SmartCity Hyper

SmartCity Hyper Smartcity Hyper , is your source for all Groceries, Clothing, Footwear, Household, Home Appliances, Electronics Etc.,. Experience the Shopping

பிரண்டையின் நன்மைகள்
14/03/2026

பிரண்டையின் நன்மைகள்

பிரண்டையின் நன்மைகள் 🌿🌿
​1. செரிமானம் மற்றும் பசியின்மை:
பிரண்டை செரிமானத்தை தூண்டவும், பசியின்மையை போக்கவும் உதவுகிறது. பிரண்டை துவையல் அல்லது கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.

​2. எலும்பு ஆரோக்கியம்:
எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு முறிவுகளை விரைவாக குணப்படுத்தவும் பிரண்டை பயன்படுத்தப்படுகிறது.

​3. மாதவிடாய் பிரச்சனைகள்:
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்த பிரண்டை உதவுகிறது.

​4. மூல நோய்:
மூல நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு பிரண்டை நல்ல தீர்வாக அமைகிறது.

​5. உடல் எடை குறைப்பு:
பிரண்டை உடல் எடையை குறைக்கவும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது.

​6. சர்க்கரை நோய்:
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கவும் பிரண்டை உதவுகிறது.

​7. வீக்கம் மற்றும் வலி:
பிரண்டை வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. குறிப்பாக, மூட்டு வலி மற்றும் தசை வலிகளுக்கு இது நல்ல மருந்தாக பயன்படுகிறது.

​8. வாய்வு மற்றும் வயிற்று கோளாறுகள்:
வாய்வு மற்றும் வயிற்று கோளாறுகளை குணப்படுத்த பிரண்டை உதவுகிறது.

​9. தோல் நோய்கள்:
தோல் நோய்கள் மற்றும் புண்களை குணப்படுத்த பிரண்டை பயன்படுத்தப்படுகிறது.

​10. நோய் எதிர்ப்பு சக்தி:
பிரண்டை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

​எச்சரிக்கை:
​பிரண்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது.

​பிரண்டையை சமைத்து அல்லது கஷாயம் செய்து மட்டுமே சாப்பிட வேண்டும்.

​பிரண்டையை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்று போக்கு ஏற்படலாம்.

​கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

13/03/2026

50% discount for Laavian Innerware SmartCity Hyper

13/03/2026

Mega sales SmartCity Hyper
Catalog and Branded items Clarence sale

04/03/2026

முளுக்குடும்பத்துக்கும், ஒருவரின் செலவில்

15/01/2026

அன்பு பொங்க
மகிழ்ச்சி என்றும் தங்க
செல்வம் நிலைக்க
முயற்சி பெருக
வெற்றி என்றும் வசமாக
என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

"Happy New Year to our amazing cutomers! 🥂 As we step into 2026, we want to take a moment to thank you for your continue...
01/01/2026

"Happy New Year to our amazing cutomers! 🥂 As we step into 2026, we want to take a moment to thank you for your continued trust and support. You are the reason we do what we do. We can’t wait to share another year of growth and success with you all! 🚀"


காலை மாலை சூரிய ஒளிக்குளியல் பலநோய்களுக்கான மருந்து
21/12/2025

காலை மாலை சூரிய ஒளிக்குளியல் பலநோய்களுக்கான மருந்து

நாம் ஒதுங்கி போகும் சூரிய ஒளி: வைட்டமின் D மட்டுமல்ல, அதற்கும் மேலான பலன்களை கொண்டது.

Dr Arshath Ahamed

சூரிய ஒளி என்பது வெறும் வைட்டமின் D உற்பத்திக்கான ஒரு மூலம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சமீபத்திய அறிவியல் ஆய்வுகள், சூரிய ஒளி மனித உடலில் பல அடுக்குகளில் (multi-system level) நன்மைகளை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

இன்று நம்மில் பலருக்கு இருக்கின்ற தூக்கமின்மை, உடல் அசதி, டிப்ரஷன், பார்வை குறைபாடு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, மூட்டுவலி, தசைப்பிடிப்பு கை கால் உடைவுகள் போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு காரணம் போதிய அளவான சூரிய ஒளி கிடைக்காமல் இருப்பது தான் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நமது தலைக்கு மேலே இருக்கும் சூரிய ஒளிக்கு கீழே ஓடி ஆடி விளையாடி உழைத்து களைத்து திரிவதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம். அதை விட்டு ஓடி ஒழிந்து ஒதுங்கி பாதுகாப்பு பெறுவதற்காக அல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது தான் அடிப்படை.

வைட்டமின் D உற்பத்திக்கு நமது உடலிலேயே ஒரு சொந்த தொழிற்சாலை உள்ள போது அதை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறோம்?

சூரிய ஒளியில் உள்ள UVB கதிர்கள், நம் தோலில் உள்ள 7-dehydrocholesterol என்ற மூலக்கூறை செயல்படுத்தி, வைட்டமின் D3-ஆக மாற்றுகின்றன. இது மாத்திரை அல்லது சப்ளிமெண்ட் மூலம் கிடைக்கும் வைட்டமின் D-ஐ விட, உடல் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இயற்கையான வடிவமாகும். இந்த வைட்டமின் டி எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தைத் தாண்டி , நமது கல்சியம் அகத்துறிஞ்சலை மேம்படுத்துகிறது. கல்சியம் இல்லாத எலும்பு கொங்ரீட் கலவை போடாத கம்பிக்கூடு மட்டும் கட்டிய ப்ளேட் போன்றது. வலிமை இல்லாதது. கொஞ்சம் விசை கிடைத்தால் உடைந்து விடும். தசை வலிமை, சமநிலை (balance) மற்றும் விழுந்து காயமடையும் அபாயம் குறைவதிலும் சூரிய ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக முதியவர்களில் இது மிகவும் முக்கியமான அம்சமாகும்.

சூரிய ஒளி மூலம் உருவாகும் வைட்டமின் D, உடலின் innate மற்றும் adaptive immunity இரண்டையும் ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதனால், சில தொற்றுநோய்கள் மற்றும் நீண்டகால அழற்சி (chronic inflammation) தொடர்பான நோய்களின் அபாயம் குறையக்கூடும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நம்மில் நிறையப் பேருக்கு இருக்கும் அலர்ஜி ஒவ்வாமை போன்ற நோய்கள் உண்மையில் வைட்டமின் டி குறைபாட்டின் வெளிப்பாடுகள் தான் என்பதை டாக்டர்கள் கூட அறிய தவறி விடுகின்றனர்.

சூரிய ஒளி நம் உடலின் circadian rhythm-ஐ ஒழுங்குபடுத்துகிறது. காலை நேர சூரிய ஒளி, melatonin மற்றும் serotonin போன்ற ஹார்மோன்களின் சமநிலையை மேம்படுத்தி, மன அழுத்தம் குறைவதற்கும், நல்ல உறக்கத்திற்கும் உதவுகிறது. இதுவும், ஆரோக்கியமான தூக்கம் அமைதியான மனநிலைக்கும் ஒரு மறைமுக ஆதரவாகக் கருதப்படுகிறது. மனநலம் மற்றும் உறக்கச் சுழற்சி (Sleep–wake cycle) சூரிய ஒளி மூலமே ஒழுங்குபடுத்தப்படுகிறது.

நமது முதுமையைத் தாமதப்படுத்த இந்த வைட்டமின் டி உதவும் என்று நவீன ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் D நம் உடலின் முதுமை செயல்முறையின் வேகத்தைக் குறைக்க உதவக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நம் டி.என்.ஏ-வின் முனைகளில் உள்ள பாதுகாப்புக் கவசங்களை( Telomeres) சிறப்பாகப் பராமரிப்பதற்கு வைட்டமின் டி அவசியம். உடலில் போதுமான அளவு விட்டமின் டி உள்ளவர்களின் டெலோமியர்கள் சுருங்குவது மிகவும் குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த டெலோமியர்கள் நம் குரோமோசோம்களின் முனைகளில் இருக்கும் பாதுகாப்பு உறுப்புகள். நாம் வயதாகும்போது இது இயற்கையாகவே தேய்மானம் அடையும்.
இந்தக் குறைவான சுருக்கமே முதுமையை பிற்படுத்தும். Anti Aging ஆக தொழிற்படும். அது போல இந்த டெலோமியர்கள் சுருங்குவதுதான் இதய நோய் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோய்கள் உட்பட பல வயது தொடர்பான நோய்களுக்கும் காரணம். எனவே, அவற்றைப் பாதுகாப்பதன் மூலம், வைட்டமின் D வெறும் எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்புச் செயல்பாடு என்ற எல்லைகளைத் தாண்டி, செல்லுலார் மட்டத்தில் ஆரோக்கியமான முதுமையை பிற்போட உதவுகிறது என்பது மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு.

சூரிய ஒளி தானே .. வெறும் வைட்டமின் D தானே... என்பதை தாண்டி நாம் நமது உடலை எப்படி‌ பராமரிப்பு செய்கிறோம். சூரிய ஒளியை எப்படி நேசிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அப்படியானால்
உங்களுக்கான கேள்வி விட்டமின் டி சப்ளிமெண்ட் தேவையா?

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் வைட்டமின் D குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். சூரிய ஒளி, கொழுப்பு மீன் மற்றும் வலுவூட்டப்பட்ட பால் போன்ற உணவுகளிலிருந்து இதை நாம் பெற முடியும் என்றாலும், குளிர்காலம் அல்லது சூரிய ஒளி குறைவாகக் கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் பலருக்கு சப்ளிமெண்ட் ஒரு தேவையாக இருக்கலாம்.

வெயில் அதிகமாக உள்ள இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் கூட, இப்போது அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே (Indoor) வாழ்க்கை நடத்துவதால், சூரிய ஒளி அவர்கள் உடலில் நேரடியாகப் படுவதில்லை. மேலும், மதிய நேரங்களில் வெயிலைத் தவிர்ப்பது, தோல் புற்றுநோய் குறித்த அச்சம் மற்றும் அலுவலக வாழ்க்கை முறை போன்ற காரணங்களாலும் பலருக்கு வைட்டமின் D கிடைப்பது சவாலாக உள்ளது.

வைட்டமின் D-ஐப் பெற எளிய வழி
சூரிய ஒளி, கொழுப்பு மீன் மற்றும் வலுவூட்டப்பட்ட பால் போன்ற உணவுகளிலிருந்து வைட்டமின் D பெற முடியும் என்றாலும், பலருக்கு இது போதாது.

உங்கள் உடலில் இயற்கையான வைட்டமின் D உற்பத்திக்கு:

தினமும் காலையில் அல்லது மதிய நேரத்தில் சிறிது நேரம் (உதாரணமாக 20-30 நிமிடங்கள்) வெயிலில் நடப்பது அல்லது உடலில் வெளிச்சம்படுமாறு இருப்பது மிகவும் ஆரோக்கியமானது. இது உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் D-ஐ இயற்கையாகவே உற்பத்தி செய்ய உதவும்.

சுருக்கமாகச் சொன்னால்: சூரிய ஒளி என்பது ஒரு இலவச மருந்து போல. சரியான நேரத்தில், சரியான அளவில் பயன்படுத்தினால், அது எலும்பு ஆரோக்கியம் முதல் மனநலம், நோயெதிர்ப்பு சக்தி, மேலும் செல்லுலார் மட்டத்தில் ஆரோக்கியமான முதுமை வரை பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடும்.

எனவே, வெப்பமான நாடுகளில் வாழ்கிறோம் என்பதாலேயே, “எங்களுக்கு வைட்டமின் D குறைபாடு இருக்காது” என்று நினைப்பது தவறாக இருக்க கூடும். உங்கள் வாழ்க்கை முறை, வெளியில் செலவிடும் நேரம் மற்றும் உடல் நிலையைப் பொறுத்து, சூரிய ஒளி, உணவு மற்றும் தேவையெனில் சப்ளிமெண்ட்—இந்த மூன்றுக்கும் இடையில் சரியான சமநிலையைப் பேணுவது தான் அறிவியல் ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சிறந்த வழியாகும்.

பிற் குறிப்பு - நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், புதிய சப்ளிமெண்ட்டை எடுக்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவரை( சப்ஜெக்ட் தெரிந்த ) கலந்தாலோசிப்பதும் உங்கள் தேவையைப் புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியமானது.

Address

SmartCity Hyper, Main Street
Akkaraipattu

Alerts

Be the first to know and let us send you an email when SmartCity Hyper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SmartCity Hyper:

Share