Thisai Book Store

Thisai Book Store திசை புத்தக நிலையம் அனைத்து தரப்பினருக்குமான தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை கொண்டுள்ளது.

07/03/2026
07/03/2026

#தமிழ்த்தேசியப்பெருவிழா2026
#மே17இயக்கமாநாடு

 #தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #மே17இயக்கமாநாடு #திருமுருகன்காந்தி
07/03/2026

#தமிழ்த்தேசியப்பெருவிழா2026
#மே17இயக்கமாநாடு
#திருமுருகன்காந்தி

 #தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #மே17இயக்கமாநாடு #பேராசிரியர்வீஅரசு
07/03/2026

#தமிழ்த்தேசியப்பெருவிழா2026
#மே17இயக்கமாநாடு
#பேராசிரியர்வீஅரசு

 #தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #மே17இயக்கமாநாடு #முனைவர்ஆபத்மாவதி
07/03/2026

#தமிழ்த்தேசியப்பெருவிழா2026
#மே17இயக்கமாநாடு
#முனைவர்ஆபத்மாவதி

 #தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #மே17இயக்கமாநாடு #சொசாந்தலிங்கம்
07/03/2026

#தமிழ்த்தேசியப்பெருவிழா2026
#மே17இயக்கமாநாடு
#சொசாந்தலிங்கம்

 #தமிழ்த்தேசியப்பெருவிழா2026 #மே17இயக்கமாநாடு  #கோசசிகலா
07/03/2026

#தமிழ்த்தேசியப்பெருவிழா2026
#மே17இயக்கமாநாடு
#கோசசிகலா

🎊 தமிழ்த்தேசியப் பெருவிழா - 2026 🎊அறிவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம்!கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்களின் வரலாற...
05/03/2026

🎊 தமிழ்த்தேசியப் பெருவிழா - 2026 🎊

அறிவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் வாழ்வியலை மீட்டெடுக்கும் நோக்கில், மே பதினேழு இயக்கம் முன்னெடுத்து வரும் ‘அறிஞர் அவையம் - அறிவர் மாநாடு’ இந்த ஆண்டும் எழுச்சியுடன் நடைபெற உள்ளது.

தமிழர்களின் தொன்மை, கலை, இலக்கியம், மருத்துவம், மற்றும் அரசியல் பொருளாதாரத்தை அறிஞர்கள் முன்னிலையில் உரையாடும் ஒரு மாபெரும் அறிவுத்தளம் இது.

📅 நிகழ்வு விவரங்கள்:

நாள்: மார்ச் 07 & 08, 2026 (சனி மற்றும் ஞாயிறு)

நேரம்: காலை 9:00 மணி முதல்

இடம்: வி. கே. எம். மகால், (மேட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில்), சைதாப்பேட்டை, சென்னை.

தொடர்புக்கு : 9884864010

"தமிழர்களின் செல்வத்தை அரங்கேற்றும் இந்த அறிவுத் திருவிழாவில் திரளாகக் கலந்துகொள்வோம்!"

✨ அனைவரும் வருக! ✨

'தமிழ்த்தேசியப்பெருவிழா 2026'மாரியம்மனோ, முருகனோ, அய்யனாரோ, ஆசிவகமோ, சேயோன்-மாயோன் என எந்த நம்பிக்கையாக இருந்தாலும், பெள...
03/03/2026

'தமிழ்த்தேசியப்பெருவிழா 2026'

மாரியம்மனோ, முருகனோ, அய்யனாரோ, ஆசிவகமோ, சேயோன்-மாயோன் என எந்த நம்பிக்கையாக இருந்தாலும், பெளத்தமோ, சமணமோ, வைதீகமோ, சைவமோ, வைணவமோ, இசுலாமோ, கிருத்துவமோ என எம்மதமாக அல்லது மார்க்கமாக இருந்தாலும் அவை தமிழர் மீது உருவாக்கிய தாக்கங்கள் இன்றளவும் நம்முடைய சமகால அரசியல்-சமூக வாழ்வை பாதிக்கின்றன.

இவற்றில் எது வாழ்ந்தது? எது வீழ்ந்தது? என நாம் அறிய வேண்டும்.

எது உதவியது? எது சுரண்டியது? என நாம் அறிந்தாக வேண்டும்.

இன்று எது வருகிறது? எது விரட்டப்படுகிறது? என்பதை நாம் புரிந்தாக வேண்டும்.

எது நம்பிக்கை? எது மூடநம்பிக்கை? என தெளிந்தாக வேண்டும்.

இவற்றை குறித்த வரலாறை தெளிவுபடுத்த தொல்லியல், மானுடவியல், பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் உரையாற்ற மாநாட்டை கூட்டியிருக்கிறோம்.

மூன்றாம் மாநாடாக அறிவர் மாநாடு மார்ச் 07, 08ம் தேதிகளில் கூடுகிறது.

தமிழர் நிலத்தில் நிலவிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் குறித்து அறிஞர் அவையம் கூடுகிறது. 2026ம் ஆண்டின் தமிழ்த்தேசியப் பெருவிழா வரும் வாரத்தில் இரு நாட்களாக நடக்க இருக்கிறது. இதற்கு முன் நடந்த இரண்டு மாநாடுகளின் தொடர்ச்சியாக இம்மாநாடு செழுமையாக திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் நாகரீகம் குறித்து 2024ல் புகழ்பெற்ற அறிஞர்களைக் கொண்டு மாநாடு நடத்தியது மே பதினேழு இயக்கம். இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டில் புகழ்பெற்ற தொல்லியல், வரலாறு, பண்பாட்டு, மானுடவியல், மொழியியல், கலை, படைப்புத்துறை அறிஞர்கள், பேராசிரியர்கள் என ஆளுமைகள் பங்கெடுத்தனர். தமிழரின் மருத்துவம், இசை, வேளாண்மை, அழகியல், பொருளாதாரம், நாடகம், இலக்கியம், மெய்யியல், மொழியியல், சூழலியல் என பல துறைகள் சார்ந்து உரை நிகழ்த்தினர். காலை முதல் இரவு வரையாக 2024ல் நடந்த முதல் அறிவர் மாநாடு, அறிஞர் அவையமாக எழுச்சியுடன் நடந்தது. அறிவுத்திருவிழாவாக இருநாள் நடந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தனர். விருது விழா, உரைவீச்சு என தமிழ்த்தேசியப்பெருவிழாவாக அது நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் சமகாலத்தில் இல்லாத அறிவுத் திருவிழாவாக மாறியது.

2025ம் ஆண்டும் இரண்டாம் அறிவர் மாநாட்டை நடத்தினோம். இம்மாநாட்டில் 'தமிழரின் அரசியல் வரலாறு' கருப்பொருளாக முன்னிலைப்படுத்தப்பட்டது. சங்க காலம் முதல், மூவேந்தர் ஆட்சிகள், பிற்கால ஆட்சிகள், காலனிய காலம் என வரலாறை பேசியது இம்மாநாடு. அரசர்களின் வரலாறாக மட்டுமல்லாமல் வெகுமக்கள் வரலாறு பேசுபொருளாக முன்வைக்கப்பட்டது. சமூக-அரசியலோடு பின்னிப்பிணைந்த சமயங்கள் வரலாறும் பேசப்பட்டது.

ஆரிய வைதீகத்தின் மீதான தமிழர்களின் எதிர்வினைகளை கோடிட்டுக் காட்டியது. வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலும், சங்ககாலம் முதல் பெரியார் வரையிலான வைதீக எதிர்ப்பு போராட்ட வரலாறு விளக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் மிக விரிவான உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்த்தேசிய அரசியலின் தவிர்க்க இயலா தேவையை இம்மாநாடுகள் மூலமாக மே17 இயக்கம் எடுத்துரைக்கிறது.

தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அறிவை கருவியாய் கைப்பிடிக்க இம்மாநாடு பேருதவியாய் விளங்கும்.

தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டோர், தமிழினத்தின் மீது பற்றுகொண்டோரை அன்புடன் அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கத்தினரின் ஆறுமாத கால உழைப்பின் விளைச்சல், 17 ஆண்டுகால போராட்டத்தின் விதை இம்மாநாடு.

அறிவாயுதம் ஏந்த வாரீர்.

திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
01-03-2026

இரண்டாம் உலகப் போரில் நாசிசமும் பாசிசமும் மனித குலத்தை எப்படியெல்லாம் நாசப்படுத்தின என்பதை வரலாற்று நிகழ்வுகள் மூலம் அறி...
02/03/2026

இரண்டாம் உலகப் போரில் நாசிசமும் பாசிசமும் மனித குலத்தை எப்படியெல்லாம் நாசப்படுத்தின என்பதை வரலாற்று நிகழ்வுகள் மூலம் அறியாதவர்களுக்கு இந்த வானவில் புதினமானது அதன் கோரமுகத்தை திறந்துக் காட்டி எச்சரிக்கின்றது. மார்க்சியப் பற்றாளர்கள் - சோசலிசத்தின் முன்னோடிகள் - எப்படிப்பட்ட கடமை வீரர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்தப் புதினமே சாட்சி.

வானவில்
- ரூ 240

புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்
ஆவின் பால் நிலையம் அருகில்
காமராஜர் அரங்கம் எதிரில்
தேனாம்பேட்டை, சென்னை - 600086

098840 82823

இந்திய சுதந்திரம் அடைந்துக்க்கொண்டிருந்த 1945- 47 காலக்கட்டத்தில் வார்லி ஆதிவாசிகளின் புரட்சி நடைபெற்றது. ‘புதிய இந்தியா...
01/03/2026

இந்திய சுதந்திரம் அடைந்துக்க்கொண்டிருந்த 1945- 47 காலக்கட்டத்தில் வார்லி ஆதிவாசிகளின் புரட்சி நடைபெற்றது. ‘புதிய இந்தியாவுக்கான காந்தியடிகளின் லட்சியக் கனவுதான் அப்போது மக்கள் மனதை கவ்விப் பிடித்திருந்தது. இந்திய சமூகத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு காந்தியம் போதாது என்பதன் வெளிப்பாடுதான் இந்தப் புரட்சி. ‘புதிய இந்தியாவுக்கான டாக்டர் அம்பேத்கரின் லட்சியக் கனவும் ‘மார்க்சியத்தின் லட்சியக் கனவும்’ மக்களின் மனங்களை வெல்வதற்காகப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், மார்க்சியத்தின் சிறப்பான எடுத்துக்காட்டாக கோதாவரியும் பாருலேகரும் உயர்ந்து நின்றார்கள். சமூக மாற்றத்துகான பரிசோதனையாகவே அவர்கள் வார்லி ஆதிவாசிகளின் புரட்சியை வழிநடத்தியிருக்கிறார்கள். அதன் வெற்றி வலிமையான வேர்களோடு இன்றும் பசுமையாக இருப்பது சமூக ஊழியர்களுக்கான பாடம்.

மனிதர்கள் விழிப்படையும்போது : ஆதிவாசிகள் புரட்சி : வார்லி விவசாயிகளின் போராட்டம்.
-ரூ 400

புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்
ஆவின் பால் நிலையம் அருகில்
காமராஜர் அரங்கம் எதிரில்
தேனாம்பேட்டை, சென்னை - 600086

098840 82823

Address

5/9, Parthasarathy Pettai Steet, Anna Salai, Teynampet
Chennai
600086

Opening Hours

Monday 9:30am - 8:30pm
Tuesday 9:30am - 8:30pm
Wednesday 9:30am - 8:30pm
Thursday 9:30am - 8:30pm
Friday 9:30am - 8:30pm
Saturday 9:30am - 8:30pm
Sunday 9:30am - 8:30pm

Telephone

+919884082823

Alerts

Be the first to know and let us send you an email when Thisai Book Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thisai Book Store:

Share

Category