தியாபதி கே.எஸ்.அருள்நந்தி, கிழக்குமாகாண கல்வி அதிகாரி எஸ்.ஜே. குணசேகரம், வித்தியாதரிசி எஸ்.விஸ்வலிங்கம், முதலியார் காரியப்பர் ஆகியோரின் பிரசன்னத்தில் Junior English School சம்பிரதாயபூர்வமாக சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் தமிழ் மொழி மூலம் 5ஆம் தரம் சித்தியடைந்த 4 மாணவர்களுடன் ஆங்கில மொழி பாடசாலையாக இப்பாடசாலை இயங்க ஆரம்பித்தது.

அன்றைய காலத்தில் எம்.ஐ. அப்துல் காதர் பதில் அதிபராக இப்பாடசாலையில் கடமையாற்றினார்.
4 மாணவர்களுடன் இயங்க ஆரம்பித்த இந்த பாடசாலை நிரந்தர அதிபர் ஒருவர் இன்றி பதின்மூன்றரை மாதங்கள் இயங்கியது.

எம்.ஐ.அப்துல் காதர் அதிபர் அல்லது எம்.எம்.இப்றாஹீம் அதிபர் அல்லது பொன்னப்பா அதிபர் ஆகியோரால் காலத்திற்கு காலம் அதிபருக்குரிய கடமைகள் ஆற்றப்பட்டு வந்தன.

இதன் பின்னர் திஹாரியிலிருந்து
எம்.ஏ. மீராலெவ்வை அதிபர் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பாடசாலையில் 1951.01.01 ஆம் திகதி அதிபராகப் பொறுப்பேற்றார்.

1953ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு அமைய இப்பாடசாலை ஆங்கில மொழி பாடசாலையிலிருந்து தமிழ் மொழி பாடசாலையாக மாற்றமடைந்தது.

இதற்குப் பிறகு பாடசாலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் தொகை மேலும் அதிகரித்தது. பெளதிக வளங்களும் கூடின.

1949ல் ஆங்கில மொழி பாடசாலையாக ஆரம்பித்து பின்னர் சீனியர் ஸ்கூல் ஆக மாற்றம் பெற்று அதன் பின்னர் மஹாவித்தியாலயமாகத் தரமுயர்ந்து இன்று இப்பாடசாலை தேசிய பாடசாலையாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

கல்லூரியின் ஸ்தாபகர்கள்

எம்.எஸ்.காரரியப்பர்
எம்.சி.ஏ.ஹமீட் (அதிபர்)
எம்.வை.ஹமீது உடையார்(கிராம சபை தலைவர்)
எம்.ஏ.கபூர் மரைக்காயர்
பீ.எம்.மீராசாய்வு பயில்வான்
எம்.ஐ.அஹமதுலெவ்வை இராசாப்போடியார்
ஏ.எல். அலியார் (மர்ஹும் மருதூர் ஏ மஜீதின் அவர்களின் தந்தை)
ஓ.எம்.அலியார்
எம்.எம்.ஆதம்பாவா சேர்மன்
ஐ.எம்.ஏ.ஐயூப் அதிபர்
முஹம்மது கனி வைத்தியர்
யூ.எம்.இப்றாஹிம்லெவ்வை
இப்றாலெவ்வ மரைக்காயர்
நைனா முஹம்மது
பீ.எம்.மக்பூல் ஆலிம்
முஹம்மது காசீம்
ஏ.எம்.சரீப் விதானை
கோ.அஹமதுலெவ்வை மரைக்காயர்
எம்.எச்.எம்.ஹனிபா வ.வி

இவர்கள் அனைவரும் வபாத்தாகி விட்டார்கள்.

ஸாஹிறாக் கல்லூரியின் வைர விழா நிகழ்வின் போது மர்ஹும் அல்-ஹாஜ் எம்.சீ.ஏ. ஹமீது அதிபர் அவர்கள் நிகழ்த்திய உரையிலிருந்து....

இக் கல்லூரிக்கு ஸாஹிறாக் கல்லூரி என பெயரிட வேண்டும் என்று பிரேரித்தவர் எம் .அஹ்மத் துரை அவர்கள் .எம் ஐ எம் மீரா லெப்பை, எம் ஐ எம் அப்துல் காதர் ஆகியோரின் தாய் மாமன் அவர் என மர்ஹும் அஹ்மத் துரை அவர்களின் மகளான நஜீமா காதர் முகைதீன் (ஓய்வு பெற்ற மெளலவி ஆசிரியை) அவர்கள் இந்த தகவலை தெரிவித்தார்.

- ஏ.எல் ஜுனைதீன்,
ஊடகவியலாளர்.

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக...
31/03/2026

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும் அர்ப்பணிப்பும் மூலம் எண்ணற்ற திறமையான மருத்துவர்களை உருவாக்கிய பெருமைக்குரிய கல்வியாளர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது.

அன்னார் தமது வாழ்நாளை முழுமையாக மனிதகுல நலனுக்காக அர்ப்பணித்த அரிய மருத்துவ அறிஞர். இலங்கையின் மருத்துவத் துறையில் அவர் பதித்த தடங்கள் என்றும் அழியாதவை. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உயிர் நம்பிக்கையை அளித்ததோடு, பல தலைமுறைகள் தழுவி நிலைக்கும் மருத்துவப் பண்பாட்டை உருவாக்கியவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அன்னாரின் மறைவு, அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்லாது, முழு நாட்டின் மருத்துவ சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அல்லாஹ் (ஸுப்ஹானஹு வத்தஆலா) அவர்களின் பாவங்களை மன்னித்து, அவரின் நல்ல செயல்களை ஏற்றுக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தில் நிலையான இடம் அளிப்பானாக என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரை நேசித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பேரிழப்பை தாங்கிக் கொள்ள அல்லாஹ் அவர்களுக்கு அளவற்ற பொறுமையையும் ஆறுதலையும் வழங்குவானாக.

-- கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)

"மத்திய கிழக்கு போர் சூழலில்ரஷ்யாவின் எரிபொருள் உதவியானது இலங்கையில் பாதிப்பை குறைக்க உதவும்"-நீதிக்கும் சமாதானத்திற்கும...
31/03/2026

"மத்திய கிழக்கு போர் சூழலில்
ரஷ்யாவின் எரிபொருள் உதவியானது இலங்கையில் பாதிப்பை குறைக்க உதவும்"
-நீதிக்கும் சமாதானத்திற்குமான முஸ்லிம் இளைஞர் மன்றம் தெரிவிப்பு

✍️ அஸ்லம் எஸ்.மௌலானா

அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் யுத்தம் காரணமாக ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய அளவில் எரிபொருள் நெருக்கடி நிலை உருவாகியுள்ள சூழலில், இலங்கைக்கு 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பெற்றோலிய உதவியை வழங்க முன்வந்துள்ள ரஷ்ய கூட்டாட்சி அரசின் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கதென
நீதிக்கும் சமாதானத்திற்குமான முஸ்லிம் இளைஞர் மன்றம் தெரிவித்துள்ளது.

கல்முனையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற மேற்படி அமைப்பின் செயலாளர் கலீல் எஸ். முஹம்மது வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

எமது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இராஜதந்திர முயற்சி காரணமாகவும் இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பினாலும் இவ்விடயம் சாத்தியமாகியுள்ளது.

ரஷ்யாவின் இந்த உதவியானது எமது நாட்டின் தற்போதைய எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதோடு, பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், எரிசக்தி துறையில் நிலைத்தன்மை ஏற்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் யுத்த சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விநியோக தடைகள் மற்றும் விலை உயர்வுகள் ஆகியவற்றின் பின்னணியிலும், இலங்கையுடன் கொண்டுள்ள நட்பு மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி ரஷ்யா இத்தகைய உதவியை வழங்க முன்வந்திருப்பது பெரும் வரப்பிரசாதமாகும்.

இந்த நடவடிக்கை, இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதோடு, போக்குவரத்து, மின்சாரம் உற்பத்தி மற்றும் தொழில் துறைகளின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கும் ஆதரவாக அமையும்- என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

31/03/2026
31/03/2026
31/03/2026
31/03/2026

மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

புதிய கட்டண விபரம் முதல் Comment'இல்

31/03/2026

அமெரிக்காவின் 18 முன்னணி நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

முழுமையான விபரங்களுக்கு - https://hiru.lk/LL6Mcq

22/02/2026

🇱🇰🇮🇳 • இந்திய உயர்ஸ்தானிகராலய முதற் செயலாளர் ஆர். அஷோக்குமாருக்கு கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பாராட்டு..!

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதற் செயலாளராக (DC) பணியாற்றி தற்போது பிரியாவிடை பெறும் ஆர். அஷோக்குமார் அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

ஆர். அஷோக்குமார் அவர்கள் தனது பதவிக்காலத்தில் இலங்கை-இந்தியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பொறுப்புணர்வுடன் செயல்பட்டதுடன், தூதரக பணிகளில் திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியவர்.

சமூக மற்றும் மனிதநேய நடவடிக்கைகளில் அவர் வழங்கிய பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றும், அவரது எதிர்கால பணிகள் மேலும் சிறப்பாக அமையவும் தனது வாழ்த்துக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

-- ஊடகப்பிரிவு

Address

Kattankudy
Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nskxpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nskxpress:

Share