ABI BOOKS

ABI BOOKS All Books under One Roof

24/11/2024

புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களை உடனே அறிய.. தேவைப்படும் புத்தகங்களைப் பெற.. வாசிப்பை வளர்க்கும் வளமான உரையாடல்களில் பங்கு கொள்ள
வாட்ஸ்அப் குழுவில் இணைய வரவேற்கிறோம்.
எண்: 9840974053

சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்து 75 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், இன்றுவரை அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விவாதிக்கப்...
24/11/2024

சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்து 75 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், இன்றுவரை அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விவாதிக்கப்படுகிறது. சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களையும், விசாரணை கமிஷன்களின் அறிக்கைகளையும் பேசுகிறது இந்தப் புத்தகம்.

சக்திவேல் ராஜ்குமார்
விலை: ₹160
தபால் செலவுடன்: ₹180
Contact us by whatsapp: 9840974053

தமிழில் எழுதும்போது பிழையில்லாமல் எழுத நினைக்கிறீர்களா?.. எளிமையான புத்தகம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக...
24/11/2024

தமிழில் எழுதும்போது பிழையில்லாமல் எழுத நினைக்கிறீர்களா?.. எளிமையான புத்தகம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா?.. ஒரு நண்பனைப் போல் அருகே இருந்து பொறுமையாக.. இனிமையாகச் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா?.. அப்படியென்றால் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் புத்தகம் இதுதான்.

நா.கோபாலகிருஷ்ணன்
விலை: ₹140
தபால் செலவுடன்: ₹160
Contact us by whatsapp: 9840974053

1937ல் ஜெர்மன் மொழியில் குர்பான் சையத் என்பவரால் எழுதப்பட்ட நாவல் அலியும் நினோவும். இந்நாவல் இதுவரை முப்பது மொழிகளில் மொ...
24/11/2024

1937ல் ஜெர்மன் மொழியில் குர்பான் சையத் என்பவரால் எழுதப்பட்ட நாவல் அலியும் நினோவும். இந்நாவல் இதுவரை முப்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 100 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. உலகத் தரமான படைப்பு என்பதற்கு இந்நாவல் சிறந்த உதாரணம். தமிழில் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. சிறந்த மொழிபெயர்ப்பு.
- எழுத்தாளர் இமையம்.

'அலியும் நினோவும்'
ஆசிரியர்: குர்பான் சையத்
மொழிபெயர்ப்பாளர்: பயணி தரன்
விலை: ₹370
தபால் செலவு இல்லை
Contact us by whatsapp: 9840974053

அளவுக்கு மீறி பணமிருந்தால் சந்தோஷம் போய்விடும் என்ற தத்துவத்தை மறந்துவிடுங்கள். பணத்தைப் பற்றி சரியான புரிதல் இருந்தால்,...
08/10/2024

அளவுக்கு மீறி பணமிருந்தால் சந்தோஷம் போய்விடும் என்ற தத்துவத்தை மறந்துவிடுங்கள். பணத்தைப் பற்றி சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கை குறித்த புரிதல் உங்களுக்கு வந்துவிடும்.

பள்ளி, கல்லூரிகளில் நாம் படிக்காத பணம் குறித்த விஷயங்களை, எதை எப்படி செயல்படுத்திப் பணத்தைக் குட்டிபோட வைத்துப் பெருக்கலாம் என்ற வழிமுறைகளை இந்தப் புத்தகம் உங்களுக்கு கற்றுத் தரும்.

பணக்குட்டி
பிரதீப் செல்லத்துரை
விலை: ₹180
தபால் செலவுடன் ₹200

பணம்சார் உளவியல்' என்னும் இந்த நூலில்  ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம்  வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோ...
08/10/2024

பணம்சார் உளவியல்' என்னும் இந்த நூலில் ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

விலை: ₹325
தபால் செலவு இல்லை
Whatsapp no: 9840974053

01. ஆனந்த யாழ் - ₹100 (₹170)02. சூப்பர் ஸ்டார் 45 - ₹150 (₹275)03. ஶ்ரீ ராமானுஜர் 1000 - ₹60 (₹90)04. The Journey Contin...
12/06/2023

01. ஆனந்த யாழ் - ₹100 (₹170)
02. சூப்பர் ஸ்டார் 45 - ₹150 (₹275)
03. ஶ்ரீ ராமானுஜர் 1000 - ₹60 (₹90)
04. The Journey Continues (Sri M) - ₹300 (₹390)
05. ஆடு - மாடு வளர்ப்பு - ₹100 (₹155)
06. ஆலிஸின் அற்புத உலகம் - ₹150 (₹200)
07. அடுத்த பெண்கள் கல்லூரி 5கிமீ - ₹60 (₹90)
08. அய்யனின் அமர ஜீவிதங்கள் - ₹200 (₹290)
09. ஆர்.எஸ்.எஸ் இந்து தீவிரவாத
கட்டமைப்பின் வேர் - ₹30 (₹50)
10. ஆவி உலகில் ஐம்பது வருட
அனுபவங்கள் - ₹80 (₹120)
11. அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும் - ₹100 (₹150)
12. அரசர்கள் வளர்த்த ஆன்மிகம் - ₹100 (₹175)
13. அண்டம் - எவ்வாறு அறிந்தோம்? - ₹30 (₹50)
14. Everything you need to know about marketing - ₹80 (₹110)
15. பாரம்பர்ய வீட்டு வைத்தியம் - ₹250 (₹340)
16. சூரியன் மறைவதில்லை - ₹175 (₹250)
17. மரணத்தின் பின் மனிதர் நிலை - ₹90 (₹120)
18. மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் - ₹2500 (₹5000)

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் பிறந்த தினம் இன்று..மு.வ.வின் நூல்கள் அனைத்தும் 10% சிறப்புச் சலுகை விலையில்..தபால் செலவ...
25/04/2021

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் பிறந்த தினம் இன்று..

மு.வ.வின் நூல்கள் அனைத்தும் 10% சிறப்புச் சலுகை விலையில்..

தபால் செலவு தனி.

அபி புக்ஸ்
Call/Whatsapp: 98409 74053

சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள் வரிசை: 7நூல்: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடுஆசிரியர்: ம.பொ.சி.வருடம் - 1966வகை: வாழ்வி...
25/04/2021

சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள் வரிசை: 7

நூல்: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ஆசிரியர்: ம.பொ.சி.
வருடம் - 1966
வகை: வாழ்வியல் கட்டுரைகள்
விலை:₹360
தபால் செலவுடன்: ₹380

ம.பொ.சி. என்று அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் பிறந்தது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில். தந்தை, கள் இறக்கும் தொழில் செய்ததை இவர் எதிர்த்ததால் மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு நின்று போனது. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 150க்கும் மேல்.
இவர் எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, கப்பலோட்டிய தமிழன் இரண்டும் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவால் திரைக் காவியமாயின.
மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாற காரணமாக இருந்தவர். ஆந்திராவுடன் இணையவிருந்த திருத்தணியை மீடடவர். கேரளப் பகுதியில் இருந்த தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைந்ததும் இவரால்தான்.
தமிழக சட்டமன்ற மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி. பத்மஶ்ரீ, எம்.எல்.ஏ, எம்.எல்.சி, கலைமாமணி, டாக்டர் பட்டங்கள் எனப் பதவி, விருதுகள் பல பெற்றும் என்றும் இவரை நினைவில் கொள்ளும்படி நிலைத்து நிற்பது ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சூட்டிய 'சிலம்புச் செல்வர்' பட்டமே.

வள்ளலார், இந்திய தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குலத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டை அடிகளார் வலியுறுத்தியமையால், இந்த நூலுக்கு 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' எனப் பெயர் தந்துள்ளார் ம.பொ.சி.

அபி புக்ஸ்
Call/Whatsapp: 98409 74053

சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள் வரிசை: 6நூல்: ஶ்ரீ ராமாநுஜர்ஆசிரியர்: பி. ஶ்ரீ.வகை: வாழ்க்கை வரலாறுவருடம்: 1965வி...
24/04/2021

சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள் வரிசை: 6

நூல்: ஶ்ரீ ராமாநுஜர்
ஆசிரியர்: பி. ஶ்ரீ.
வகை: வாழ்க்கை வரலாறு
வருடம்: 1965
விலை: ₹140
தபால் செலவு தனி.

பேச்சாளர், எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர், வரலாற்று ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், சமயாச்சாரியார், திறனாய்வாளர் எனப் பன்முக அறிஞராக விளங்கியவர் பி. ஶ்ரீ. என இலக்கிய நண்பர்களால் அன்பாக அழைக்கப்பட்ட பி.ஶ்ரீ. ஆச்சார்யா.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் பிறந்தவர். பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட பி.ஶ்ரீ. எழுதிய நூல்கள் பல. தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் அமைத்தவர் பி.ஶ்ரீ. கம்பனும் ஷெல்லியும், பாரதியும் ஷெல்லியும் என்று தொடங்கி இலக்கிய ஒப்புமைகள் பி.ஶ்ரீ.யால் வெளிவந்தன.

ராமாநுஜர் வரலாறு என்பது ஒரு பெரியாரின் வரலாறு மட்டுமன்று; தமிழகத்தின், ஒரு காலப்பகுதியின் வரலாறும் ஆகும். பல்லவர்களின் செல்வாக்குக் குறைந்து சோழர்களின் ஆட்சி மலர்ந்து மணம் பரப்பிய காலத்தில், சமண பௌத்த நெறிகள் மங்கிச் சைவ வைணவ நெறிகள் தழைத்த காலத்தில் தோன்றியவர் ராமாநுஜர். அந்த வரலாற்று செவ்வியோடு இணைந்தே ராமாநுஜர் வரலாறும் அமைந்திருக்கிறது.

அபி புக்ஸ்
Call/Whatsapp: 98409 74053

சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள் வரிசை: 5'வேங்கையின் மைந்தன்'ஆசிரியர்: அகிலன்வருடம்: 1963வகை: வரலாற்று நாவல்விலை: ...
19/04/2021

சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள் வரிசை: 5

'வேங்கையின் மைந்தன்'
ஆசிரியர்: அகிலன்
வருடம்: 1963
வகை: வரலாற்று நாவல்
விலை: ₹450

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தவர் பி.வி. அகிலாணடம் என்ற அகிலன் அவர்கள். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கியவர். இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமூக, வரலாற்று நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் எனப் பரந்து விரிந்தது இவரது இலக்கியத் தளம். இவர் எழுதிய 'பாவை விளக்கு', வாழ்வு எங்கே?', 'கயல்விழி' நாவல்கள் திரைப்படங்களாக உருமாற்றம் பெற்றன. இவரது 'வேங்கையின் மைந்தன்' சாகித்திய அகாதெமி விருதையும், 'சித்திரப் பாவை' ஞானபீட விருதையும் இவருக்கு பெற்றுத் தந்தன.

'தென்னிந்தியாவின் அலெக்சாந்தர்' என்று போற்றப் பெறும் முதலாம் ராஜேந்திரரையும் அவர் காலத்தையும் கதையில் நான் கொண்டுவர விரும்பியதால் அவர் சென்ற இடங்களுக்கும் வென்றுவந்த இடங்களுக்கும் நானும் நேரில் சென்றேன். தஞ்சை சந்திரலேகை, கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை, நார்த்தாமலை, சித்தன்னவாசல், கொடும்பாளூர் முதலிய தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கும் கடல் கடந்த இலங்கைத் தீவுக்கும் சென்று வந்தேன்.
- முன்னுரையில் ஆசிரியர்

அபி புக்ஸ்
Call/Whatsapp: 98409 74053

Address

1/11 Anbu Colony, Nandanam
Chennai
600035

Telephone

+919840974053

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABI BOOKS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABI BOOKS:

Share

Category