15/04/2023
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰـهِ وَبَرَكَاتُهُ
எங்கள் அன்பு மகன் முஹம்மது ஃபஸ்லுர் ரஹ்மான்
300 வது நாள் 🤲 ,,"துஆ" உக்காக
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.
அல்லாஹ் எதை எடுத்தானோ, அதுவும் எதை அல்லாஹ் கொடுத்தானோ அதுவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்விடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது.
"வல் ஹலக்கல் மொவ்த்த வல் ஹயாத்த" முஸ்லீம்களின் உண்மையான வாழ்க்கை மரணத்துக்குப் பின்னர்தான் தொடங்குகிறது,
அந்த வாழ்வில் என் மகனை யாஅல்லாஹ் சிறப்பாக்கி வைப்பாயாக!🤲
ரமழான் நோன்பு ஐந்து வயது முதல் இருபது வயது வரை எங்களுடன் சேர்ந்து ஒன்று கூட விடாமல் பிடித்து வந்த எங்கள் மகன் இந்த வருடத்திலிருந்து உன்னிடத்தில் யாஅல்லாஹ்!🤲
சென்ற வருடம் கியாமுல்லைல் தொழுத எங்கள் மகன் இன்று உன்னிடத்தில் யாஅல்லாஹ்!🤲
🤲யாஅல்லாஹ் என் மகனின்
பாவங்களை மன்னிப்பாயாக!
🤲இவருக்கு அருளும் செய்வாயாக! இவருக்கு மறுமை சுகத்தையும் நல்குவாயாக!
🤲இவரை பரிசுத்தப்படுத்துவாயாக!
🤲இவரை மன்னித்து விடுவாயாக!
🤲இவருடைய தங்குதலை, மிக கண்ணியப்படுத்துவாயாக!
🤲இவருடைய நுழைவிடத்தை விஸ்த்தீரணமாக்கித் தருவாயாக!
இவர் பூமியில் எங்களுடன் வாழ்ந்த வீட்டை விட மிகச் சிறந்த வீட்டை, சுவனத்தில் இவருக்கு நீ வழங்குவாயாக.🤲
இன்னும், என் மகனின் கப்ரை
வேதனையிலிருந்தும், காத்தருள்வாயாக.🤲
நரக வேதனையிலிருந்தும் இவரை நீ காத்தருள்வாயாக.🤲
என் மகனை நீ சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக.🤲
🤲சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை இவருக்கு நீ வழங்குவானாக.🤲
🤲ஆமீன்..... ஆமீன்..... ஆமீன்..... யாரப்பல் ஆலமீன்.....🤲 வஸ்ஸலாம்.