12/04/2021
விலையில்லா பிரதிகள் பெறுதலுக்கான இணைப்பு:
நல்லாசான் நம்மாழ்வார் அவர்களை மனமேந்தும் விதமாக, ஏப்ரல் 6 அவருடைய பிறந்த நாளன்று நம்மாழ்வாரின் நான்கு புத்தகங்களை மென்பிரதிகளாக மாற்றி (கிண்டில் நூல்கள்) அவைகளை விலையில்லாமல் அனுப்பிவைக்கும் ஒரு விருப்பத்தை தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிட்டிருந்தோம். ஆயிரத்து முன்னூறுக்கும் மேலான தோழமைகள் புத்தக இணைப்பு கேட்டு மின்னஞ்சலில் பதிந்திருந்தார்கள். நேற்று அவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாக ‘விலையில்லா மென்பிரதிகள்’ பெறுகிற இணைய இணைப்பை அனுப்பியுள்ளோம்.
அதன் நீட்சியாக, நம்மாழ்வரின் நான்கு புத்தகங்களை இணையப் பிரதிகளாகப் பெறும் கிண்டில் இணைப்பை இத்துடன் இணைத்துள்ளோம். தோழமையுறவுகள் இதன்மூலம் அந்த கிண்டில் புத்தகங்களை நேரடியாக தரவிறக்கிக் கொள்ளலாம். உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த இணைப்பைப் பகிர்ந்து அவர்களையும் விலையில்லாமல் இந்நூல்களை தரவிறக்கிக்கொள்ளச் செய்யலாம்.
குறிப்பு: அமேசான் கிண்டில் இணைப்பு வழியாக இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுந்தான் இந்த விலையில்லா புத்தகங்களை தரவிறக்கம் செய்யமுடியும் என்பதால், இனிவரும் மூன்று நாட்களுக்குள் புத்தகங்களை தரவிறக்கிக்கொள்ள வேண்டுகிறோம்.
நம்மாழ்வார் புத்தகங்கள் பெறுவதற்கான தன்னறம் நூல்வெளியின் கிண்டில் இணைப்பு:
விதைவழி செல்க - https://cutt.ly/UcGd19u
எல்லா உயிரும் பசி தீர்க - https://cutt.ly/qcGflZZ
நோயினைக் கொண்டாடுவோம் - https://cutt.ly/mcGfHbR
இனி விதைகளே பேராயுதம் - https://cutt.ly/VcGfen9
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி