14/05/2026
முன்பதிவிற்கு: https://tinyurl.com/KCL-Drawing
அனைவருக்கும் வணக்கம்!
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை, குழந்தைகள் பிரிவில், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் நோக்கில், “கோடைக் கொண்டாட்டம் - 2026” என்ற நிகழ்ச்சி (21.05.2026 முதல் 24.05.2026 வரை) காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஓவியர் திரு. தே. சகாய ராஜா அவர்கள் வழங்கும் “ஓவியப் பயிற்சி” என்ற பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில் அடிப்படை ஓவியம் வரைவது குறித்த நுணுக்கங்கள் மற்றும் முழுமையான பயிற்சியும் அளிக்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும். ஆகவே முன்பதிவு அவசியம். இதில் பங்குபெறும் குழந்தைகளுக்கு (31.05.2026) அன்று நடைபெறும் நிகழ்வில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம்! நன்றி.
குறிப்பு :- 1. வயது (age ) 08 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.
2.இப்பயிற்சிக்கு வரும் குழந்தைகள் வரும்பொழுது சிறிய ட்ராயிங் நோட் (Small Drawing Note), வெள்ளை சார்ட் (White chart), ஸ்கெட்ச் (Sketch), வண்ணக்குச்சிகள் (Crayons) பென்சில்,அழிப்பான் மற்றும் பென்சில் கூர்மையாக்கி, ஆகியவற்றை கொண்டுவரவும்.