06/01/2020
சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு
சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:
சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.
1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)
2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)
3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)
4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)
5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).
மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும். பால் உற்பத்தி கூடிக்கொண்டே போகும் என்பதும் உறுதி தான்.இந்துஸ்தான் கால்நடை தீவனங்கள் மூலம், உங்கள் பசுவின் நல்ல ஆரோக்கியம் குறித்து நீங்கள் உறுதியாக நம்பலாம்! நாங்கள் 100% இயற்கை கால்நடை தீவனங்களை வழங்குகிறோம் (யூரியா இல்லை / மொலாசஸ் இல்லை) தயாரிக்கிறோம். மேலும் விவரங்களுக்கு, http://hindhusthaan.in ஐப் பார்வையிடவும். ஆர்டர் செய்ய +91 - 7339196078. ஆதாரம் : https://pannaiyarthottam.wordpress.com