Pages Book House

Pages Book House Pages book house is books sale

12/05/2026
ஊரில் நம் எல்லோர் வீட்டிலுமேகொல்லைப்புறம் இருக்கிறது.அம்மிக்கல்லு, நாய்க்குட்டி,ஈரச்சாக்கு, விறகுக்கட்டைஎன்று நாம் மட்டு...
11/05/2026

ஊரில் நம் எல்லோர் வீட்டிலுமே
கொல்லைப்புறம் இருக்கிறது.

அம்மிக்கல்லு, நாய்க்குட்டி,
ஈரச்சாக்கு, விறகுக்கட்டை
என்று நாம் மட்டுமே அறிந்த கொல்லைப்புறம்.
நம் நினைவுகளும் அப்படியே.
ஐஞ்சாம் வகுப்பு ராதிகா, பங்கர்,
நல்லூர்க்கந்தன், ஒழுங்கைக் கிரிக்கட்,
பிரேமதாசா போட்ட பீக்குண்டு என அத்தனையும்
நம் பிரத்தியேகக் கொல்லைப்புறத்துக் காதலிகளே.

சில காதலிகளை நினைக்கையில் ஏக்கம் வரும்.
சில பெயர்கள் புன்னகையை வரவழைக்கும்.
ஊருக்குத் திரும்புகையில் மனம்
அவர்களையே தேடி ஓடும்.
பேசினவற்றை மீட்டிப்பார்க்கும்.
பேச மறந்தவற்றைப் பேசி முடிக்கும்.
சிலதுக்குச் செவிட்டைப்பொத்தி
அறையவேணும்போலவும் தோன்றும்.
சிலது நமக்கு அறையும்!

‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’
இவர்களை முத்தமிட நெருங்கையில்
கன்னத்தில் இன்னமும் காயாத ஈரம்.
வேறொன்றுமில்லை - அதுவே
நாம் வாழ்ந்த வாழ்க்கையின் சாரம்.

For order: WhatsApp 0757440505
Pagesbookhouse

15/04/2026

அணிலாடும் முன்றில்..

ரசவாதி📚✨
05/04/2026

ரசவாதி📚✨

04/04/2026

விலை:ரூ.2590

தொடர்புகளுக்கு:
+94757440505 - Whatsapp

Pages Book House
117,Town Mosque Road,
Akkaraipattu-02

புதிய வரவுகள்..அனைத்து புத்தகங்களுக்கும் 10% விசேட கழிவு.
03/04/2026

புதிய வரவுகள்..
அனைத்து புத்தகங்களுக்கும் 10% விசேட கழிவு.

📚ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள்✍️ஜே ஷெட்டிவிலை:ரூ.3200நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது இவற்றைப் புரிந்து க...
01/04/2026

📚ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள்
✍️ஜே ஷெட்டி

விலை:ரூ.3200

நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது இவற்றைப் புரிந்து கொள்வீர்கள்:

• உங்களுடைய வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு அடைவது
•எதிர்மறைகளை எவ்வாறு மீறுவது
•அளவுக்கதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது
•மகிழ்ச்சியைத் தேடினால் ஏன் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது
•சந்திக்கும் அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக் கொள்வது
•நீங்கள் ஏன் உங்களுடைய எண்ணம் அல்லர்
•வெற்றிக்குப் பரிவு இன்றியமையாததாக இருப்பது ஏன்
•இன்னும் பற்பல விஷயங்கள். . .

தொடர்புகளுக்கு
0757440505 - WhatsApp
Pages book house

01/04/2026

பணக்காரத்தந்தை ஏழைத்தந்தை

📚சே குவேரா✍️மருதன்வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் அடிமைத் தளையிலிருந்த...
26/03/2026

📚சே குவேரா
✍️மருதன்

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை.
சே ஒரு தனிமனிதரல்லர்.ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி. பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார்.

க்யூபா விடுவிக்கப்பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன.
ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங்கள் பார்க்கும் விருப்பம் அவருக்கு இல்லை.
உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி ஏந்தி பொலிவியாவுக்குச் சென்றார். அடர்ந்த காட்டில் உட்கார்ந்து புரட்சிப் படையை உருவாக்கினார்.

க்யூபாவுக்காகவும், பொலிவியாவுக்காகவும் சே ஏன் போராட வேண்டும்?
இவருடைய எதிரிகள் யார்?
சி.ஐ.ஏ.வும் இவரை வலை வீசித் தேடியது ஏன்?
இவரைச் சுட்டுக் கொன்றவ ர்கள் யார்?
ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.
சேவின் வாழ்வு மட்டுமல்ல, அவரது மரணமும் இந்தச் செய்தில் யத்தான் உரக்கச் சொல்கிறது.
விடுதலை வேட்கை உள்ள அனைவருக்கும் இந்த நிமிடம் வரை உந்துசக்தியாக விளங்கும் சே குவேராவின் விறுவிறுப்பான வாழ்க்கைவரலாறு இந்நூல்.

தொடர்புகளுக்கு:
Pages book house
0757440505 - WhatsApp

📚100 வாழ்க்கைப் பாடங்கள்✍️உஸ்தாத் அகார் முஹம்மத்விலை:ரூ.1900✨ஆன்மீக வாழ்வையும், லௌகீக வாழ்வையும் போஷித்து, வளப்படுத்தி, ...
25/03/2026

📚100 வாழ்க்கைப் பாடங்கள்
✍️உஸ்தாத் அகார் முஹம்மத்

விலை:ரூ.1900

✨ஆன்மீக வாழ்வையும், லௌகீக வாழ்வையும் போஷித்து, வளப்படுத்தி, வெற்றிகரமாக அமைத்துக் கொள்வதற்கு வழிகாட்டுகின்ற 100 வாழ்க்கைப் பாடங்களை உள்ளடக்கியுள்ளது.

💥அல்-குர்ஆன், ஸுன்னாவையும் ஆரம்ப கால அறிஞர்களின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டே பாடங்கள் எழுதப்பட்டுள்ளன.

அடையாள புருஷர்களாகக் கொள்ளத்தக்க, பிற்பட்ட காலத்திலும். சமகாலத்திலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஆளுமைகளின் வாழ்வும் பணிகளும் பற்றியும் சில பாடங்கள் பேசுகின்றன.

மனித வாழ்வின் யதார்த்தத்தையும் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள, கவலைகள் நீங்க, அச்சம், பயத்திலிருந்து விடுபட மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியையும் உள உறுதியையும் பெற, வாழ்க்கையில் நம்பிக்கைப் பிறக்க, ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு பெற, கெட்ட குணங்களைக் களைய, நற்குணங்களை வளர்த்துக் கொள்ள, அனைத்துக்கும் மேலாக இறைதிருப்தியைப் பெற்றுக் கொள்ளத் தேவையான வழிகாட்டல்களை தெரிந்துகொள்ள- இந்நூலில் பகிரப்பட்டுள்ள வாழ்க்கைப் பாடங்கள் அல்லாஹ்வின் அருளால் நிச்சயம் துணை புரியும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

தனிப்பட்ட முறையிலும் குடும்ப சகிதமும் வாசிப்பதற்கும் தர்பிய்யா அமர்வுகளிலும் பிற சந்திப்புக்களின்போதும் கலந்துரையாடுவதற்கும் உகந்த அற்புதமான ஆக்கங்களை இது கொண்டுள்ளது.

தொடர்புகளுக்கு:
Pages book house
0757440505 - WhatsApp

Address

Akkaraipattu
32400

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+94773595111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pages Book House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pages Book House:

Share

Category