Swasam Books

Swasam Books Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swasam Books, Book shop, Swasam Books, Chennai.

Swasam Books - Leading Books Publisher, Exporter and Distributor - Online Tamil & English Book Seller - physical bookshop located at Selaiyur near East tambaram.

சுவாசம் பதிப்பகம் மற்றும் ஸ்பாரோ பெண்கள் ஆவணக்காப்பகம், மும்பாய் இணைந்து நடத்தும் இரு நூல்கள் வெளியீட்டு விழா.சகோதரி R.S...
08/01/2026

சுவாசம் பதிப்பகம் மற்றும் ஸ்பாரோ பெண்கள் ஆவணக்காப்பகம், மும்பாய் இணைந்து நடத்தும் இரு நூல்கள் வெளியீட்டு விழா.

சகோதரி R.S. சுபலக்ஷ்மி அம்மாளின் என் சுயசரிதை நூல் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.

சுவாசம் அரங்கு 536 மற்றும் 537ல் 10-01-2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு.

வெளியிடுபவர்

ஆர். வத்சலா
(கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர்)

முதல் பிரதி பெறுநர்கள்

முனைவர் அரங்கமல்லிகா
(கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர்)
&
பாலைவன லாந்தர்
(கவிஞர், எழுத்தாளர்)

My Life Story Will be Released by

Dr K Srilata
(Poet, Writer, Translator & Academic)

First copy to be received by
Dr Mubeen Sadhika
(Poet, Writer, Essayist, Translator & Academic)

&
Deepa Janakiraman
(Writer and Blogger)

அனைவரும் வருக.

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026, சுவாசம் வெளியீடு 15இலங்கைப் போர்ச் சுழலின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் இருபது வருட வ...
17/12/2025

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026, சுவாசம் வெளியீடு 15

இலங்கைப் போர்ச் சுழலின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் இருபது வருட வாழ்வியலைப் பேசுகிறது இந்த நாவல்.

இவர்கள் எந்த இயக்கத்தினையும் சாராதவர்கள். எந்தக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்காதவர்கள். சாதாரண மனிதர்கள். தங்கள் வாழ்க்கையை நேர்மையாக வாழ நினைப்பவர்கள்.

பதற்றமே அன்றாட வாழ்க்கையாக மாறும் நிலையும், போர்ச்சூழலும் எவ்விதம் மக்களைப் பாதிக்கின்றன என்பதையும், இயல்பு வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாக மாறும் தருணத்தையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.

நம் கண்முன்னே கண்ட காட்சிகள் எவ்வாறெல்லாம் மாறுகின்றன என்பதைக் கதையின் ஊடே இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் கே.எஸ்.சுதாகர்.

இயல்பான மொழியும் நேர்மையான பதிவுமே இந்த நாவலின் பலம்.

வரலக்‌ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற நாவல் இது.

சொல்லில் வருவது பாதி, கே.எஸ்.சுதாகர், ரூ 380, அட்டை ஓவியம்: ஓவியர் தமிழ்

சென்னைப் புத்தக கண்காட்சி 2026, சுவாசம் வெளியீடு 14நிஜம் – கற்பனை இரண்டுக்கும் இடையேயான தீவிரமான விளையாட்டு இந்த நாவல். ...
16/12/2025

சென்னைப் புத்தக கண்காட்சி 2026, சுவாசம் வெளியீடு 14

நிஜம் – கற்பனை இரண்டுக்கும் இடையேயான தீவிரமான விளையாட்டு இந்த நாவல். கற்பனைக்கும் நிஜத்துக்குமான இடைவெளியை இல்லாமலாக்கி, இரண்டுக்கும் பொதுவான ஒரு வெளியில் பயணிக்கிறது ‘பிரதி: வேலன்’.

இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் முற்றிலும் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. இந்தக் கதாபாத்திரங்கள் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். பிறருடன் பேசும் பாவனையில் தன்னுடன் பேசிக்கொள்ளும் இவர்களை வாசிப்பது சுவாரசியமான அனுபவம்.

பரீட்சார்த்தமான எழுத்தில் சுவாரஸ்யமும் பரபரப்பும் கூடி வந்திருப்பது இந்த நாவலின் சிறப்பு. நான்–லீனியர் எழுத்து முறையைக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் முத்துச்செல்வன்.

வரலட்சுமி அம்மாள் நினைவு நாவல் போட்டி 2025ல் ஆறுதல் பரிசு வென்ற நாவல்.

பிரதி: வேலன், முத்துச்செல்வன், ரூ 250, அட்டை ஓவியம்: ஓவியர் தமிழ்

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026, சுவாசம் வெளியீடு 12யாராலும் தவிர்க்க முடியாத பால்ய கால நினைவுகளைத் தாங்கி வரும் சிறுகத...
16/12/2025

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026, சுவாசம் வெளியீடு 12

யாராலும் தவிர்க்க முடியாத பால்ய கால நினைவுகளைத் தாங்கி வரும் சிறுகதைகளின் தொகுப்பு. தான் வாழ்ந்த ஊரின் நினைவுகளை, அங்கே நடந்த நிகழ்வுகள் தரும் விவரிக்க முடியாத உணர்வுகளை இந்தக் கதைகளின் மூலம் நம் அனைவருக்குள்ளும் கடத்துகிறார் ஆமருவி.

பழைய பள்ளிகள், நம் நினைவைச் சுமக்கும் சாலைகள், சூதுவாது அற்ற அந்தக் கால மனிதர்கள், இன்று எங்கோ நகர்ந்து வந்துவிட்டாலும் இன்று வரை மறக்கமுடியாத அந்த வாசனை என நாம் அனைவரும் மீண்டும் அனுபவிக்க விரும்பும் அனைத்தையும் இந்தக் கதைகள் உள்ளார்ந்த பகடியோடும் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியோடும் சொல்கின்றன.

நம் ஒவ்வொருவரையும் நம் பழங்காலத்துக்கு அழைத்துச் செல்லும் நூல்.

நெய்வேலிக் கதைகள், ஆமருவி தேவநாதன், ரூ 210, ஓவியங்கள்: ஸ்ரீதர்

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026 - சுவாசம் வெளியீடு 13சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் - இருவரும் போயிங் நிறுவ...
16/12/2025

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026 - சுவாசம் வெளியீடு 13

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் - இருவரும் போயிங் நிறுவனம் நாசவிற்காக வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில், விண்வெளி நிலையமான ஐ.எஸ்.எஸ்ஸுக்குச் சென்ற அனுபவங்களைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

எட்டு நாள்களில் முடிய வேண்டிய மிஷன், 286 நாட்கள் நீடித்தது ஏன்? அதன் பின்னணி என்ன? ஸ்டார்லைனரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு என்று முதலில் சொல்லப்பட்டாலும், நாள்கள் செல்ல செல்ல வேறு பல பரிமாணங்களில் இந்த விஷயம் விரியத் தொடங்குகிறது.

ஆர்.வெங்கடேஷின் விறுவிறுப்பான எழுத்து நடையில் எண்ணற்ற அறிவியல் தகவல்கள், அகவயப் போராட்டங்கள், ஞானச் சிதறல்கள், பிரபஞ்ச வெளியின் பிரமாண்டங்கள் என்று நாவல் தொடக்கத்திலிருந்து முடிவுவரை வாசிப்பவரைக் கட்டிப்போட்டு விடுகிறது.

மனிதனின் ஆற்றலும் இறை நம்பிக்கையின் ஆற்றலும் நாவல் முழுக்க விவாதிக்கப்படுவது கூடுதல் சுவாரசியத்தைத் தருகிறது.

பதினாறு சூரிய உதயங்கள், ஆர்.வெங்கடேஷ், ரூபாய் 200

சகலகலா வல்லவன் போஜராஜன், அனந்தசாய்ராம் ரங்கராஜன்,ரூ 160*சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026 - சுவாசம் வெளியீடு 9*போஜராஜன் இ...
14/12/2025

சகலகலா வல்லவன் போஜராஜன், அனந்தசாய்ராம் ரங்கராஜன்,ரூ 160

*சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026 - சுவாசம் வெளியீடு 9*

போஜராஜன் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மன்னர்களுள் ஒருவர். மத்திய இந்தியாவில் உள்ள மாளவப் பிரதேசத்தை ஆட்சி செய்த இவர், தேர்ந்த அறிவுத்திறமைகொண்ட மன்னராகத் திகழ்ந்தார். இவரது ராணுவம் பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட பல நவீன யுக்திகளைக் கையாண்ட படையாகத் திகழ்ந்தது.

கட்டடக் கலை, கவிதை, இசை, நாடகம், தொழில்நுட்பம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய அரசர் போஜன், போஜ்பூர் நகரத்தை நிறுவி, அங்கே அற்புதமான போஜேஷ்வர் கோயிலைக் கட்டினார். மேலும், அணைகள் பல அமைத்து நீர் மேலாண்மைத் திட்டங்களையும் மேற்கொண்டார். கட்டடக்கலை, பொறியியல், இலக்கியம், இலக்கணம், கவிதை எனப் பலதரப்பட்ட கலைகள் குறித்து விரிவான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகம் மன்னர் போஜராஜனின் தீரமிக்க ஆட்சியின் சாதனைகளையும் பெருமைகளையும் சுவைபட எடுத்துக் கூறி, ஏன் அவர் சகலகலாவல்லவன் என அறியப்பட்டார் என்பதையும் விளக்குகிறது.

*சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026, சுவாசம் வெளியீடு 8*வீர அபிமன்யு, அனுஜா சந்திரமௌலி,‌ ஆங்கிலத்தில் இருந்து தமிழில் ஸ்ரீ...
13/12/2025

*சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026, சுவாசம் வெளியீடு 8*

வீர அபிமன்யு, அனுஜா சந்திரமௌலி,‌ ஆங்கிலத்தில் இருந்து தமிழில் ஸ்ரீவித்யா தணிகை, ரூ 400

எல்லாம் தெரிந்திருந்தும் அவர்கள் அனைவருக்காகவும் அவன் இறந்தான். அவனது நிகரில்லா ஆளுமையையும் ஈடு இணையற்ற தைரியத்தையும் கவிஞர்கள் பாடினர்.

விதி அவனுக்கு மிகக் குறுகிய காலமே ஒதுக்கி இருந்தாலும், அர்ஜுனனின் மகன் வீர அபிமன்யுவின் உயர்ந்த வீரமும் தியாகமும் புராணங்களில் என்றென்றும் வாழ்கிறது.

காலத்தால் அழியாக் காவியத்தில் அபிமன்யுவுக்கு எப்போதும் அழிவில்லை.

கருவுற்றிருக்கும் இளம் மனைவியைப் பிரிந்து தன் இறுதிக் கணமான சக்கரவியூகத்தை எதிர்கொள்ளும் அபிமன்யுவின் கதையை இன்று வரை உலகம் ஏன் நினைவு வைத்திருக்கிறது என்பதை ஆழமாகச் சொல்லும் நூல்.

12/12/2025

Books Fair Release 2026

நாயன்மார்களில் சிறப்பு வாய்ந்தவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட அனைத்து 63 நாயன்மார்கள...
11/12/2025

நாயன்மார்களில் சிறப்பு வாய்ந்தவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட அனைத்து 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றையும் பக்தி நெறிகளையும் பேசுகிறது இந்தப் புத்தகம்.

பொயு 6 - 10ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த, சைவ சமயத்தின் தூண்களாகக் கருதப்படும் இந்தப் பெருமக்கள், தங்கள் சிவ பக்தியை இலக்கியங்கள் மூலமாகவும், சிவனடியார்களுக்குச் செய்த சேவை மூலமாகவும் தழைக்கச் செய்தனர். இவர்களில் அரசர்கள், வணிகர்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் ஆகியோரும் அடக்கம்.

நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியிலிருந்து 63 நாயன்மார்களின் புகழ்பாடும் சுவைமிகு பாடல்களும் அவற்றுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு.

63 நாயன்மார்கள், ப.சரவணன், படங்கள் ஓவியர் ஜீவா, சுவாசம், ரூ 400

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026 - சுவாசம் வெளியீடு 1

சிவபெருமான் வணிகராக, அடியாராக, விவசாயியாக, மீனவராக, சித்தராக, வேலைக்காரனாக, இன்னும் பல வடிவங்களில் வந்து, பக்தர்களைச் சோ...
11/12/2025

சிவபெருமான் வணிகராக, அடியாராக, விவசாயியாக, மீனவராக, சித்தராக, வேலைக்காரனாக, இன்னும் பல வடிவங்களில் வந்து, பக்தர்களைச் சோதித்து அவர்களுக்கு நல்வழி காட்டி அருள்புரிந்து பல அற்புதங்கள் செய்தார்.

தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கல் யானைக்குக் கரும்பளித்த
படலம், பிட்டுக்கு மண் சுமந்த படலம், நரியைப் பரியாக்கிய படலம்,
நாரைக்கு முக்தி கொடுத்த படலம் என சிவபெருமான் நிகழ்த்திய 64
திருவிளையாடல்களையும் இந்தப் புத்தகம் எளிமையான மொழியில்
பக்திரசம் குன்றாமல் காட்சிப்படுத்துகிறது.

ஒவ்வொரு திருவிளையாடல்களும் அழகிய ஓவியமாக இந்த நூலில்
வரையப்பட்டிருப்பது இப்புத்தகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

திருவிளையாடல் புராணம், ஜெயந்தி நாகராஜன், படங்கள்: ஓவியர் ஜீவா, ரூ 350

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026 சுவாசம் வெளியீடு - 2

ராமானுஜர் ஓர் ஆன்மிக ஆசாரியராக மட்டுமல்லாமல், மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். அதனால், அண்ணல், பெரியா...
11/12/2025

ராமானுஜர் ஓர் ஆன்மிக ஆசாரியராக மட்டுமல்லாமல், மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். அதனால், அண்ணல், பெரியார், சீர்திருத்தம் கண்ட செம்மல், புரட்சி செய்த தலைவர், தமிழ்த் தலைவன் போன்ற பட்டங்கள் அனைத்தும் ஸ்ரீ ராமானுஜருக்கே முழுமையாகப் பொருந்தும் என்று இந்நூல் அழுத்தமாகக் கூறுகிறது.

திவ்ய ஞானத்தில் சிறந்து விளங்கிய ஆசாரியன் ராமானுஜருக்கு மானசிக குரு, வைசிய குலத்தில் பிறந்த திருக்கச்சி நம்பி.

மல்லர் சமுதாயத்தைச் சேர்ந்த உறங்கா வில்லி தாசரை ராமானுஜர் தன் மடத்தில் சேர்த்துக் கொண்டு அவருக்குக் கருவூலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தார். ராமானுஜர் காவேரியில் குளித்து மடம் திரும்புகையில் உறங்கா வில்லி தாசரின் தோளில் கையிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பல்வேறு வைணவ ஆசாரியர்கள் சாதிக் கட்டுப்பாடுகளைக் கடந்து சமுதாயப் பணியில் ஈடுபட்ட அரிய தகவல்களும் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நூலை வெறும் கதையாக எழுதாமல், ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்களின் வரலாற்று நிகழ்வுகள், ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தப் பாடல்கள், பின்பழகாரம் பெருமாள் ஜீயர் எழுதிய குருபரம்பரா ஆறாயிரப்படி, வார்த்தாமாலை, பிள்ளைலோகாசாரியார் எழுதிய ஶ்ரீ வசனபூஷணம், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் எழுதிய ஆசாரியஹ்ருதம், மணவாள மாமுனிகள் எழுதிய உபதேச ரத்தின மாலை, பிள்ளைலோகம் ஜீயர் எழுதிய ராமானுஜ திவ்ய சரிதை, திருவரங்கம் கோயிலொழுகு, வடிவழகிய நம்பி தாசர் எழுதிய ஶ்ரீ ராமானுஜ வைபவம் போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் மகர சடகோபன்.

ஶ்ரீ ராமானுஜர் - கோவில் முதல் குடிசை வரை, மகர சடகோபன், ரூ 170

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026 - சுவாசம் வெளியீடு 3

Address

Swasam Books
Chennai
600073

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Swasam Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category