Kaizen Books

Kaizen Books educational books and e learning accessories provider

தமிழ் மொழி மூலம் MS WORD & MS POWERPOINT PRESENTATION கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம்What will you learn in this course ?🖥️...
05/06/2021

தமிழ் மொழி மூலம் MS WORD & MS POWERPOINT PRESENTATION கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம்

What will you learn in this course ?🖥️

📑Microsoft Office Word
📑 Microsoft Office PowerPoint
📑 Microsoft Excel

🔥 EXTRA FREE BONUS SESSIONS 🔥

📑 Zoom Online Teaching Tips and Tricks
📑 Using Google forms
📑 Easy ways to Type in Tamil ⌨️
📑Google Search 🔍 - Tips and Tricks
📑 Easy ways to design your posters and graphic designs by free tools

Online Classes Via Zoom

⏳30+ Hrs of online learning with hands on Tutes.

‼️Each class is restricted for less than 20 Members, for more personalized attention

⁉️ Separate classes can be arranged for ladies and Gentlemen

For further details please send WhatsApp message to 0764230208

How to remember things quickly, a practical method to improve your memory power 🧠
24/05/2021

How to remember things quickly, a practical method to improve your memory power 🧠

How To Remember 20 Things Within 1 Minute ...

Success without happiness is vanity 🎈
24/05/2021

Success without happiness is vanity 🎈

24/05/2021
GOOD STUDENTS VS SELF LEARNERS 💢
04/01/2021

GOOD STUDENTS VS SELF LEARNERS 💢

9 Habits of Unsuccessful People (Tamil Video Presentation )  07.05 minutes
19/11/2020

9 Habits of Unsuccessful People (Tamil Video Presentation ) 07.05 minutes

Epic Life Hacks Daily | Tamil Motivational Video Speech | Motivational Video | motivational speech for success in life | Subconscious mind reprogramming | Ma...

Doers Vs Thinkers
11/04/2019

Doers Vs Thinkers

05/02/2019

The difference between where you are today and where you’ll be five years from now will be found in the quality of the books you will read” – Jim Rohn -

How to change your day productive ? நீங்கள் தினமும் செய்யவேண்டும் என்று திட்டமிடும் வேலைகளை அந்த நாள் முடிவதற்குள் செய்த...
30/12/2018

How to change your day productive ?

நீங்கள் தினமும் செய்யவேண்டும் என்று திட்டமிடும் வேலைகளை அந்த நாள் முடிவதற்குள் செய்து முடிக்கிறீர்களா? என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள். உங்களுடைய பதில் ஆம் என்றால் நீங்கள் வினைத்திறன் மிக்க ஒரு மனிதராக வாழ்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடியும். இல்லை என்று பதில் அளித்தால் உங்களுடைய வாழ்வு வினைத்திறன் மிக்கதாக இல்லை என்று புரிந்துகொள்ள முடியும்.

பெரும்பாலான நேரங்களில் நாங்கள் ஆசைப்படுகிற அல்லது திட்டமிடுகிற மாதிரி எங்களுடைய நாட்களை நாங்கள் கடத்துவது கிடையாது. பெரிய இலக்குகளை பற்றியும் திட்டங்களைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம் எழுதுகிறோம். ஆனால் நம்முடைய நாளாந்த வாழ்வை அந்த இலக்குகளுக்கும் திட்டங்களுக்கும் ஏற்ப அமைத்து கொள்கிறோமா என்றால் அதில் ஒரு கேள்விக்குறி இருக்கிறது. இந்த இடத்தில்தான் நம்மில் பலர் தோற்றுப் போகிறார்கள்.

பல போது வாழ்க்கையை திட்டமிடுவது இலகுவானது ஆனால் அந்த திட்டத்தை நாளாந்தம் தொடராக நடைமுறைப்படுத்துவது என்பது சிரமமானது. ஏனெனில் திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பதற்கு தொடர்ச்சியான பயிற்சியும் சுயகட்டுப்பாடும் தேவைப்படுகிறது. யாரிடம் இந்த சுயகட்டுப்பாடும் தொடர்ச்சியான பயிற்சியும் இருக்கிறதோ அவர்களுடைய வாழ்வில் பாரிய மாற்றங்கள் கூட மிக இலகுவாக நிகழ்ந்துவிடுகிறது. இந்த மாற்றம் தான் அவர்களை வினைத்திறன் மிக்க மனிதர்களாக மாற்றுகிறது. அது அவர்களுடைய சொந்த வாழ்விலும் குடும்ப வாழ்விலும் தொழில் வாழ்விலும் சமூக வாழ்விலும் என்று வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

நாளாந்த வாழ்வை மிகக் கவனமாக ஒழுங்குபடுத்துவதற்கான சில வழிகாட்டல்களை கீழே குறிப்பிடுகிறேன்.

1. காலையில் எழுந்தவுடன் ஐந்து நிமிடங்களை நீங்கள் அந்த நாளில் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு எழுதிக் கொள்வதற்காக பயன்படுத்துங்கள்.

2. ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் திட்டமிட்டபடி உங்களுடைய வேலைகளை செய்துகொண்டு போகிறீர்களா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

3. இரவில் தூங்கும் முன் ஐந்து நிமிடங்கள் நீங்கள் அந்த நாளில் சாதித்த விடயங்களை பற்றி சிந்தியுங்கள், அத்தோடு அந்த நாளில் நீங்கள் செய்த தவறுகளை இனங்கண்டு அவற்றைத் திருத்திக் கொள்வதற்காக உங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.

4. சமூகவலைத்தளங்களில் நேரங்களை வீணாக செலவழிக்காமல் இருங்கள்.

5. உங்களுக்கு வரும் கடிதங்கள் ஈமெயில் போன்றவற்றை பார்ப்பதற்கும் அவற்றுக்கான பதில்களை அனுப்புவதற்கும் பகல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்.

6. கட்டாயமாக அந்த நாளுக்குள் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகளை எக்காரணம் கொண்டும் பிற்போடாதீர்கள்.

7. ஏதாவது ஒரு வேலையை உங்களால் குறிப்பிட்ட நாளில் செய்ய முடியாமல் போனால் அடுத்த நாளில் அந்த வேலையை முடித்துவிட்டு புதிய வேலைகளை திட்டமிடுங்கள்.

தினமும் நாம் எப்படி எங்களுடைய வேலைகளை திட்டமிட்டு நிறைவேற்றுகிறோம் என்பதில் தான் நமது எதிர்கால வெற்றி தங்கியிருக்கிறது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான ஒரு விடயம் சுய கட்டுப்பாடாகும். இலக்குகளையும் திட்டங்களையும் வகுத்து கொள்வது மாத்திரமல்ல வெற்றி, இலக்குகளோடும் திட்டங்களோடும் நாளாந்தம் நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணிகளை சரிவர நிறைவேற்றி கொண்டு பயணிப்பதுதான் நீண்டகால வெற்றிக்கும் எதிர்கால சாதனைகளுக்கும் வழிவகுக்கும்.

நமது வெற்றியும் எதிர்கால அடைவுகளும் நமது நாளாந்த வாழ்வை நாம் எப்படி கழிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு கவனமாக வாழ்வோம். வளமான ஒரு எதிர்காலத்தை நமக்காக நாமே உருவாக்குவோம்.

~ Sheikh Sabry Muhammad ~

Address

Kurugoda, Akuruna
Akurana
20850

Alerts

Be the first to know and let us send you an email when Kaizen Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category