Eelam 87 Book

Eelam 87 Book eelam-87

7010837849
08/05/2022

7010837849

முதல் முயற்சிக்கு முதல் பாராட்டு!=============================உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ...
05/10/2019

முதல் முயற்சிக்கு முதல் பாராட்டு!
=============================

உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழின் முதல் வரலாற்று நூலான " ஈழம்-87" புத்தகத்தை பதிப்பித்தமைக்காக பாராட்டு சான்று வழங்கப்பட்டது. உடல்நல குறைவால் தொடர் சிகிச்சையில் இருப்பதால் எனது மூத்த சகோதரர் திரு.விவேகானந்தன் பெற்றுக்கொண்டார். விழாவிற்கு தலைமை தாங்கி பாராட்டு சான்று வழங்கிய வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் அய்யா கோ.விஸ்வநாதன் அவர்களுக்கும், "ஈழம்-87" புத்தகத்தை தேர்ந்தெடுத்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் அய்யா தமிழ் புகழேந்தி அவர்களுக்கும் நன்றி!

மானுட சமூகத்தில் சரி பாதி எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், வாய்ப்புகள் தரப்பட வேண்டும் எனபதில...
27/07/2019

மானுட சமூகத்தில் சரி பாதி எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், வாய்ப்புகள் தரப்பட வேண்டும் எனபதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மற்ற கட்சிகள் போல மேடைப் பேச்சுக்காக மட்டுமின்றி செயல் முறைப்படுத்திய நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டுகள்!

பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு தர வேண்டும் என்பதில் தாய்ப்பனை உறுதியாக உள்ளது. அதற்க்காக உழைக்கும் அமைப்புகளுக்கு தாய்ப்பனை வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சகோதரி தீபலட்சுமி அவர்களுக்கு "ஈழம்87" புத்தகத்தையும், "பாரதியாழ்" புத்தகத்தையும் வழங்கி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தேன்.

யாழ்ப்பானத்தில் 2 தமிழ் மாணவர்கள் சிங்கள போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்த என்னுடைய முகநூல் பதிவுக்காக #தினகரன் நாளேட்டில் இருந்து நான் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, எனக்காக முதல் ஆதரவு குரல் கொடுத்தவர் நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் #விக்னேஷ் வேலூர் ஆவார்.

நாம் தமிழர் கட்சி க்காகவும், தமிழ் தேசிய கொள்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கும் சகோதரர் #விக்னேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்!!!

தமிழர் உலகத்தில் "ஈழம்-87"=========================இம்மாத தமிழர் உலகம் மாத இதழில் "ஈழம்-87"புத்தகம் குறித்த நூல் மதிப்பீ...
31/08/2018

தமிழர் உலகத்தில் "ஈழம்-87"
=========================

இம்மாத தமிழர் உலகம் மாத இதழில் "ஈழம்-87"புத்தகம் குறித்த நூல் மதிப்பீடு வெளியாகியுள்ளது. சிறப்பான நூல் மதிப்பீடு வழங்கிய மரியாதைக்குரிய அய்யா தமிழ் புகழேந்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. குறிப்பாக "மறம்" என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கியுள்ளார்.

#ஈழம் #ஈழம்87 #பிரபாகரன் #லோகேஷ் #தாய்ப்பனை

பாசமிகு அண்ணன் கவிஞர் சிநேகனுடன் அவர்களுடன் சந்திப்பு...  #ஈழம்  #ஈழம்87  #பிரபாகரன்  #லோகேஷ்  #தாய்ப்பனை  #தமிழீழம்  #க...
24/07/2018

பாசமிகு அண்ணன் கவிஞர் சிநேகனுடன் அவர்களுடன் சந்திப்பு...

#ஈழம் #ஈழம்87 #பிரபாகரன் #லோகேஷ் #தாய்ப்பனை #தமிழீழம் #கவிஞர்சிநேகன் #பிக்பாஸ்

சிலர் கேட்டால் உதவுவார்கள், சிலர் கேட்டாலும் உதவமாட்டார்கள். ஆனால் , "நம் வாழ்வு" இதழின் முதன்மை ஆசிரியரான அருட்பணி குடந...
16/07/2018

சிலர் கேட்டால் உதவுவார்கள், சிலர் கேட்டாலும் உதவமாட்டார்கள். ஆனால் , "நம் வாழ்வு" இதழின் முதன்மை ஆசிரியரான அருட்பணி குடந்தை ஞானி அவர்கள் நான் கேட்காமலேயே "ஈழம்-87" புத்தகத்துக்கு நூல் மதிப்பீடு வழங்கியுள்ளார்.

சில நண்பர்கள் அலைபேசியில் தகவல் கூறிய பிறகே எனக்கு தெரியவந்தது. சாதி, மதம், குழு அரசியலை தாண்டி ஈழத்துக்கான உரிமை குரல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அய்யா உணர்த்தியுள்ளார். நன்றியை கூட எதிர்பார்க்காமல் நூல் மதிப்பீடு வழங்கிய மரியாதைக்குரிய அருட்பணி குடந்தை ஞானி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

#ஈழம் #ஈழம்87 #பிரபாகரன் #லோகேஷ் #தாய்ப்பனை #நம்வாழ்வு

சில மனிதர்கள் பழகுவதற்கு கடினமாக இருப்பார்கள். அவர்களிடம் இருந்து நாம் ஒதுங்கிவிடுவதும் உண்டு... ஆனால், ஓர் எழுத்தாளனை வ...
14/07/2018

சில மனிதர்கள் பழகுவதற்கு கடினமாக இருப்பார்கள். அவர்களிடம் இருந்து நாம் ஒதுங்கிவிடுவதும் உண்டு... ஆனால், ஓர் எழுத்தாளனை விட்டு செல்ல முடியாது. அப்படி விட்டு சென்றால் சமூகத்தில் இன்னொரு முகத்தை நாம் புறக்கணிக்கிறோம் என்றே பொருள்.

மூத்த எழுத்தாளர் மரியாதைக்குரிய அய்யா கோவி.மணிசேகரன் (91) அவர்களுடன் நீண்ட நேர சந்திப்பு.... வரலாற்று நிகழ்வுகள் பல.... விமர்சனங்கள் சில...

#ஈழம் #ஈழம்87 #பிரபாகரன் #லோகேஷ் #கோவிமணிசேகரன் #தாய்ப்பனை

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், கணையாழி இலக்கிய இதழின் பதிப்பாசிரியருமான மரியாதைக்குரிய அய்யா ம.இ...
13/07/2018

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், கணையாழி இலக்கிய இதழின் பதிப்பாசிரியருமான மரியாதைக்குரிய அய்யா ம.இராசேந்திரன் அவர்களுடன் சந்திப்பு.....

சினிமாவை பார்ப்பதில் அரசியல், சமுகத்தை தாண்டி இலக்கிய கண்ணோட்டத்தில் பார்ப்பது, சிந்திப்பது, கருத்துருவாக்குவது குறித்த நீண்ட நேர பேச்சு பயனுள்ளதாக இருந்தது.

#ஈழம் #ஈழம்87 #பிரபாகரன் #லோகேஷ் #தாய்ப்பனை

"வாழ்க", "ஒழிக" கோஷங்களை போட்டுக்கொண்டு நானும் உணர்வாளந்தான் என கூட்டம் கூட்டமாக திரியும் மந்தை சிந்தனையுடையவர்களின் மனச...
09/07/2018

"வாழ்க", "ஒழிக" கோஷங்களை போட்டுக்கொண்டு நானும் உணர்வாளந்தான் என கூட்டம் கூட்டமாக திரியும் மந்தை சிந்தனையுடையவர்களின் மனசாட்சியை தனது எழுத்தம்பினால் துளைத்திருக்கிறார் மரியாதைக்குரிய அய்யா பரணிப்பாவலர் அவர்கள்...

அரசியல் தத்துவத்தை ஊடகம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று ஆணித்தனமாக வலியுறுத்தியுள்ளார். "ஈழம்-87" புத்தகத்துக்கு மதிப்புரை வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!

ம.லோகேஷ்,
பதிப்பாளர், தாய்ப்பனை

#ஈழம் #ஈழம்87 #பிரபாகரன் #புகழ்ச்செல்வி #லோகேஷ் #தாய்ப்பனை

இம்மாத உயிர்மை இதழில் "ஈழம்-87" புத்தகம் குறித்த நூல் மதிப்பீடு வெளியாகியுள்ளது. சிறப்பாக எழுதிய மரியாதைக்குரிய அய்யா பா...
04/07/2018

இம்மாத உயிர்மை இதழில் "ஈழம்-87" புத்தகம் குறித்த நூல் மதிப்பீடு வெளியாகியுள்ளது. சிறப்பாக எழுதிய மரியாதைக்குரிய அய்யா பாமரன் அவர்களுக்கு பிரசுரித்த மரியாதைக்குரிய அய்யா மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

ம.லோகேஷ்,
பதிப்பாளர், தாய்ப்பனை.

#ஈழம் #ஈழம்87 #பிரபாகரன் #உயிர்மை #மனுஷ்யபுத்திரன் #தாய்ப்பனை #லோகேஷ்

இம்மாத அந்திமழை இதழில் "ஈழம்-87" புத்தகம் குறித்த நூல் மதிப்பீடு பிரசுரமாகியுள்ளது. சிறப்பாக எழுதிய மரியாதைக்குரிய அய்யா...
04/07/2018

இம்மாத அந்திமழை இதழில் "ஈழம்-87" புத்தகம் குறித்த நூல் மதிப்பீடு பிரசுரமாகியுள்ளது. சிறப்பாக எழுதிய மரியாதைக்குரிய அய்யா என்.அசோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

ம.லோகேஷ்,
பதிப்பாளர், தாய்ப்பனை.

#ஈழம் #ஈழம்87 #பிரபாகரன் #லோகேஷ் #அந்திமழை

Address

No :64, Amman Nagar, Melmonavoor
Vellore
632010

Telephone

+917010837849

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eelam 87 Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eelam 87 Book:

Share

Category