03/06/2020
#தேனீக்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பு:
#தூயதேன் #மகரந்தச்_சேர்க்கை
தேனீக்களோட வாழ்க்கை முறையைப் பார்த்தா, 'நாங்கள் ஆறறிவ படைச்சவங்கப்பானு சொல்லிக்கறதுக்கே நாம் யோசிப்போம். #ஒரு_கூட்டிலிருக்குற #ஆயிரக்கணக்கான_தேனீக்கள்ல #ஒவ்வொரு_வேலைக்கும் #ஒவ்வொரு_குழுவை_அமைச்சு, #மனுஷனைவிட_அபாரமா #செயல்படுத்துங்க_தேனீக்கள். கூட்டிலிருந்து எந்தத் திசையில, எவ்வளவு தூரத்தில், எந்தப் பூவுல தேன் இருக்குதுங்கிறதைப் பார்த்து வந்து, அதை நடன மொழிளில சொல்றதுக்காக செய்தித் தொடர்புக் குழு: சொல்ற தகவலைப் புரிஞ்சிகிட்டு, அதுங்க சொன்ன திசையில போயி, தேனை எடுத்து வர்ற பொருள் சேகரிக்கும் குழு: தேனை எடுக்கப் போய், குறிப்பிட்ட பூவுல உட்கார்ந்ததுமே அதுல இருக்கற ஏதாவது ஒரு விஷயத்தால (ரசாயனங்கள் உள்ளிட்டவை) உடம்பு சரியில்லாம போயிடற தேனீக்களுக்கு வைத்தியம் பாக்குற மருத்துவக் குழு: மருத்துவத்துக்கும் பயனில்லாம இறந்து போற தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறப்படுத்தற துப்பரவு குழு: இளம் தேனீக்களை பராமாிக்கற தாதிக்கள் குழு... இப்படி ஒரு ஒழுங்கோட தேனீக்கள் வாழற வாழ்க்கையைப் பார்த்தா, 'நாமெல்லாம் சும்மா...?,னு வாய்விட்டு உங்களையும் அறியாம கூப்பாடு போட்டுடுவீங்க!
#ஒரு_கூட்டுல_ஆயிரக்கணக்கான #தேனீக்கள்_இருந்தாலும்_ராணீத் #தேனீ_ஒரே_ஒரு_ஆண்_தேனீயுடன் #ஒரே_ஒரு_முறை_மட்டுமே_கூடி,
#வாழ்நாள்_முழுவதும்_முட்டையிடும்ராணியுடன்_கூடின_அந்த_ஆண்
#தேனீ_உறவு_முடிஞ்சதும் #இறந்துடும். இப்படியொரு ஒழுங்கு, அதுகளோட வாழ்க்கையில இருக்கறதைப் பார்த்தா அசந்து போயிடுவீங்க!
#இப்படியெல்லாம்_கட்டுப்பாட்டோட #வாழற_அந்த_தேனீக்_கூட்டம், #முழுக்க_முழுக்க_வாழறது #தனக்காக_இல்லீங்க....
#உங்களுக்கு_எங்களுக்கு_இன்னும் #ஊருபட்ட_அளவுல_கிடக்கற_பல #ஜீவராசிகளுக்குனுதான்_அதுங்களோட_காலம்_கரையுது. அதாவது அயல் மகரந்தச்சேர்க்கை மூலமா தாவர இனங்களை வாழ வைக்குது. ஆடு, மாடு, மனுஷன், புழு, பூச்சினு பல ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கறதே இந்த தாவரங்களாலதானே!
அதை விவசாயம்கிற பேருல நாம ஒரு தொழிலாக்கி, காலகாலமா செய்துகிட்டிருக்கோம். உலகத்துல இருக்கற அதி உன்னதமான புனிதத் தொழில்ல, முதல்ல இருக்கற ஒரு தொழில்னா... தேனீக்கள் செய்ற மகரந்தச்சேர்க்கையைச் சொல்லலாம். கிட்டத்தட்ட அதுக்கு இணையானதுதான், நாம செய்துகிட்டிருக்கற விவசாயத் தொழில். இது ரெண்டும் இல்லைனா, மனுஷ மக்க மட்டுமில்லீங்க... எந்த ஜீவராசியுமே இங்க உயிா் வாழ முடியாது. அதனால, தேனீப்பூச்சிகளை இந்த உலகத்துல இருக்கற ஒவ்வொரு ஜீவனுமே கைதொழணும் சூாியனுக்கு இணையா..!
ரொம்பா நாளா பூவெடுக்காத மரங்களுக்கு பக்கத்துல தேன் பெட்டியை வச்சா, கொஞ்ச நாள்லயே அந்த மரம் பூவெடுக்கும். அது கொஞ்ச, கொஞ்சமா சோ்த்து வைக்கிற தேனும் நமக்குக் கிடைக்கும். இப்படி மகசூலை அதிகாிச்சு, தேன்ங்கற அற்புதமான அமுதத்தையும் கொடுத்து, நமக்காகவே வாழற தேனீக்களுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவங்களா இருக்குணும். ஆனால் பயிா்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கறேன் போ்வழினு, அந்த தேனீக்களை எல்லாம் பரலோகம் அனுப்பிக்கிட்டிருக்கோம். இதுதான் நன்றிக்கடனா?
#விவசாயம்காப்போம் #இயற்கைவிவசாயம் #நாட்டுவிதைகள் #வீரியமானவிதைகள் #நஞ்சில்லாவிவசாயம் #காப்போம் #இயற்கைதேன்தேன்பண்ணை
சுத்தமான தேன் தேவையான எனில் எங்களை தொடர்பு கொள்ளவும்.
அம்ருதா தேன் பண்ணை சேலம்.
9600312579