Likeshop.in

Likeshop.in www.likeshop.in is the world-class online grocery platform, exclusively opened to serve the people in Madurai.

புடவைக்கு எது அழகு? புடவைக்கேற்ற பக்காவான ஹேர் ஸ்டைலோடு சென்றால், நீங்கதான் அங்கு ஹீரோயின். ஃப்ரீ ஹேருடன் இருந்தால் மார்...
18/07/2017

புடவைக்கு எது அழகு?

புடவைக்கேற்ற பக்காவான ஹேர் ஸ்டைலோடு சென்றால், நீங்கதான் அங்கு ஹீரோயின்.

ஃப்ரீ ஹேருடன் இருந்தால் மார்டனாகத் தெரியலாம், ஆனால் இது சற்றே குறைவான கேசம் இருப்பவர்களுக்கு மட்டுமே செட் ஆகும்.

ஸ்டைலாக, பக்கவாட்டில் சற்றே லூசாக சடைப் பின்னி, உருட்டிக் கட்டிய மல்லிகைச் சரம் வைத்து, காதுக்கு ஜிமிக்கி போட்டு, கழுத்துக்கு ஆரம் போட்டால் அழகோ அழகு.

எனினும், புடவைக்கு மிகச் சிறந்த ஹேர் ஸ்டைல் எது என்று ஃபேஷனிஸ்டாக்களிடம் கேட்டால், அவர்கள் வாரிச் சுருட்டிய கொண்டையைத்தான் குறிப்பிடுகின்றனர்.

உங்கள் மொத்த உயரம், கழுத்தின் உயரம் போன்றவைக்கேற்ப உயரமான கொண்டையா, சாதாரணமான கொண்டையா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.

கொண்டை போட்டு பூ ஆரம் அல்லது ஸ்டைலான கற்கள் பதித்த கொண்டை பின்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

கொண்டை போட்டால், உங்கள் பிளவுஸ் டிசைனும் எடுப்பாகத் தெரியும்.

லேயர் கட் செய்த கூந்தலில் சிறிய கொண்டை போட்டு, ஹேர் ஸ்ப்ரே செய்தால், சிறப்பாக இருக்கும்.

டிசைனர் புடவைகளுக்கு நீங்கள் போனிடெயிலை வித்தியாசமாக போட்டாலே பொருத்தமாக இருக்கும்.

புருவத்தை சீரமைப்பதால் பக்கவிளைவுகளா?பெரும்பாலான பெண்கள் முகத்தில் பேஷியல் செய்து கொள்ளாவிட்டாலும், புருவத்தை மட்டுமாவது...
18/07/2017

புருவத்தை சீரமைப்பதால் பக்கவிளைவுகளா?

பெரும்பாலான பெண்கள் முகத்தில் பேஷியல் செய்து கொள்ளாவிட்டாலும், புருவத்தை மட்டுமாவது திருத்தி தங்கள் முகத்தை அழகுபடுத்திக் கொள்கின்றனர். ஆண்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

புருவத்தை சீரமைப்பதால் முகமும் கண்களும் தெளிவாகத் தெரிந்தாலும், அதன் பின் விளைவுகள் பலருக்கு, ஏன் எவருக்குமே தெரிவதில்லை என்பதே உண்மை. புருவம் பிராணன் இயங்கும் இடத்தில் உள்ளது. இறக்கும் தருணத்தில், புருவ முடிகள் தொட்டாலே உதிர்ந்துவிடும்.

அடிக்கடி முடிகளை அகற்றுவதால், உயிர்நிலையோடு சம்பந்தப்பட்ட வர்ம இடங்கள் பலவீனமாக்குகின்றன. காலப்போக்கில், இந்த பலவீனம் பல குணமளிக்க முடியாத வியாதிகளை உருவாக்குகின்றது.

கண்களுக்கு அருகே உள்ள வர்மங்கள் பாதிப்பதால், பிராண சக்தி மிகவும் குறைகிறது. இதனால், பெண்களின் ஆயுள் குறைவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் குறைவான பிராண சக்தி கொண்டவர்களாக உள்ளனர் என்று கண்டறியபட்டுள்ளது.

17/07/2017

தேவையற்ற முடியை அகற்ற தற்போது நவீன லேசர் அறுவை சிகிச்சை போன்றவை இருந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத இயற்கை டிப்ஸ்:

17/07/2017
17/07/2017

வறுத்தெடுக்கும் வெயிலிலும் உல்லாச பயணம்!!!

கோடை விடுமுறையில் வறுத்தெடுக்கும் வெயிலாக இருந்தாலும், பயணம் மேற்கொள்வது மனத்தைத் தளர்வாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பயணத்திற்காக தயார் செய்யும் போது உள்ள உற்சாகம், சில நேரம் பயணம் செய்யும் போது காணாமல் போய்விடுகிறது. உற்சாகமான பயணத்திற்கான டிப்ஸ்:

• இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். பீச் அலையில் விளையாடுவது நன்றாக இருக்கும் என்று சென்றால், கொதிக்கும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதிகமாக சுற்றிப் பார்க்கும் இடங்கள் இருந்தாலும், கோடை வெயில் வறுத்தெடுக்கும். எனவே, அதிகமான மரங்கள் உள்ள மலைஸ்தலங்கள், காட்டுப் பகுதிகள் அல்லது தண்ணீர் உள்ள ஏரிகள் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
• இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள்.
• வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் ஷாப்பிங் மால், தியேட்டர் அல்லது மரங்கள் அடர்ந்த ஜூ ஆகியவற்றில் செலவலியுங்கள்.
• லேசான பருத்தி உடைகள், குடை, தொப்பி, கண்களுக்கு கண்ணாடி, ஸ்கார்ஃப் போன்றவை உங்கள் பெட்டியில் கட்டாயம் இருக்க வேண்டும்.
• சன்ஸ்க்ரீன் லோஷன் கட்டாயம் போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால், தண்ணீரில் கரையாத சன்ஸ்க்ரீன் லோஷன் உபயோகியுங்கள்.
• தெருவோரக் கடைகளில் கிடைக்கும் உணவுகள் எச்சில் ஊற வைத்தாலும், அதிக எண்ணெய், அதிக சூடு அல்லது சுத்தமாக இல்லாத பண்டங்களைத் தவிருங்கள். அதற்கு பதில், வெள்ளரி, தற்பூசணி, இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
• கையில் தண்ணீர் நிரப்பிய பாட்டில் கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள்.
• வியர்க்குரு பவுடர், ஈர டிஷ்யூ, சந்தன பவுடர் அல்லது கற்றாளை ஜெல் போன்றவையும் சமயத்தில் கைகொடுக்கும்.
• வார இறுதி இல்லாமல், செவ்வாய் கிழமை போன்ற நடு நாட்களில் பயணம் செய்தால், பல இடங்களில், கொளுத்தும் வெயிலில் நீளமான வரிசையில் நிற்பதைத் தவிர்க்கலாம்.

17/07/2017

பெண்கள் பளபளப்பான முகப் பொழிவு பெற

பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

3 ஆப்பிள் துண்டுகள், 3 கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.

தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.

முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.

பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

17/07/2017

தண்ணீர் குடிப்பதை எப்படி அதிகப்படுத்துவது? எளிமையான, சுவாரசியமான டிப்ஸ்

ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் பெறுவதற்கு தண்ணீர் அவசியம். பொதுவாக, ஆண்கள் 2.5 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும். அக்கினி வெயில் கொளுத்தும் இந்த வேளையில் அதை அதிகப்படுத்த வேண்டும். எப்படி?

• இரவில் எலுமிச்சை, புதினா, நன்னாரி வேர் அல்லது வெட்டி வேர் போன்றவற்றை தண்ணீரில் போட்டு வைத்தால், மணக்கும் தண்ணீரை அதிகமாக குடிப்பீர்கள்.

• காலை மற்றும் இரவில் சுடுதண்ணீர் அருந்துங்கள். தண்ணீர் குடிப்பதை இது அதிகப்படுத்துவதோடு, ஜீரணத்தையும் சீராக்கும். எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்தால், உடல் எடையும் குறையும்.

• சோடா அல்லது குளிர்பானங்களைத் தவிர்த்து, வெள்ளரி மற்றும் தற்பூசணி போன்ற பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

• எப்போதும், பாட்டில் அல்லது கிளாசில் தண்ணீரை நிரப்பி வையுங்கள், இது தண்ணீரை அதிகமாகக் குடிக்கத் தூண்டும்.

• கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போதும், வண்டியில் செல்லும் போதும், ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அது, நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடித்தீர்கள் என்பதை உங்கள் செல் ஃபோன் ஆப்பிற்கு அனுப்பி விடும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைக் குறிக்க, பீப் ஒலி/ஒளி தந்து ஞாபகப்படுத்தும்.

• ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் அல்லது அதற்கு முன்பு, சில மடக்குகளைக் குடியுங்கள். இது அதிகமாக உணவு உண்பதைக் கட்டுப்படுத்தும்; மற்றும் ஜீரணத்தை அதிகப்படுத்தும்.

17/07/2017

வியர்க்குருவை தடுக்க!

வியர்வை வெளியேறுவது ஆரோக்கியமானதே, ஆனால் கொளுத்தும் வெயிலில் வெளியேறும் அதிகமான வியர்வையால், வியர்க்குரு வருகிறது. கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் ஒரு சிலருக்கு முகத்திலும் வியர்க்குரு தோன்றி, அரிப்பை உண்டாக்குகிறது.

வியர்க்குருவை எப்படித் தடுப்பது?
• அடிக்கடி குளிக்கவும். கெமிக்கல் சோப்புகளை விடுத்து, மூலிகைப் பொடி அல்லது ஹெர்பல் சோப்பைப் பயன்படுத்தவும்.
• வெள்ளரிக்காயை மிக்ஸியில் அடித்து, பாதிக்கப்பட்டுள்ள பாகங்களில் அதைத் தடவி, 15 – 20 நிமிடங்கள் காயவிட்டு, கழுவவும். ஒரு நாளுக்கு 3 முறை இதை கடைபிடிக்கலாம்.
• சோற்றுக் கற்றாழை ஜெல் தடவி, 20 நிமிடங்களுக்குப் பின் கழுவ வேண்டும். இதையும் மூன்று முறை வரை செய்யலாம்.
• சாமந்தி பூவில் இருந்து சாறு எடுத்து வியர்க்குரு மீது தடவவும். கடைகளில், சாமந்தி பூ ஆயின்மெண்ட் மற்றும் பவுடர்கள் கிடைக்கின்றன.
• தரமான சந்தனத்தை பன்னீரில் குழப்பி வியர்க்குருவில் தடவி வர, வேகமாக குணமாகும்.
• அதிகப்படியான வியர்க்குருவால் கஷ்டப்படுபவர்கள் சாதம் வடித்த கஞ்சியை வியர்க்குரு மீது பூசி, சிறிது நேரம் கழித்து குளித்தால் வேகமாக மறையும்.

17/07/2017

கோடையில் சுற்றிப்பார்க்க சுவாரசியமான இடங்கள் - இமயம் முதல் குமரி வரை

கொடைக்கானல், ஊட்டி, தீம் பார்க் போன்ற இடங்களுக்கே மீண்டும் மீண்டும் சென்று போர் அடிக்கிறதா?

உங்கள் குழந்தைகளை குதூகலப்படுத்த வேறு சில சுவாரசியமான இடங்கள்:

ஏற்காடு:
மலைகளின் ராணிக்கும், இளவரசிக்கும் நடக்கும் போட்டிக்கு நடுவே, ஏற்காடு நுழைந்து வெற்றியும் பெறுகிறது. சமீப காலத்தில், ட்ரெக்கிங் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால், சுற்றுலாவில் துறுதுறுவென்று இருக்க நினைப்பவர்கள் இங்கு செல்லலாம்.
அது மட்டுமல்ல, கோடை காலத்திலும் ஆர்பரித்துக் கொண்டிருக்கும் கிளியூர் அருவி கண்களுக்கு மட்டுமல்ல, மனத்திற்கும் குளிர்ச்சி தருகிறது.

மூணார்:
கேரளாவில் 600 மீட்டர் உயரத்தில் உள்ள மூணாறு எப்போதும் சில்லென்ற காற்றுடன் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளது. மூணாரில் இருந்து 12 கி.மீ சுற்றளவில் மலைகள் மட்டுமே சூழ்ந்த மாட்டுப்பட்டி அணையில் போட்டிங் போகலாம். அதுமட்டுமல்ல, டாப் ஸ்டேஷன், எக்கோ பாயிண்ட், ரோஸ் கார்டன், கொலுக்கு மலாய், ஆனைமுடி தேசிய பூங்கள், குந்தால ஏறி, லக்கம் அருவி, ஆட்டுக்கால் அருவி போன்ற இடங்களை உங்கள் குழந்தைகளுக்குக் காட்டி மேற்குத் தொடர்ச்சி மலை அழகை அள்ளிப் பருகச்செய்யுங்கள்.

குல்மார்க்
மலர்களால் சூழப்பட்டுள்ள இந்த அழகிய இடம் காஷ்மீரில் உள்ளது. ஏரிகள், பைன் மரக் காடுகள் நிறைந்த இந்த மலைப் பகுதியில் 13,500 அடி உயரத்தில் 5 கிலோ மீட்டர் தூர பயண அனுபவத்தை கோண்டோலா லிப்ட் என்ற கேபிள் கார் உங்கள் குழந்தைகளுக்குத் தருகிறது. அதுமட்டுமல்ல, காஷ்மீர் பகுதியில் பனிச்சருக்கு விளையாடும் ரிசார்ட்டிற்கும் 400 மீட்டர் உயர கேபிள் காரில் சாகச பயணம் செய்ய உங்கள் குழந்தைகளுடன் தயாராகுங்கள்.

தேக்கடி:
இடுக்கி மாவட்டத்தில், உள்ள தேக்கடி போட்டிங்கிற்கு மட்டும் பேர் போனது என்று நினைக்காதீர்கள். இங்குள்ள பெரியார் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள், மான்கள், சிங்கவால் குரங்குகள், புலிகள், மற்றும் விசித்திரமான பறவைகளையும் உங்கள் குழந்தைகக்குக் காட்டலாம். மூங்கில் தோணியில் அமர்ந்து பயணம் செய்யும் சாகசத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.

கூர்க்:
கர்நாடகாவில் உள்ள கூர்க்கில் ஆர்பரிக்கும் அருவிகள் மற்றும் டிரெக்கிங் செய்யும் வசதிகள் ஆகியவை ஆர்பாட்டமானவை. மேலும், இங்குள்ள தலைக் காவிரிக்கு சென்று ஆறு உற்பத்தியாவதைக் காட்டலாம். இங்குள்ள அப்பே அருவி மனதைக் கொள்ளை கொள்ளும்.

17/07/2017

போர் அடிக்குது என்று சொல்லும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் – கோடை விடுமுறை டிப்ஸ்

கோடை விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மூளைப் பகுதியில் உள்ள ஹிப்போ கேம்பஸ் பகுதியில் காணப்படும் நரம்பு செல்கள் அழிந்து, நினைவாற்றல், கற்றல் திறன்களை பாதிக்கின்றன. மாறாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்:

• அவர்களிடம் அதிகமாகப் பேசுங்கள், இதனால் அவர்கள் நண்பர்கள் சொல்வதைக் கேட்பதை விட நீங்கள் சொல்வதை நம்புவார்கள்.
• கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ஜூ, பறவைகளுக்கு உணவளிக்க, மீன்களுக்கு உணவளிக்க, குழந்தைகள் காப்பகம், மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு, முதியோர் இல்லம், அரசாங்க அலுவலகங்கள் என வித்தியாசமான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
• சிறிய தோட்டம் போட்டு, பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வையுங்கள். பறவைகளின் வாழ்க்கையை அமைதியாக நோட்டமிட வையுங்கள்.
• அன்பு, கருணை, பிரியம் போன்றவற்றை பணத்தால் வாங்க முடியாது அதைக் கொடுத்தால் தான் நமக்கு அவை திரும்பக் கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
• கம்ப்யூட்டர் மற்றும் தொலைக் காட்சி முன்பு இருப்பதை விட நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதை ஊக்குவியுங்கள்.
• வீட்டில் சிறிய பொறுப்புகளைக் கொடுத்து முடிக்கச் செய்யுங்கள்.
• எளிதான ஆரோக்கியமான சமையல் செய்ய சொல்லிக் கொடுங்கள்.
• உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, அவர்கள் கையால் செய்த சிறிய பரிசை கொடுக்கச் சொல்லுங்கள்.
• உடற்பயிற்சியை அவர்களுடன் இணைந்து செய்து கொண்டாடுங்கள்.
• சிறிது பணத்தைக் கொடுத்து, மினி பட்ஜெட் போட்டு செலவளிக்கவும், சேமிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
• கூட்டாக விளையாடும் விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பி, கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள்.
• புத்தகம் வாசிக்கப் பழக்குங்கள்.
• சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், வளமாவும் வைத்துக் கொள்ள நண்பர்களுடன் இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்.

17/07/2017

குழந்தைகளை வளர்க்கும் கலை

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் கணினி மற்றும் டிவி பார்ப்பதும், பொம்மைகளுடன் விளையாடுவதுமாக கழிகிறது அவர்களுடைய பொழுதுகள். இதுபோன்ற சூழலில் கேட்பது மட்டுமே நடப்பதால், ஒரு விஷயத்தை இடம், பொருள் அறிந்து பேச வேண்டிய தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை.

* பெற்றோர் குழந்தைகளுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

* தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றில் அதிக நேரம் செலவளிக்கும்போது பெரும்பாலும் அவர்கள் பேசுவதில்லை.
* மற்ற குழந்தைகளுடன் இணைந்து புத்தகம் வாசிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

* குழந்தைகள் படுக்கைக்குச் சென்ற பின் தூக்கம் வரும் வரை கதை புத்தகங்கள் வாசித்துக் காட்டலாம். இதனால் கற்பனை வளம் கூடுவதுடன் மொழி வளமும் அதிகரிக்கும்.

* குழந்தைகள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள். அறிவில் சேகரிக்கும் விஷயங்கள் மொழியிலும் வெளிப்படும்.

* குழந்தைகளுக்கு உறவுகளை அறிமுகம் செய்யுங்கள். அவர்களைச் சந்தித்து உறவாடவும், உறையாடவும் வாய்ப்பளிக்கலாம்.
* மார்க்கெட், கோயில். பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் பார்க்கும் பொருட்கள் பற்றிப் பேச வேண்டும்.

* குழந்தைகள் தங்களது தேவைகளை வாய்விட்டு கேட்கப்பழக்குங்கள். எது வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கட்டும். நிறைய சிந்திக்கவும், சிந்தித்ததை வார்த்தைகளில் பரிமாறிக் கொள்ள வாய்ப்பிருக்கும் பட்சத்தில் குழந்தைகள் வாய்மொழி அழகும், மேன்மையும் பெறுகிறது.

* குழந்தைகள் பெரும்பாலும் உங்களிடம் இருந்தே பல விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். எதைப் பேசும்போதும் கவனத்துடன் செயல்படுங்கள்.

* மேடையில் பலர் முன் பேச பயப்படும் குழந்தைகளை அவரது நண்பர்கள் மத்தியில் பேசப் பழக்குங்கள். நன்றாகப் பேசும்போது பாராட்டி அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யுங்கள்.

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Likeshop.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Likeshop.in:

Share