Safiyya Traders Book Store - General Books

Safiyya Traders Book Store - General Books Safiyya Traders Book Store நாகர்கோவில், கோட்டார் வட்ட?

*சின்ன அரயத்தி*(சாகித்திய அக்காதெமி, கேரள சாகித்திய அக்காதெமி விருதுகள் பெற்ற நாவல்)வகைமை:  #நாவல்  #விளிம்புநிலை_மக்கள்...
16/08/2020

*சின்ன அரயத்தி*
(சாகித்திய அக்காதெமி, கேரள சாகித்திய அக்காதெமி விருதுகள் பெற்ற நாவல்)

வகைமை: #நாவல் #விளிம்புநிலை_மக்கள்

ஆசிரியர்: நாராயணன்

பதிப்பகம்: காலச்சுவடு

பக்கங்கள்: 280

விலை *₹250*

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621/9790411844
E-mail: [email protected].
*Facebook:* https://m.facebook.com/safiyyatradersgeneralbooks/?tsid=0.014401352812437596&source=result
*Join us in Telegram:*
https://t.me/safiyya_traders_book_store

கேரளத்தின் ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது.

இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரிக சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரே இதை எழுதியிருக்கிறார் என்பது இந்த நாவலுக்கு அனுபவத்தின் ஈரத்தையும் உண்மையின் தெளிவையும் அளிக்கிறது.

சாகித்திய அக்காதெமி, கேரள சாகித்திய அக்காதெமி பரிசுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம்.

*** ★ ***

கேரள சாகித்ய அகாதமி விருதுபெற்ற *கொச்சரயத்தி* என்னும் நாவல், கேரளத்தின் ஆதிவாசி சமூகத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதாகும்.

‘ஆதிவாசி இலக்கியத்தில் தலித்திய பார்வை’ என்ற தலைப்பில் பி.கே.போக்கர் 'தேசாபிமானி’ வார இதழில் எழுதிய கட்டுரை இந்நூலின் முன்னுரையாக அமைந்துள்ளது.

ஆதிவாசிகள் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் பி.கே.போக்கர், “கேரளத்தைப் பொறுத்தமட்டில் மலையாளிகளின் தனித்துவ உணர்வுகளிலிருந்து அன்னியப்பட்ட ஒரு மக்கள் பிரிவினர் இன்றும் இருந்து வருகிறார்கள். அவர்கள்தான் ஆதிவாசிகள் சமூகம். அவர்களது வாழ்க்கையும் மொழியும் இன்றும் வேறுபட்டு நிற்பது மட்டுமல்ல, அவற்றுக்கேயான தனித்துவ அழகையும் கொண்டிருக்கின்றன.
ஆதிவாசிகளின் வாழ்க்கையும் அனுபவங்களும் மேன்மைகளும் வித்தியாசமானவை மட்டுமல்ல, இயற்கையின் பேரிடர்களையும் அது எதிர்கொள்கிறது” என்கிறார்.

இந்நாவலில், ஆதிவாசி மலையரையச் சமூக மக்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை முறைகள், அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள், சுரண்டல்கள், அவர்கள் நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தல் என அனைத்தையும் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர்.

“நூறு வருடங்களுக்கு முன் கேரளீய சமூகம் நுழைந்த நவீன வாழ்க்கைச் சூழலுக்கு ஆதிவாசிகள் சமூகம் நுழையத் துவங்கும்போது ஏற்படுகிற உத்வேகமான நிகழ்வுகள்தான் நாவலில் வெளிப்படையாகவும் உள்ளடங்கியும் தென்படுகின்றன” என்கிறார் பி.கே.போக்கர்.

இயற்கையுடன் ஒன்றி வாழும் ஆதிவாசிகள் சமூகம் அதோடு போராடுவதும் இயற்கையை வென்று வாழும் மக்களுக்கு மனிதர்களே எதிரிகளாக வருவதும் தங்கள் சமூகத்தைத் தவிர எந்த மக்களுடனும் அவர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பாததும் அதற்குக் காரணமாகத் தங்களைப் பிறர் ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயமும் சாதி சமய நம்பிக்கைகளிலிருந்து விலக மறுப்பதும் நவீனத்துவத்தைக் கண்டு தயங்குவதும் என்று இந்நாவல் முழுதும் மலையரையர்களைக் குறித்த பதிவுகள் நிறைந்து கிடக்கின்றன.

ஒதுக்கப்பட்ட மக்களாகப் பார்க்கப்படுகின்ற ஆதிவாசி சமூகத்தைச் சார்ந்த மக்கள் இயற்கை, நோய் இவற்றை வென்று வாழ்ந்தாலும் உயர்சாதி மனிதர்கள், அதிகாரிகள், சட்டங்கள், வியாபாரிகள், வரி வசூலிப்பவர்கள் ஆகியோரால் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம்.

இம்மக்களைத் தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் எவரும் மனிதர்கள் என்ற அங்கீகாரத்தைக்கூட இவர்களுக்குத் தர மறுக்கின்றனர்.

ஆதிவாசி சமூகம் தங்கள் பழைய நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் குலைத்து நவீனத்துவத்துக்கு ஆட்பட முயலும்போதும் ஆட்படும்போதும் எந்தெந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை அந்தச் சமூகத்திலிருந்து வந்த, அந்தச் சூழ்நிலைகளை எதிர்கொண்ட எழுத்தாளர் என்ற நிலையில் அவரால் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்நாவலை ஒரு முற்போக்கு இலக்கியம் என்று கூறுவது முற்றிலும் தகும்.

*கல்வியைத் தேடி**தேசியவாதக் கல்வி - எதிர் சமுதாய உந்துவிசைக் கல்வி**தேசிய கல்விக் கொள்கை: 2020 ஓர் எதிர்வினை*வகைமை:  #கல...
16/08/2020

*கல்வியைத் தேடி*
*தேசியவாதக் கல்வி - எதிர் சமுதாய உந்துவிசைக் கல்வி*
*தேசிய கல்விக் கொள்கை: 2020 ஓர் எதிர்வினை*

வகைமை: #கல்வி #இந்திய_அரசியல் #சட்டவியல் #சமூக_நீதி

ஆசிரியர்: லெ. ஜவகர்நேசன்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

ஆங்கில மூலம்: *In search of Education*

விலை *₹490*

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621/9790411844
E-mail: [email protected].
*Facebook:* https://m.facebook.com/safiyyatradersgeneralbooks/?tsid=0.014401352812437596&source=result
*Join us in Telegram:*
https://t.me/safiyya_traders_book_store

இந்திய நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கை மத்திய அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு இது முன்வரைவாக வெளியிடப்பட்டபோதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

அப்போது, 'இது வெறும் வரைவுதான், திருத்தங்களை முன்மொழிலாம்' என்று பசப்பியது பாஜக அரசு.

இலட்சக்கணக்கான திருத்தங்களைப் பல அரசியல் கட்சிகளும் ஆசிரியர், மாணவர் அமைப்புகளும் முன்மொழிந்தன.

ஆனால், எந்தத் திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், முறைப்படி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் இந்தக் கல்விக் கொள்கையை அரசாங்கம் இப்பொழுது அறிவித்துவிட்டது.

பேராசிரியர் ஜவஹர்நேசன் தனது செறிந்த பட்டறிவும் படிப்பறிவும் ததும்பும் *In search of Education* என்ற ஆங்கில நூலை எழுதி இந்த வரைவு அறிக்கையை விமர்சித்தார்.

இந்தியன் யுனிவர்சிட்டி பிரஸ் பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்ட இந்நூல் தமிழகம் முழுக்க பரவலாகக் கவனம் பெற்றது.

புதிய கல்விக் கொள்கை என்பது முற்றிலும் பழமைவாதம், மனுதர்ம விதிகள், சாதி-மத பாகுபாட்டுக் கண்ணோட்டங்கள் ஆகியவற்றால் நிரம்பிய இந்துத்துவ தேசியவாதக் கொள்கையே என்பதை ஜவஹர்நேசன் அவர்கள் அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து இந்நூலில் அம்பலப்படுத்துகிறார்.

*In search of Education* நூல் இப்பொழுது தமிழில் உங்களுக்காக!

*கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம்*வகைமை:  #ஈழம்  #ஊடகம்  #புலனாய்வு_இதழியல்  #கட்டுரைஆசிரியர்: மகா. தமிழ்ப்பிரபாகர...
26/06/2020

*கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம்*

வகைமை: #ஈழம் #ஊடகம் #புலனாய்வு_இதழியல் #கட்டுரை

ஆசிரியர்: மகா. தமிழ்ப்பிரபாகரன்

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள்: 101

விலை *₹100*

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

இலங்கை அரசிடம் 78 மணி நேரம் சிறைபட்டுக் கிடந்த தனது அனுபவத்தையும் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட தருணத்தையும் கண்முன் நிறுத்துகிறார் தமிழ்ப் பிரபாகரன். இவருடைய முந்தைய நூல், புலித்தடம் தேடி.

**

''தமிழ்ப் பிரபாகரன் ஓர் ஊடவியலாளராக இருப்பதால்தான் இந்நூல் உருவாகியிருக்கிறது.

ஊடக முதலாளிகளின் சுயத் தணிக்கை, இழுப்புகள், அழுத்தங்கள் ஆகியவற்றைக் கொண்ட கார்ப்பரேட் ஊடகச் செய்தி அறைகளுக்கு இன்பமளிப்பவராக அவரை ஒருபோதும் நான் கண்டதில்லை.

தமிழ்ப் பிரபாகரன் அடிப்படையில் சுதந்திரமானவராக இருந்திருக்கிறார்.

அதனால்தான் அவர் அதிகாரத்தைக் கேள்வி கேட்பவராக இருக்கிறார்.

மைய நீரோட்ட ஊடகங்களின் அழுத்தத்துக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராக அவர் நீச்சலடிப்பதைப் பார்க்கிறேன்.

இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர், அமைதியிழந்த வடகிழக்கு போன்ற அபாயகரமான மண்டலங்களிலிருந்தும் அவர் துணிச்சலுடன் செய்திகள் வழங்கிவருவதைப் பார்க்கிறேன்.

மற்றவர்கள் எழுப்பத் துணியாத பொருத்தமான கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

மற்றவர்கள் பயணம் செய்ய அஞ்சும் இடங்களுக்கெல்லாம் அவர் செல்கிறார்.

அந்த வகையில், துணிச்சல்மிகு இளம் ஊடகவியலாளராக அவர் திகழ்கிறார்.''

- ராஜேஷ் சுந்தரம் ஊடகவியலாளர்.

*பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்*மூன்றாம் உலக நாடுகளைச் சிதைக்க உளவாளிகள் நடத்திய சதி குறித்த ஆவணம்.வகைமை:  #...
18/06/2020

*பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்*
மூன்றாம் உலக நாடுகளைச் சிதைக்க உளவாளிகள் நடத்திய சதி குறித்த ஆவணம்.

வகைமை: #காலனித்துவம் #ஏகாதிபத்தியம் #நினைவுக்குறிப்பு #சர்வதேச_அரசியல் #இஸ்லாம் #முஸ்லிம்கள்

ஆசிரியர்: ஆலிவர் ஹெம்பர்

பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம்

பக்கங்கள்: 95

விலை *₹90*

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

சதித் திட்டங்களைத் தெரிந்துகொள்வதில் முனைப்புக் காட்டுவது என்பது காலம்காலமாக மனிதர்களுக்கு உவப்பூட்டக்கூடிய ஒரு விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது.

அதனால்தான் இடதுசாரிகள், வலதுசாரிகள் என்றெல்லாம் இல்லாமல் ஏறக்குறைய அனைவருக்கும் சதிக் கொள்கைகள் மீதும் அவற்றின் பின்னணி குறித்த அறிதலின் மீதும் அபரிமித ஈர்ப்பு இருந்துவந்திருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம், உலகம் நெடுகிலும் தனது காலனியை வேர்விடச் செய்ய வேண்டும் எனும் வஞ்சக நோக்கில் ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து நாலா திசைகளுக்கும் உளவாளிகளாக அனுப்பிவைக்கிறது.

அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்!

அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணிகளை எவ்வாறு செவ்வனே செய்து முடித்தார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

அரபு நாடுகள் மீதும் உலகின் ஏனைய நாடுகள் மீதும் ஏகாதிபத்திய நாடுகள் செலுத்தும் ஆதிக்கத்தின் வீரியத்தைப் புரிந்துகொள்ள முற்படுவோருக்கு இந்நூல் ஓர் விளக்கக் கையேடாக விளங்கும்.

பண்பாட்டு அரசியலில் கரிசனைக் கொண்டோர் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு நூல்!

*எண்ணும் மனிதன்*வகைமை:  #நாவல்  #அறிவியல்_புனைவுஆசிரியர்: மல்பா தஹான்பதிப்பகம்: அகல் பதிப்பகம்ஆங்கில மூலம்: *The Man Who...
18/06/2020

*எண்ணும் மனிதன்*

வகைமை: #நாவல் #அறிவியல்_புனைவு

ஆசிரியர்: மல்பா தஹான்

பதிப்பகம்: அகல் பதிப்பகம்

ஆங்கில மூலம்: *The Man Who Counted* போர்ச்சுகீசிய மூலம்: *O Homem que Calculava*

பக்கங்கள்: 224

விலை *₹210*

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621/9790411844
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

புதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது.

பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'.

ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந்துவிடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை மிகுந்துவிட, அதைச் சார்ந்தே இயங்கத் தொடங்குகிறான்.

கணக்கின் அடிப்படையையும் அழகுகளையும் கற்றுக்கொள்கிறான்.

பாக்தாத் செல்லும் வழியில், பாலைவனப் பயணத்தில் இந்நூல் ஆசிரியருடன் அறிமுகம் ஏற்பட்டு, பின் இருவருமாகப் பாக்தாத்தை நோக்கிச் செல்கின்றனர்.

இருவரும் சந்திக்கும் மனிதர்கள், வித்தியாசமான அனுபவங்கள், கணிதப் புதிர்கள், சவால்கள், எண்ணும் மனிதன் அடையும் உயர்வு, என்பதாக விரிகிறது இந்தப் புத்தகம்.

சிந்துபாத்தின் சாகசப் பயணம் போல பெரமிஸ் சமீரின் கணித சாகசங்களை அடுக்குகிறது இந்தப் புத்தகம்.

*Large Print Crosswords*Category:      Author: Eric. SaundersPublisher: Speaking TigerPages: 256Price *₹599**For orders ...
18/06/2020

*Large Print Crosswords*

Category:

Author: Eric. Saunders

Publisher: Speaking Tiger

Pages: 256

Price *₹599*

*For orders contact:*
Safiyya Traders, Puthankudyiruppu,
Parakkai road, Kottar post, Nagercoil.
Mobile: 9500827859/9629554621
Email: [email protected]
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

*போரும் வாழ்வும்*(உலக கிளாசிக் இலக்கியங்கள் வரிசை)3 தொகுதிகள்வகைமை:  #நாவல்  #வரலாறு  #போர்ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்பதிப...
08/06/2020

*போரும் வாழ்வும்*
(உலக கிளாசிக் இலக்கியங்கள் வரிசை)
3 தொகுதிகள்

வகைமை: #நாவல் #வரலாறு #போர்

ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்

பதிப்பகம்: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

ஆங்கில மூலம்: *War and Peace*
ரஷ்ய மூலம்: *Война́ и миръ*

பக்கங்கள்: 2580

விலை *₹2250*

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621/9790411844
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

பிரம்மாண்டமான பொதுப் புத்தியின் சித்திரம் என *போரும் அமைதியும்* நாவலைச் சொல்லலாம். ஆனால், அது ஒரு மகத்தான கவிதை. அதில் விளைவது மானுடம் உருவாக்கிய மிகப்பெரிய இலட்சியவாதங்களில் ஒன்று.

ஆரம்பத்தில் 1801 என்ற தலைப்பில்தான் இதை டால்ஸ்டாய் எழுத ஆரம்பித்திருந்தார்.

இந்நாவலின் பேசுபொருள் நெப்போலியனின் மாஸ்கோ படையெடுப்பு.

உண்மையில் அதைப் பற்றிய பேச்சு எப்போதுமே டால்ஸ்டாயின் குடும்பத்தில் இருந்துவந்தது.

இந்நாவலில் வரும் பல கதைமாந்தர்கள் டால்ஸ்டாயின் முன்னோர்களே எனப் பல வகைகளில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 160 கதைமாந்தர்கள் உண்மையான மனிதர்களாக அவர்களின் பெயர்களிலேயே வருகிறார்கள். குறிப்பிடத்தக்க கதைமாந்தர்கள் 500க்கும் மேல் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

1863ல் முடிக்கப்பட்ட இந்நாவல் 1865ல் வெளியாகியது.

ரஸ்கிய் வெஸ்ட்னிக் என்ற ருஷ்யமொழி வார இதழில் இந்நாவல் *1805* என்ற பெயரில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.

டால்ஸ்டாய் இந்நாவலைப் பல முறை பல வகைகளில் திருத்தியும் சீர்படுத்தியும் எழுதினார்.

*போரும் அமைதியும்* என்ற பெயரில் 1869ல் இந்நாவல் நூலாக வெளிவந்தது.

மூலத்தில் பல வகையான மொழிநுட்பங்கள் கொண்ட நாவல் என்று இது சொல்லப்படுகிறது.

அன்றைய ருஷ்ய உயர்குடிகள் பேசிய போலி பிரெஞ்சு மொழியை நுட்பமாகப் பகடிசெய்து டால்ஸ்டாய் பயன்படுத்தியிருந்தாராம்.

முதலில் பிரெஞ்சிலும் பின்னர் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட *போரும் அமைதியும்* உலகமொழிகள் அனைத்திலும் விரும்பி மொழிபெயர்க்கப்பட்டு கடந்த ஒரு நூற்றாண்டாக உலக சிந்தனையையும் உலக இலக்கியப் போக்கையும் தீர்மானித்த பெரும் படைப்பாகத் திகழ்கிறது.

தமிழில் டி எஸ் சொக்கலிங்கம் மொழியாக்கத்தில் 20 நவம்பர் 1957ல் இந்நாவல் வெளிவந்தது.

தமிழில் வெளிவந்த நாவல்களில் எல்லா வகையிலும் முதன்மையானது என்று எவ்வித ஐயமும் இல்லாமல் லியோ டால்ஸ்டாயின் இந்த பேரிலக்கியத்தைக் கூற முடியும்.

டி.எஸ்.சொக்கலிங்கம் தன் மொழிபெயர்ப்புக்குப் *போரும் வாழ்வும்* என்று பெயர் சூட்டியிருந்தார்.

*போரும் அமைதியும்* தான் உலகில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த நாவல் என்று நினைக்கும் வாசகர்கள் உலகமெங்கும் உண்டு.

டால்ஸ்டாயின் பெரும் நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் ஒட்டுமொத்தத் தன்மைதான். வாழ்வின் முழுமையைச் சித்திரிக்க உதவக்கூடிய கலைவடிவமே நாவல் என்ற புரிதலை மேன்மேலும் வலுப்படுத்தக்கூடியது அது.

அதில் உள்ளது வாழ்வின் ஒரு பெரும் அலை; வரலாற்றின் ஒரு சுழிப்பு.

நெப்போலியன் ருஷ்யாவைத் தாக்கி வென்று, பிறகு தோற்கடிக்கப்பட்டு மீள்கிறான். அந்த ஒரு சுழிப்பில் எத்தனை எத்தனை மனித வாழ்வுகள் சுழற்றியடிக்கப்படுகின்றன; உறவுகளும் பிரிவுகளும் நிகழ்கின்றன; அழிவும் ஆக்கமும் ஒன்றையொன்று பூரணப்படுத்திக்கொள்கின்றன என்று காட்டுகிறார் டால்ஸ்டாய்.

இந்நோக்கம் காரணமாகவே இதற்கு ஒரு கதையை அவர் தேர்வுசெய்யவில்லை. ஒரு கதை இருந்திருந்தால் கதையின் ஒருமைக்காக வாழ்க்கையையும் வரலாற்றையும் ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர வேண்டியிருந்திருக்கும்; வெட்டிச்செதுக்கி அமைக்க வேண்டியிருக்கும்.

இந்த வடிவில் நாவல் அதன் போக்கில் வளர்ந்து விரிந்து ஒரு உயிர்த்துடிப்பான காடுபோல் இருக்கிறது.

ஆகவே, ஒவ்வொரு வாசிப்பிலும் ஒருவர் நமக்குக் கதாநாயகனாக ஆகிறார். ஒரு கதை மையச்சரடாகிறது. புதிய ஒரு நாவல் நம்முன் விரிகிறது.

வரலாற்றை ஒரு விசுவரூப தரிசனமாகக் காட்டும் இப்பெரும் படைப்புக்கு இதற்கு முன்பும் பின்பும் இணையுதாரணங்கள் இல்லை.

இந்தப் பிரமாண்டமான வரலாற்றுச் சித்திரத்தை உயிர்த்துடிப்புள்ள தனிக் கதாபாத்திரங்களின் வாழ்வுச் சம்பவங்கள் மூலம் டால்ஸ்டாய் உருவாக்கிக்காட்டுகிறார் என்பது இரண்டாவது சிறப்பு.

*போரும் அமைதியும்* நாவலின் எந்தப் பக்கத்தைத் திருப்பிப் படித்துப்பார்த்தாலும் உயிர்த்துடிப்புள்ள தீவிரமும் சூட்சுமங்களும் நிரம்பிய சிறுகதை ஒன்றை வாசிக்கும் அனுபவம் நமக்கு ஏற்படும்.

வரலாறு கோடிக்கணக்கான மக்களின் இச்சைகளையும் இயல்புகளையும் இணைத்துக்கொண்டு உருவாகும் பெரும் பிரவாகம் என்று காட்டுகிறது நாவல்.

அந்தப் பிரவாகத்தின் ஒரு சுழிப்பைச் சித்திரிக்கும் டால்ஸ்டாய் ஒவ்வொரு சிறு கதாபாத்திரத்தையும் பிரமிப்பூட்டும் துல்லியத்துடன் படைத்துள்ளார்.

நாவல் முழுக்கத் தொடரும் பெரும் கதாபாத்திரங்களே ஐந்நூற்றுக்கும் மேலாக உள்ளன.

தனித்தன்மைமிக்க ஆளுமையுடன் அவ்வப்போது வரும் கதாபாத்திரங்கள் சிலநூறு.

மின்னல்போல தெரிந்து மறையும் முகங்கள் பலநூறு.

ஆனால், போகிறபோக்கில் சொல்லப்பட்ட, அடையாளமும் தனித்தன்மையும் இல்லாத கதைமாந்தர் என ஒருவர்கூட இல்லை.

இந்நாவலின் மூன்றாவது முக்கியச் சிறப்பு இதன் ஒருமை.

பலநூறு கதாபாத்திரங்களின் வாழ்வில் நிகழும் பல்லாயிரம் நிகழ்வுகள் ஒன்றோடொன்று கலந்து பின்னி ஒருமையை உருவாக்கிக்காட்டுவது ஒரு மகத்தான வாழ்க்கைத் தரிசனம் என்றே கூற வேண்டும்.

******** ★ ********

*மதிப்புரை*

"துயரம், மகிழ்ச்சி, ஆசை, அதிகாரம், துரோகம், பாசம், மரணம் என்று நாலா பக்கமும் பொங்கிவழிந்து பரவும் மனித வாழ்வின் இயக்கம் வழியாக நாம் நகர்ந்து இறுதியில் முடிவை நெருங்கும்போது வாழ்வுகுறித்த ஒரு தரிசனத்தை அடைகிறோம்.

அதன் அடிப்படையில் மொத்த நாவலும் அழகாக ஒருங்கிணைவதைக் காண்கிறோம்.

இந்நாவல் மானுட வாழ்க்கையைப் பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் அழித்து அதன் மேல் பிரம்மாண்டமான ஓர் இலட்சியவாதத்தை நிறுவுகிறது.

பரபரப்பாக வாழ்க்கையைச் சொல்லும் ஆக்கங்கள் உண்டு. ஆனால், வாழ்க்கையின் அசைவின்மையை மாற்றமின்மையை பிரம்மாண்டமான சலிப்பைச் சித்தரித்துக்காட்டிய அற்புதம் இந்நாவல். ஆனால், கொந்தளிக்கும் நிகழ்ச்சிகளால் ஆனது இது."

- ஜெயமோகன்

National Geographic Answer Book10,001 Fast Facts About Our World(Updated Edition)Category:        Author: Kathryn Thornt...
07/06/2020

National Geographic Answer Book
10,001 Fast Facts About Our World
(Updated Edition)

Category:

Author: Kathryn Thornton

Publisher: National Geographic

Price ₹2495

*For Orders Contact:*
Safiyya Traders, Puthankudyiruppu,
Parakkai road, Kottar post, Nagercoil.
Mobile: 9500827859/9629554621/9790411844
Email: [email protected]
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

For anyone who has pondered the vastness of our universe, the rich variety of our planet, and the endlessly fascinating world of knowledge that surrounds us, National Geographic presents this timely volume, now fully updated and expanded.

Exploring a full spectrum of topics, from earth sciences to astronomy, from climate and habitats to human arts and cultures, from ancient history to cutting-edge technology, this meticulously written and extravagantly illustrated book is the ultimate family reference.

நக்சல்பாரி முன்பும் பின்பும்வகைமை:  #மார்க்சியம்  ்கரவாதம்  #விளிம்புநிலை_மக்கள்ஆசிரியர்: சுனிதி குமார் கோஷ்பதிப்பகம்: வ...
07/06/2020

நக்சல்பாரி முன்பும் பின்பும்

வகைமை: #மார்க்சியம் ்கரவாதம் #விளிம்புநிலை_மக்கள்

ஆசிரியர்: சுனிதி குமார் கோஷ்

பதிப்பகம்: விடியல்

பக்கங்கள்: 560

விலை ₹350

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

'இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலை' என்ற பதாகையின் கீழ் போராட்டத்தை முன்னெடுத்த கம்யூனிச இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்து தருகிறது இந்நூல்.

இந்தியச் சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் உருக்கொண்ட சமூக, அரசியல், பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது.

*பாகம் 1*
இந்தியா: நக்சல்பாரிக்கு முன்பு

*பாகம் 2*
நக்சல்பாரியும் பின்பும்

WTO உலக வர்த்தக கழகத்தில் அடகு வைக்கப்பட்ட நமது உரிமைகள்வகைமை:  #இந்திய_அரசியல்  #சர்வதேச_அரசியல்  #வணிகவியல்பதிப்பகம்: ...
07/06/2020

WTO உலக வர்த்தக கழகத்தில் அடகு வைக்கப்பட்ட நமது உரிமைகள்

வகைமை: #இந்திய_அரசியல் #சர்வதேச_அரசியல் #வணிகவியல்

பதிப்பகம்: நிமிர் வெளியீடு

பக்கங்கள்: 64

விலை ₹50

கிடைக்குமிடம்:
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

வளரும் நாடுகளின் அரசியல்வாதிகளோடும் பெருமுதலாளிகளோடும் கைகோத்துக்கொண்டு உலக வர்த்தகக் கழகத்தினூடாக அந்தந்த நாடுகளின் வளங்களை, மனித உழைப்பை, நிலங்களை, சமூக அரசியலைப் பணக்கார நாடுகள் சுரண்டிக் கொழுத்துக்கொண்டிருப்பது இப்பொழுது வாடிக்கையாக ஆகிவிட்டது.

மத்திய பாஜக அரசு இந்திய ஒன்றியத்தின் பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை உலக வர்த்தகக் கழகத்திடம் அடகுவைத்து நமது சுயநிர்ணய உரிமை, தற்சார்புக் கொள்கை ஆகியவற்றுக்கு முரணாக மக்களை இன்று பிச்சைக்காரர்களாகத் தெருவில் அலையவிட்டிருக்கிறது.

விவசாயிகளுக்கான மானியத்தை நிறுத்தியது.

ஏழைகளுக்கும் சம உரிமை, சம வாய்ப்பை வழங்குவதாக இருந்த நமது கல்வியைப் பணக்காரர்களுக்குச் செளகரியமான கல்வியாக அது மாற்றிச் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைத்தது.

இவற்றை எல்லாம் கேள்வி கேட்டால் கேட்பவர்களைத் தேசத்துரோகிகளாகச் சித்தரிப்பது, குண்டர்களை வைத்து தாக்குவது, அவர்கள் மீது வழக்குகள் புனைவது, மதச் சண்டைகளை உருவாக்குவது எனக் காவிகளின் செயல்பாடுகள் நாள்படநாள்பட உக்கிரமடைந்த வண்ணம் இருக்கின்றன.

நாட்டு நலனுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் எதிரான அவர்களின் கொள்கை முடிவுகளையும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் யதேச்சதிகார ஒடுக்குமுறைகளையும் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

துறைமுகம்வகைமை:  #நாவல்  #பண்பாடு  #நாட்டார்_வழக்காறுஆசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்பதிப்பகம்: காலச்சுவடுபக்கங்கள்: 2...
07/06/2020

துறைமுகம்

வகைமை: #நாவல் #பண்பாடு #நாட்டார்_வழக்காறு

ஆசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்

பதிப்பகம்: காலச்சுவடு

பக்கங்கள்: 280

விலை ₹190

*கிடைக்குமிடம்:
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621
E-mail: [email protected].
Facebook:
Instagram: safiyyatraders
*Twitter:*
*YouTube:* Safiyya Traders Book Store

குமரி மாவட்டத்தில் துறைமுகத்தை ஒட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின் கதை.

ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இந்த நாவலின் வெற்றி.

குறிப்பாக, காசீம் சுவற்றில் விழும்போது அந்தச் சுவரில் படிந்திருக்கும் அவன் வாப்பாவின் வாசத்தை உணர முற்படும் இடம் மனதை வலிக்கச் செய்கிறது.

கதை முழுவதும் வலி சுமக்கும் பிம்பங்களை முன்னிறுத்தி நகர்த்துகிறார் ஆசிரியர் தோப்பில்.

வசிப்பு நெடுகிலும் வலி சுமக்கும் மாந்தர்களின் வாழ்நிலைகுறித்த பல விஷயங்களை அறிந்துகொள்ள இந்நாவல் வழிவகை செய்கிறது.

**** ★ ****

*மதிப்புரை*

"நாவலுக்குரிய, இன்னும் சொல்லப்போனால் தொடர் கதைக்குரிய, எந்த வாய்பாடு அம்சமும் இதில் இல்லை.

மாறாக, கலை நயமும் கட்டுக்கோப்பும் மிகுந்துள்ளன.

ஆசிரியரின் கதை எடுத்துரைத்தலில் சுவை இருப்பினும், தலை நீட்டல் ஏதுமில்லை.

கதை நிகழும் சூழல் - காலமும் இடமும் - மிக அழுத்தமுற வெளிப்பட்டிருப்பது இதன் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும்.

அதனை இன்னும் வலிமையாக ஆக்கியுள்ளது, வட்டாரக் கிளைமொழி நடை."

- சு. வேங்கடராமன்.

*தோட்டியின் மகன்*வகைமை:  #நாவல்  #கடைநிலை_மக்கள்  #தலித்தியம்  #சமூக_நீதிஆசிரியர்: தகழி சிவசங்கரப் பிள்ளைபதிப்பகம்: கலச்...
11/05/2020

*தோட்டியின் மகன்*

வகைமை: #நாவல் #கடைநிலை_மக்கள் #தலித்தியம் #சமூக_நீதி

ஆசிரியர்: தகழி சிவசங்கரப் பிள்ளை

பதிப்பகம்: கலச்சுவடு

மலையாள மூலம்: *തോട്ടിയുടെ മകന്‍*
Thottiyude Makan

பக்கங்கள்: 175

விலை *₹175*

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Telegram:* https://t.me/joinchat/AAAAAEnbNe6u7Y0dwvNmnw
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அயராது உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களின் அல்லல்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.

********

நாவல் எழுதப்பட்ட காலம் 1947.

அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்த்திராத களம்: சேரி.

யாரும் கேட்டிராத மொழி: பாமரக் கொச்சை.

எவரும் தோழமைப் பாராட்ட அஞ்சிய, முகம்சுளித்த மனிதர்கள்: தாழ்த்தப்பட்டவர்கள்.

எவரும் வாழ்ந்திராத வாழ்வு: தோட்டிப் பிழைப்பு.

இப்படி, பின்தள்ளப்பட்ட இன்னொரு உலகைப் பொது கவனத்துக்குக் கொண்டுவருகிறது இந்நாவல்.

வெளியுலகுக்குத் தெரிந்திராத அல்லது தெரியவராமல் இருட்டடிப்புச் செய்யப்படுகிற ஓர் இருண்ட வாழ்க்கையினுள் அநாயாசமாகப் புகுந்து வாசகர்களின் உள்ளக் கிளர்ச்சியை உசுப்பிவிடுவதில் நூல் ஆசிரியர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

அதிகாரம், பொருளாதாரச் செழிப்பு, யதார்த்த வாழ்வின் அல்லல்களையும் சவால்களையும் விட்டு தூரப்பட்டிருக்கும் சுகபோக வாழ்க்கை என்று வேறொரு உலகில் திளைத்துக்கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு இந்நூல் ஓர் இன்றியமையாத வாசிப்பு!

சமூக நீதித் தளத்தில் செயலூக்கத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் அன்பர்களால் ரத்தத்தில் உஷ்ணம் ஏறாமல் *தோட்டியின் மகனின்* எந்தப் பக்கத்தையும் இயல்பாகக் கடந்துசெல்ல முடியாது.

Address

புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட்
Nagercoil
629002

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 1pm

Telephone

+919629554621

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safiyya Traders Book Store - General Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safiyya Traders Book Store - General Books:

Share

Category