Irfan

Irfan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Irfan, Book shop, school Road semmanodai 07 valaichenai, Batticaloa.

26/02/2013
பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை 	By irfan sanasபாகிஸ்தானில் புனித குர் ஆன் நூலை எரித்ததாகக் க...
26/12/2012

பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை


By irfan sanas

பாகிஸ்தானில் புனித குர் ஆன் நூலை எரித்ததாகக் கூறப்படும் நபரொருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை ஒட்டியுள்ள சீட்டா கிராமத்தில் உள்ள பள்ளிவாசலொன்றில், கடந்த வியாழக்கிழமை ஒரு வழிப்போக்கர் இரவு தங்கினார்.

மறுநாள் காலை, அந்த மசூதியின் மதகுரு தொழுகை நடத்த வந்தபோது, எரிந்த நிலையில் குர்ஆனின் ஏடுகள் கிடந்தன.
இதனையொட்டி, அந்த மசூதியில் வழிப்போக்கர் மட்டுமே தங்கியிருந்ததால், குர்ஆனை அவர் தான் எரித்து இருக்க வேண்டும் என மதகுரு தீர்மானித்தார்.



மத அவமதிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்படி அந்த வழிப்போக்கரை பொலிஸாரிடம் மதகுரு ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பொலிஸாரின் காவலில் இருந்து அந்த வழிப்போக்கரை விடுவித்து, வெளியே இழுத்துப்போட்ட அந்த கும்பல், அவரை உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றது.

இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பணியின் போது கவனக்குறைவாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் 7 பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதுவகை பெண்ணுறையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை! 	By irfan sanasஎச்.ஐ.வி. தொற்று மற்றும் கருதரித்தல் ஆகியவற்றிலிருந்து பெ...
26/12/2012

புதுவகை பெண்ணுறையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!


By irfan sanas

எச்.ஐ.வி. தொற்று மற்றும் கருதரித்தல் ஆகியவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கக்கூடிய விசேட பெண்ணுறையொன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

குறித்த பெண்ணுறையானது கரையக்கூடியது என்பதுடன் இரசாயனப் பொருட்களை விடுவிக்கவும் கூடியது.

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இப் பெண்ணுறையானது நுண்ணிய நாரிழைகளின் மூலம் இலக்ட்ரோ ஸ்பின்னிங் எனும் முறைமையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.



மருந்துகளை மிக மெல்லிய துணி போன்ற நாரிழைகளாக உருவாக்கி இப்பெண்ணுறை தயாரிக்கப்படுகின்றது.

இப்பெண்ணுறையானது உபயோகப்படுத்தப்பட்டதன் பின்னர் சில நிமிடங்களிலோ அல்லது சில நாட்களுக்குப் பின்னரோ கரைந்து விடும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இவை விந்து உட்புகுவதை தடைசெய்வது மட்டுமன்றி, அதே நேரத்தில் சக்தி மிக்க எச்.ஐ.வி.க்கு எதிரான மருந்துகளை விடுவிக்கும் திறன் படைத்தது.



இதனை உருவாக்குவதற்கென அவ் ஆராய்ச்சியாளர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வகையான பெண்ணுறைகளை உருவாக்கியுள்ளனர். அதிலொன்று உடனே பெண்ணின் உடலுக்குள் கரைந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது. மற்றையது சில நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கருத்தடை மாத்திரைக்கு மாற்றீடாகவும் எச்.ஐ.வி.க்கு எதிரான மருந்தாகவும் செயற்படக்கூடியது.

சங்கா டெஸ்ட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் 	By irfan sanasஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான கு...
26/12/2012

சங்கா டெஸ்ட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்


By irfan sanas

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி வோர்ன் - முரளி கிண்ண டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றது.

மெல்பேர்ணில் நடைபெற்ற இப் போட்டியில் 40 ஓட்டங்களை பெற்ற போது அவர் இந்தச் சாதனையைப் புரிந்தார். இதேவேளை, சர்வதேச ரீதியில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 11ஆவது வீரராகவும் சங்கக்கார திகழ்கின்றார்.

இந்நிலையில், மஹேல ஜயவர்தன 10 ஆயிரம் ஓட்டங்களை (10,674) கடந்த முதலாவது இலங்கை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களைப் போன்று கச்சிதமாக பல்துலக்கும் குரங்கு 	By irfan sanasஇந்தோனேசிய ஜாவா தீவிலுள்ள லீக்கி வனவிலங்கு சரணாலயத்தில்...
26/12/2012

மனிதர்களைப் போன்று கச்சிதமாக பல்துலக்கும் குரங்கு


By irfan sanas



இந்தோனேசிய ஜாவா தீவிலுள்ள லீக்கி வனவிலங்கு சரணாலயத்தில் வாழும் குரங்கு ஒன்று மனிதர்களைப் போன்று கச்சிதமாக பற்தூரிகையால் பல் துலக்கி வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

சிஸ்வி என்ற 34 வயதான இக்குரங்கு ஒரு சமயம் கையில் பற்தூரிகையொன்றை கையாண்ட விதத்தை பராமரிப்பாளர்கள் கவனித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் குரங்கு பழங்களைச் சாப்பிடும் முன்னர் பற்பசையை பற்தூரிகையில் இட்டு கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அக்குரங்கு மனிதர்களைப் போன்று கச்சிதமாக பல்துலக்கத் தொடங்கியுள்ளது.

பாட்டிக்கு வயது 93 ஆனால்... 	By irfan sanasகின்னஸ் புத்தகத்தின் தரவுப்படி உலகின் மிகப்பழமையான யோகா ஆசிரியையாக டஓ போர்ச்ச...
26/12/2012

பாட்டிக்கு வயது 93 ஆனால்...


By irfan sanas

கின்னஸ் புத்தகத்தின் தரவுப்படி உலகின் மிகப்பழமையான யோகா ஆசிரியையாக டஓ போர்ச்சன் லின்ச் என்ற 93 வயது நிரம்பிய பெண் காணப்படுகிறார். தனது வாழ்நாளில் பல்லாயிரக் கணக்கான மாணவர்களுக்கு யோகா கற்பித்த பெருமைக்குரியவர்.

தற்போது நியூயோர்க் நகரில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தில் தொடர்ந்தும் யோகா கற்பித்து வருகிறார். யோகாவில் சுமார் 80 வருட அனுபவமுள்ள இவரிடம் பயிற்சி பெற பலரும் விரும்புகின்றனர்.

இது குறித்து டஓ போர்ச்சன் லின்ச் தெரிவிக்கையில், எனது நாள் யோகா மூலம் ஆரம்பமாகிறது, நான் யோகாவை மிகவும் விரும்புகிறேன் என்றார்.

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி 	By irfan sanasஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆற...
26/12/2012

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி


By irfan sanas

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை விஞ்ஞானம்.

மனிதன் வாழ பூமியை தவிர ஏதுவான கிரகங்கள் உள்ளனவா என பல்லாயிரக்கணக்கான ஆய்வாளர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்தின் மீது எப்போதுமே ஆராய்ச்சியாளர்களுக்கு தனி மோகம் உண்டு. காரணம் செவ்வாய் கிரகத்தில் பல வருடங்களுக்கு முன்பு நீர் இருந்ததாக நம்பப்படுவதே.

இதற்காக ஏற்கனவே பல செயற்கைக் கோள்களையும், ரொபோட்களையும் விண்ணிக்கு அனுப்பியுள்ள நாசா விஞ்ஞானிகள், கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி கியூரியோசிட்டி என்ற ரொபட்டிக் விண்கலத்தினை பல்வேறு கனவுகளுடன் வெற்றிகரமாக அனுப்பியது.

யானை போய் அதன் வால் பொறுத்த கதையாக பல தடவைகள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது பல விண்கலங்கள் வெடித்துச் சுக்குநூறாகியுள்ளது.

ஆனால் இந்த கியூரியோசிட்டி விண்கலமானது விஞ்ஞானிகளின் கனவுகளை வழக்கம் போல சுக்குநூறாக்காமல் 563,000,000 கீ.மீ தூரம் பாதுகாப்பாக பயணித்து செவ்வாயில் இவ்வாண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி தரையிறங்கி ஆய்வாளர்களுக்கான ஆராய்ச்சிக் கதவை திறந்து விட்டது.


செவ்வாயில் மனிதன் வாழ ஏதுவான காரணிகளை கண்டுபிடிப்பதனை பிரதான நோக்காகக் கொண்டே இந்த கியூரியோசிட்டி செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் செற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஏற்கனவே செவ்வாயில் நீர் இருந்துள்ளதாக நம்பப்பட்ட போதிலும் இதுவரையில் அதனை உறுதிப்படுத்தும் அளவிற்கு திருப்திகரமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நீர் இருப்பதனை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலமைந்த படங்களை நாசாவிற்குச் சொந்தமான கியூரியோசிட்டி விண்கலம் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

இதில் உருளையான கூழாங்கற்கள் நிறைந்த நிலப்ப பரப்புக்கள் பல மிகத் தெளிவாக காணப்படுகிறது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் பெரும் மகிழ்சியில் உள்ளதுடன் இதனை செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாகவும் கருதுகின்றனர்.

இது தொடர்பில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி ஜோன் கிரொட்சின்கர் கருத்து வெளியிடுகையில், உண்மையில் கியூரியோசிட்டி மூலமான ஆராய்ச்சிகள் மகிழ்சியைத் தருகின்றது.

எனினும் கியூரியோசிட்டியினை செவ்வாய் கிரகத்தின் மத்தில் தரையிறக்க எண்ணியிருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.


ஆனால் செவ்வாய் கிரகத்தின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியத்தக்க வகையில் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் சாதாரணமாக -70 பாகை வரையில் வெப்பநிலை குறைவடையும். இதனால் உறைந்த பாலை நிலமாக காணப்படும் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஆராய்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம் என்றார்.

தற்போது செவ்வாயின் வெப்பநிலை 0 பாகையிலிருந்து 20 பாகை வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றமையால் நீர் இருப்பின் அதனை கண்டுபிடிப்பது சற்று இலகுவாக அமையும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செவ்வாய் கிரகத்திலுள்ள கல், மண், தட்பவெப்ப நிலைகள் போன்றவற்றின் மேலதிக தகவல்களை துல்லியமாக படங்களாகவும் கியூரியோசிற்றி தற்போது வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக கியூரியோசிட்டியில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள கெமரா மற்றும் ரொபட்டிக் அமைப்புக்கள் சிறப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் செவ்வாய் கிரகத்தில் குடியேறலாமா...

ஆரம்பத்தில் நிலவுக்கு குறியேற அறிவியல் உலகில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது கைகூடவில்லை. ஆனால் அண்மையில் நாசாவின் முன்னாள் விஞ்ஞானிகள் சிலர் இணைந்து 'கோல்டன் ஸ்பைக்' எனும் நிறுவனத்தின் மூலம் நிலவிற்கு தேசத்தின் பெருமைக்காக அல்லது ஆராய்ச்சிகளுக்காக ஆட்களை அழைத்துச் செல்ல முடிவுசெய்துள்ளனர்.

இதற்கான கட்டணம் வாயைப் பிளக்க வைக்கிறது. அதாவது அமெரிக்க டொலரில் 1.5 பில்லியன்களாகும். இது இருவருக்கான கட்டணம் மட்டுமே. இவ்வாறான அதிக செலவுகள் காரணமாக நாசாவே நிலவிற்கு மனிதனை அனுப்புவதனை கடந்த 40 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் அமைப்பாளரான எலன் மஸ்க் என்பவர் செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு ஒன்றை ஏற்படுத்தி அதில் சுமார் 80ஆயிரம் பேரை குடியமர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

முதற்கட்டமாக முன்னேறிய நாடுகளிலுள்ள தேகாரோக்கியமுடைய நடுத்தர வயதினரை தலா ஒருவருக்கு 5 கோடி செலவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். சேகரிக்கக் கூடிய குறைந்தளவிலான தொகையாகவே இதனை நிர்ணயித்துள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் அங்கே எதிர்காலத்தில் வரவுள்ளவர்களில் நலனுக்காக பணியாற்றி விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. மேலும், வீடுகள் கட்டுவதற்கான உபகரணங்களையும் கொண்டுசெல்ல தயார் செய்யப்படுகிறது.

முதலில் பயணம் செய்யவுள்ளவர்கள் தங்கவென காபனீரோட்சைட் நிரப்பட்ட கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளது. அதன் மேல் சூரியனின் வெப்பத்தைத் தாங்க நீர் நிரப்பப்பட்டிருக்கும். இதனால் சுதந்திரமாக செவ்வாய் கிரகத்தில் விவசாயத்தினை மேற்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே முதற் பயணத்தின் போதே விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், மீத்தேன், ஆக்ஸிஜன் வாயுக்கள் போன்றவை எடுத்துச்செல்லப்படவுள்ளது. தூர நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சவால்மிக்க திட்டத்தில் பங்குகொள்ள தற்போது, உலகிலுள்ள ஒரு லட்சம் பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் ஆர்வம் காட்டுகின்றனர். இத்திட்டம் வெற்றி பெறுமானால், பூமியிலுள்ள 7 பில்லியன் மக்களும் ஆசைப்படுவார்கள்.

அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளில் இத்திட்டம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இப்போதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இதற்கென செங்குத்தாக மேலெழும்பவும் தரையிறங்கவும் கூடிய விசேடமான ரொக்கட் ஒன்று பரிசோதனைக்குட்படுத்தப்படுகிறது.

இந்த ரொக்கட்டுக்கு 'பல்கொன் 9' என பெயரிடப்பட்டுள்ளது இவ்வாறு லண்டனில் உள்ள ராயல் வான்வழி சமூகத்தில் வைத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் அமைப்பாளரும், முதன்மை செயல் அலுவலருமான எலன் மஸ்க் தெரிவித்தார்.

எனவே விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இத்திட்டமானது 'செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க' என அழைக்கபோவதை உறுதியாக நம்புகிறது அறிவியல் உலகம். அந்த நம்பிக்கை நிஜமாகும் போது அந்த சவால்மிக்க பயணத்திற்கு நாமும் தயாராவோம்!

உலக அழிவு தொடர்பில் அச்சத்தில் அனைவருமிருக்க, சாதாரணமாகப் பொழுதைக் கழிக்கும் மாயா இனத்தவர்கள்! 	By irfan sanasஎதிர்வரும்...
26/12/2012

உலக அழிவு தொடர்பில் அச்சத்தில் அனைவருமிருக்க, சாதாரணமாகப் பொழுதைக் கழிக்கும் மாயா இனத்தவர்கள்!


By irfan sanas

எதிர்வரும் 21 ஆம் திகதி உலகம் அழியுமா? அழியாதா? என்ற விடயம் இவ்வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஏன் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதனை நினைத்துப் பலர் அச்சம்கொண்டுள்ளதுடன், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் அழியும் என்பதற்குப் பல விசித்திரமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன, வரலாற்றுக் குறிப்புகள் அலசி ஆராயப்படுகின்றன, நாம் முன்னர் அறிந்திராத பல கதைகள் சொல்லப்படுகின்றன.

இவற்றில் முக்கியமானதொன்று மாயன் நாட்காட்டி பற்றியதாகும். அதாவது 'மாயா' நாகரீகத்தின் வழித் தோன்றிய மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த மக்களின் நாட்குறிப்பானது நாம் பாவிக்கும் நாட்காட்டியின் 2012-12-21 திகதியுடன் முடிவுக்கு வருகிறது என்பதாகும்.



இதன் முடிவின் பின் மாயன்களின் படைப்புக்கும் யுத்தத்துக்கும் (God of war and creation)பொறுப்பான கடவுளான போலோன் யோக்தே (BOLON YOKTHE) இன் வருகை இடம்பெறும் என மாயன்கள் கணித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதிலும் சில வரலாற்று சான்றுகள் பூதாகரமாக்கப்பட்டதால் உலகம் அழியப்போகின்றது என்ற எண்ணமானது பலரின் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.

சாதாரண விதையாக இருந்த பய உணர்வானது தற்போது வேரூன்றி விருட்சமாக மாறியுள்ளது.

பலர் இன்று இவ்விடயத்தினை எண்ணி அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் மெக்ஸிக்கோவில் வசித்து வரும் சுமார் 800,000 மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள் தமது பொழுதினை எவ்வித பதற்றமும் இன்றிக் கழித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மெக்ஸிகோவின் யுகடான் தீபகற்பப்பகுதியில் வாழும் மக்களும் தமது அன்றாடக் கடமைகளை எவ்வித பதற்றமும் இன்றி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21.12.2012 , அதாவது நீண்ட மாயன் நாட்காட்டியின் 5,125 ஆவது ஆண்டு சுழற்சி ஏற்படும் தினம் தொடர்பில் மாயா இனத்தவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது அவர்கள் இது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம்.

உலகம் அழியப்போவது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதெனவும், கடந்த 2006 ஆம் ஆண்டும் ‘6-6-6’ (June 6, 2006) இன் போதும் பலர் இதனையே தெரிவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



இதேபோல் அவ்வினத்தைச் சேர்ந்த மற்றையோரும் எதுவித கலக்கமோ பயமோ இன்றி தமது பொழுதினை வழமைபோல கழித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதிலிருந்து புலப்படுவது என்னவெனில் உலக அழிவு தொடர்பில் நாம் பெரிதாக அலட்டிக்கொண்ட போதிலும் மாயா இனத்தவர்களோ இவ்விடயம் தொடர்பில் பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லையெனத் தோன்றுகின்றது.

பயந்தவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இவ்விடயத்திலும் சிறிய சிறிய விடயங்களும், உதாரணமாக காலநிலை மாற்றம் போன்றவையும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மாயன்கள் அக்காலப்பகுதியில் அசாத்திய திறன்கள் மிக்க இனக்குழுவாக திகழ்ந்தது என்ற போதிலும் அவர்களின் நாட்காட்டி மற்றும் சில வரலாற்று சான்றுகளை வைத்து உலகம் அழியப் போகின்றது என்ற அச்சத்தில் பலர் நாட்களைக் கழிப்பது சற்று வேதனைக்குரிய விடயமே!

பேஸ்புக்கில் ஈரானிய தலைவர் ஹாமினி : தொடரும் மர்மம்! 	By irfan sanasஈரானின் தலைவரான அயதுல்லா அலி ஹாமினியின் பெயரில் தற்போ...
26/12/2012

பேஸ்புக்கில் ஈரானிய தலைவர் ஹாமினி : தொடரும் மர்மம்!


By irfan sanas

ஈரானின் தலைவரான அயதுல்லா அலி ஹாமினியின் பெயரில் தற்போது பேஸ்புக்கில் பக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பக்கத்தில் ஹாமினியின் படங்கள் பலவும் பகிரப்பட்டுள்ளன. மேலும் இப்பக்கமானது Khameni.ir இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



பேஸ்புக்கில் மட்டுமன்றி டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ரகிராம் தளங்களிலும் அயதுல்லா அலி ஹாமினியின் பெயரில் கணக்குகள் உள்ளன.

அனைத்து தளங்களிலும் அவர் தொடர்பான தகவல்கள், படங்கள் மற்றும் அவரின் செய்திகள் என்பன பகிரப்பட்டு வருகின்றன.

ஈரானில் இணையப் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்கள் பலவும் தடைசெய்யப்பட்டுள்ளன.



இந்நிலையில் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஹாமினியின் பெயரில் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையானது ஈரானுக்கு வெளியில் அவரது கருத்துக்களை கொண்டு செல்வதே ஆகுமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் இதனை யார் உண்மையில் உருவாக்கியுள்ளனர் என்பதில் இன்னும் மர்மம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹாமினியின் அலுவலகமே இதனை உருவாக்கியிருக்கக்கூடுமென ஒரு சாரார் தெரிவித்து வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் சிலர் இதனை ஆரம்பித்து இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

தற்காலத்தில் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பிரபலங்களின் பெயரில் பல உத்தியோகபூர்வமற்ற பக்கங்கள் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் சில பக்கங்கள் மற்றும் கணக்குகளினால் பல சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கிலிருந்து 84 பணியாளர்கள் நாடு திரும்பினர் 	By irfanமத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்...
26/12/2012

மத்திய கிழக்கிலிருந்து 84 பணியாளர்கள் நாடு திரும்பினர்


By irfan

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த பணியாளர்கள் பலர் இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

கட்டாரிலிருந்து 12 பேரும், குவைட்டிலிருந்து 22 பேரும், சவுதியிலிருந்து 50 பேருமென மொத்தமாக 84 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ள நிலையிலேயே அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பின்னர் இவர்களை தத்தமது சொந்த இடங்களுக்கு அனுப்பியதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Address

School Road Semmanodai 07 Valaichenai
Batticaloa
00974

Telephone

66456779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irfan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category