PS.venkatesan

PS.venkatesan pudukkottai

31/12/2025
10/01/2025

😁🤣டாக்டருக்கும் ஆக்டருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொ`ல்லுவாங்க!

😁🤣 சிவகாசிக்கும்
நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!

😁🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILES அ உட்கார்ந்து பார்க்கணும்.

PILES க்கு பார்த்து உட்காரணும்.

😁🤣 செல்போனுக்கும்
மனிதனுக்கும் என்ன
வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

ஓவ்வொரு இளைஞனின்
மன உளைச்சலுக்கும்
காரணம்?

மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்!

😁🤣 வசதி இல்லாதவன்
ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

😁🤣 ஆண்களை
அதிக தூரம் நடக்க வைக்கும்
விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!

😁🤣 என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது

பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்

சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.

😁🤣 கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்.

எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்..

🍅 *சிரித்து சிந்தியுங்கள்
இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள்* .🍅

https://youtu.be/9-b9Leumjto?si=FYDbOS4YFzPeWnnX
02/01/2025

https://youtu.be/9-b9Leumjto?si=FYDbOS4YFzPeWnnX

ஒளிரும் வளர்மதி இலக்கியத் திங்களிதழ் புதுக்கோட்டையில் இருந்து வெளிவருகிறது இதன் தேவைப்படுவோர் 7094000253 பெண்ணிற்....

...எனக்குப்பிடித்த கவிதைகள்1. "ரேசன் கடைக்காரருக்குகுழந்தை பிறந்தது....எடை குறைவாக...!"2. "வராந்தாவிலேயேஇருந்தவயதான தந்த...
28/12/2024

...எனக்குப்பிடித்த கவிதைகள்
1. "ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது....
எடை குறைவாக...!"

2. "வராந்தாவிலேயே
இருந்த
வயதான தந்தை....
இறந்த பின்
ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்...!"

3. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”

4. " புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும்
சுதந்திரத்தை...."
- நா. முத்துக்குமார்.

5. " பறித்த மலரை
ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?
கல்லறையில் வைத்தாலென்ன?
மலருக்கென்னவோ
பறித்ததுமே வந்துவிட்டது
மரணம் ! "

6. “சர்க்கரை இல்லை...
கொழுப்பு இல்லை...
எஜமானரோடு
வாக்கிங்
போகுது
ஜிம்மி...!”

7. "வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...?"
-- மு. மேத்தா.

8. "ஒவ்வொரு முறையும் அவன் அவளை
பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம்
திரும்பவும் அவர்களை
ஒன்று சேர்த்து வைக்கிறது
ஹோட்டல் சாம்பார்!"
--S. செல்வகுமார்

9. "பேருந்தில்
சிதறுகிறது நாணயங்கள்....
தேடலுக்குப்பிறகு
கிடைத்தன....
சில நாணயங்கள்
தொலைந்தன...
சிலர் நாணயங்கள்...!"
-ப. உமாமஹெஶ்வரி.

10. "பேற்றின் வலியோடு
அலறும் குரலில்
இணைந்தே ஒலிக்கிறது
என் நிர்வாணத்துக்கான
அழுகையும்...!"
-- அ. வெண்ணிலா.

11. "கோழித்திருடனை
ஜெயில்ல போட்டாங்க...
ஜெயில்ல அவனுக்கு
கோழிக்கறி போட்டாங்க..!"
-- ஒப்பிலான்.

12. "மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள் …
மணவாளன் அறிவான் …
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகம் அறிவான்...!'
-- கவிஞர் தமிழன்பன்.

13. "காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"
- நா. முத்துக்குமார்.

14. "உடைந்த பொம்மை
அழாத குழந்தை
கவலையோடு அப்பா..!"
-- சிவா.

15. பிள்ளையார் சுழி
"ஆற்றங்கரைப்
பிள்ளையாருக்கு
கிராமத்துப்
பெண்டுகள் மீது
கோபமோ கோபம்.
ஆண்டவனாய்
என்னை
வணங்காவிட்டாலும்
பரவாயில்லை.
ஒரு ஆண் பிள்ளையாய்
நடத்தக்கூடாதா?
குளித்துவிட்டு வந்து
ஈரப்புடவையை
என் பக்கம் திரும்பி நின்றா
மாற்றிக் கொள்வார்கள்.
சீச்சீ!"

தொகுப்பு :::: பொன்இதழ் பிரபுலிங்கம்

Cute
26/12/2024

Cute

Address

புதுக்கோட்டை
Pudukkottai
622003

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+17094000253

Website

Alerts

Be the first to know and let us send you an email when PS.venkatesan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PS.venkatesan:

Share