AbdullahPublications

AbdullahPublications Online Islamic Bookstores

எங்களை பற்றி...

அப்துல்லாஹ் பல்ளிகேஷன்ஸ் மயிலாடுதுறையை பதிவு அலுவலகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

முதல் கட்டப் பணியாக மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா முதலாம் பாகம் ( 14 ஹதீஸ் நூல்களின் தொகுப்பு ) வெளிவந்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் இந்நிறுவனத்தின் சார்பாக இஸ்லாமிய மூலாதார நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிடும் பணிகள் தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது

எமது விற்பனையகம் சென்னை மண்ணடியில் இயங்கி வருகிறது. மறுமை இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

08/03/2026

(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும்போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழிகாட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.

(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!" என்று கேட்பீராக!

[அல்குர்ஆன் 27:62-64]

01/03/2026

"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்" என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்.

அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம்.

வணக்கசாலிகளுக்கு இது அறிவுரை.

இஸ்மாயீல், இத்ரீஸ், துல்ஃகிப்ல் அனைவரும் பொறுமையாளர்கள்.

[அல்குர்ஆன் 21:83-85]

22/02/2026

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்!

அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்!

இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான்.

[அல்குர்ஆன் 33:41-44]

21/02/2026

ஹா, மீம்.

ஐன், ஸீன், காஃப்.

(முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் அல்லாஹ் இவ்வாறே அறிவிக்கிறான். (அவன்) மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

(மனிதர்களின் பாவத்தால்) வானங்கள் அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட முயலும். வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வே மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

[அல்குர்ஆன் 42:1-5]

20/02/2026

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம் கூறி விடுவார்கள்.

அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.

"எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது" என்று அவர்கள் கூறுகின்றனர்.

அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது.

அவர்கள் செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.

[அல்குர்ஆன் 25:63-67]

20/02/2026

இல்யாஸும் தூதர்களில் ஒருவர்.

அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு 'பஅல்' எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா? என்று தமது சமூகத்தாரிடம் அவர் கூறியபோது அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். அவர்கள் (நம்மிடம்) கொண்டு வரப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.

பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

இல்யாஸீன் மீது ஸலாம் உண்டாகும்!

[அல்குர்ஆன் 37:123-130]

19/02/2026

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும்போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

[அல்குர்ஆன் 5:95]

18/02/2026

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது).

[அல்குர்ஆன் 2:185]

16/01/2026

யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.

பாவம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.

[அல்குர்ஆன் 4:110-112]

29/12/2025

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

[அல்குர்ஆன் 102:8]

📒தப்ஸீர் அஸ்-ஸஅதி

இவ்வுலகில் நீங்கள் அனுபவித்த அருட்கொடைகளைப் பற்றி (மறுமையில் கேட்கப்படுவீர்கள்). அவற்றுக்கு நீங்கள் நன்றி செலுத்தினீர்களா? அவற்றில் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றினீர்களா? அவற்றை இறைவனுக்கு மாறு செய்யும் செயல்களுக்கு (பாவங்களுக்கு) பயன்படுத்தாமல் இருந்தீர்களா? (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) அல்லாஹ் உங்களுக்கு இதை விட மேலான மற்றும் சிறந்த அருட்கொடைகளை வழங்குவான்."
"மாறாக, அந்த அருட்கொடைகளைக் கண்டு நீங்கள் ஏமாந்து போய்விட்டீர்களா? அவற்றுக்கு நன்றி செலுத்தத் தவறினீர்களா? சில நேரங்களில் அந்த அருட்கொடைகளைக் கொண்டே அல்லாஹ்வுக்கு மாறு செய்தீர்களா? அவ்வாறு செய்திருந்தால் அல்லாஹ் அதற்காக உங்களைத் தண்டிப்பான். இது குறித்து அல்லாஹ் கூறுகிறான்: '(ஏக இறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில் "உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்" (என்று கூறப்படும்.)[அல்குர்ஆன் 46:20]

27/12/2025

ஒரு முஸ்லிம் தனது சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பிணங்கிக் கொண்டிருப்பது (பேசாமல் இருப்பது) அனுமதி இல்லை. அவர்கள் இருவரும் சந்திக்கும்போது, இவர் அவரைப் புறக்கணிப்பார்; அவர் இவரைப் புறக்கணிப்பார். அவர்கள் இருவரில் சிறந்தவர் யாரெனில், முதன்முதலில் ஸலாம் கூறி பேச்சைத் தொடங்குபவரே ஆவார்.(ஸஹீஹ் அதாப் முஃப்ரத் )

27/12/2025

திண்ணமாக, நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
(அல்குர்ஆன் 102:6)

📒 தப்ஸீர்

உண்மையான மார்க்க அறிவின்மையால், நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்பதை மறுமையில் நேரில் காணத்தான் போகிறீர்கள்.

அதாவது, நீங்கள் அனைவரும் கியாமத் நாளில் நரகத்தின் முன் கொண்டு வரப்படுவீர்கள். இறைநிராகரிப்பாளர்களுக்காக அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ள அந்த கொழுந்துவிட்டெரியும் நரகத்தை, அப்போது நீங்கள் உங்கள் கண்களால் உறுதியாகக் காண்பீர்கள்.( தப்ஸீர் அஸ்- ஸஅதி)

Address

Mayiladuthurai

Alerts

Be the first to know and let us send you an email when AbdullahPublications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share