APJ Fruits &vegetables

APJ Fruits &vegetables Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from APJ Fruits &vegetables, Candy Store, NETTUR Road, Alangulam.

17/06/2025

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் தற்போது அறிக்கை ஒன்று வெளியீட்டுள்ளது.. அதில் உள்ள 22 தீர்மானங்களை காண்போம்...

1. மாநில,மாவட்ட கபடி கழகத்தில் முறையாக பதிவு செய்து போட்டிகளை நடத்த வேண்டும்.

2. வீரர்,வீராங்கனைகளை தாய்,சேய் என இரண்டு அணிகளில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேண்டும். வேறு அணிகளில் கண்டிப்பாக விளையாட அனுமதிக்க கிடையாது.

3. கால நேரங்களை குறிப்பிட்டு, முதல் நாள் போட்டியை மாலை 5 மணி முதல் இரவு 12 மணி மணிக்குள், இரண்டாம் நாள் காலை 8 மணி முதல் இரவு 10 மணிக்குள் இறுதி போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.

4. கண்டிப்பாக Setting அணிகளை விளையாட அனுமதி வழங்க கூடாது.

5. மாநில நடுவர்கள்,விழா கமிட்டியினர் இணைந்து Fixture கால அட்டவணை போட வேண்டும்.

6. போட்டி நடத்துபவர்கள் கண்டிப்பாக அவர்களுது பெயரில் Setting அணிகளை வைத்து விளையாடுவதற்கு அனுமதிக்க கூடாது.

7. கண்டிப்பாக எடை பிரிவு போட்டியாக இருந்தால் எடை பிரிவு போட்டியாகவும் மற்றும் எடைபிரிவு (Open match) இல்லதா போட்டியாக இருந்தால் open match போட்டியாக மட்டுமே நடத்த வேண்டும்.மாநில கபடி கழகத்தில் பதிவு பெற்று பின்பு, எடைபிரிவுகளை மாற்றக் கூடாது.

8. போட்டிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் மாவட்ட போட்டி என்றால் 2 தினங்களில் 2 மைதானம் அமைத்து 40 அணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும்.

9. மாநில போட்டிகளாக இருந்தால் ஆண்கள் 16 அணிகளையும்,பெண்கள் 16 அணிகளையும் அமைத்து போட்டிகளை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும்.

10. போட்டி நடத்துபவர்கள் கண்டிப்பாக முன் கூட்டியே அணிகளுக்கு அழைப்பு விடுத்து,பதிவு செய்யும் அணிகளுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கி போட்டிகள் நடத்த வேண்டும்.

11. குறைந்த அணிகளை அழைத்து League cm knockout சிறப்பானமுறையில் நடத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

12. பங்கு பெறும் அணிகளுக்கு சிறப்பான முறையில் உணவு, தங்குமிடம் வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

13. போட்டி நடத்துவபர்கள் கண்டிப்பாக மருத்துவ குழு (Medical Team) அமைத்து போட்டி நடத்த வேண்டும்.

14. போட்டியில் பங்குபெறும் அணிகளுக்கு அவர்கள் வரும் Bus, Train அடிப்படையில் பயணப்படி வழங்க வேண்டும்.

15. எக்காரணத்தை கொண்டும் போட்டி நடத்துபவர்கள் தங்களது அணி வெற்றி பெறும் வகையில் Fixture அமைத்து போட்டிகளை நடத்த கூடாது.

16. Knockout போட்டியாக இருந்தால் 16 அணிகளை குலுக்கல் முறையில் கால அட்டவணை அமைத்து போட்டிகளை நடத்தலாம்.

17. எந்த அணிகளாக இருந்தாலும் போட்டி நடத்துபவர்கள் ஒருதலை பட்சம் பார்க்காமல்,சுயநலம் இல்லாமல் பொதுநலம் கருதி போட்டிகளை நடத்த வேண்டும்.

18. போட்டிகளில் பங்கு பெறும் பெண்கள் அணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு உரிய தங்குமிடம் வழங்கிட வேண்டும்.

19. பெண்கள் அணி பங்கேற்கும் போட்டிகளில் அவர்கள் தங்கும் இடத்தில், ஆண்கள் பயிற்சியாளர்கள்,மேலாளர்களுக்கு இடம் ஒதுக்க கூடாது.

20. காலதாமதமாக வரும் அணிகளுக்கு விளையாட வாய்ப்புகள் வழங்க கூடாது. போட்டி நடத்துவபர்கள் குறித்த நேரத்தில் வரும் அணிகளை வைத்தே போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும்.

21. நிறுவன அணிகளில் இரண்டு அல்லது மூன்று Guest player விளையாட அனுமதிக்கும் பொழுது, அந்த இரண்டு அல்லது மூன்று வீரர்களை ஒரு வருடத்திற்க்கு நிறுவன அணிகளில் விளையாட (Department or TNAKA) அனுமதி பெற்று இருக்க வேண்டும்.ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றி விளையாடுவதற்கு அனுமதிக்க கூடாது.

22.அகில இந்திய,மாநில கபடி கழகத்தின் விதிமுறைகளை பின்பற்றி தான் போட்டிகளை நடத்த வேண்டும்.ப்ரோ கபடி விதிமுறைகளை வைத்து போட்டிகளை நடத்த கூடாது.

17/11/2021
06/01/2017

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...

14/10/2016
26/07/2016

தெரிந்து கொள்வோம்

பிறந்த தேதி : 15 - 10 - 1931

மண்ணை விட்டு பிரிந்து சென்ற
தேதி : 27 - 07 - 2015

வாழ்ந்த வருடம் : 83

வாழ்ந்த நாட்கள் : 30,602

வாழ்ந்த காலம் : 2,643,840,000 வினாடிகள்

( பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் கணக்கிடவில்லை )

பெற்ற பட்டங்கள் : பாரத ரத்னா 1997

பத்ம விபூஷன் 1990

பத்ம பூஷன் 1981

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தனது படிப்பை மேற்கொண்டார். இயற்பியலில் ஆர்வம் இல்லாவிட்டாலும் 1954ம் ஆண்டு பட்டம் பெற்றார். தனது மேல் படிப்பை சென்னையிலுள்ள MITயில் தனது அறிவியல் பொறியியல் படிப்பை மேற்கொண்டார். அங்கேயே முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இன்னும் பல தகவல்களை தேடி ..

முதல் முறை 1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group....
30/06/2016

முதல் முறை 1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group.
எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அடங்கும்
அதன் பின் கலாம் தான் நம்ம நாட்டில் உள்ள யுரேனியத்தை கண்டுபிடித்தார்
மே மாதம் 1998 இல் கண்ணசைக்க , டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான ஒரு டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது.
இம்முறை அமெரிக்கா உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றி காட்டினர்கள் நம்ம கலாம்.
கலாம் அமெரிக்கா உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை வைத்து ஒரு டைம்- டேபிள் போட்டார்.
இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம். இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலைக் காட்டக் கூடாது.
இந்த நேரத்தில் தான் அணு கருவிகள் தாங்கிய ராணுவ வாகனங்கள் புறப்பட வேண்டும்.இந்த நிமிடத்தில் தான் அது பொக்ரானில் நுழைய வேண்டும் .
அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும் , இதனால் ஹெவி மெசின் கன்கள், ராக்கெட் லாஞ்சர்கள், மார்ட்டர்கள் ஆகியவை வெடித்து ஒரு பக்கம் புழுதியை கிளப்பட்டும் என பல்வேறு ராணுவ உளவு யுக்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.
ராணுவ பயிற்சி நடைபெறுவதாக அமெரிக்க செயற்கை கோள்களை நம்ப வைக்க பாலைவன மணலை ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு குவிப்பதும் பின்பு அவற்றை வேறொரு இடத்தில் குவைப்பதுமாக தொடர்ந்து இதே வேலைகளை பல நாட்களாக செய்துவந்துள்ளனர்...
இதனால் அமெரிக்காவும் இந்திய ராணுவ பயிற்சிக்காக எதோ செய்துகொண்டுள்ளது என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது...
கலாமின் இந்த டைம் டேபிளின் படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான்.
இதனால் இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.
கிட்டத் தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.
மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு. மே 10 ஆம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம்.
இந்திய மீது போடப் பட்ட முப்பது ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விட வில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.
முப்பது ஆண்டு தாடைகளை வெறும் முப்பது நிமிடங்களில் முறியடித்தார் நாம்ம கலாம்...
இந்த நாளை நினைவுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.
பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன.
எந்த ஒரு செயற்கை கோளாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை.
இதன் பிறகு அமெரிக்க, கன்னடா, ஜப்பான் போன்ற நாடுகள் இதியாவிற்கு பாயந்தன...
இந்தியாவின் அணு சக்தி பலத்தை மற்ற நாடுகளுக்கு உணர்த்தபட்டது..
அது மட்டும் இல்லாமல் பால நாடுகள் கண்டனம் தெரிவித்தன..
இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது
இந்த சோதனை மூலம் இந்திய மூன்று முக்கிய தகவல்களை அணு உலகுக்கு சொன்னது.
1.யுரேனியத்திலிருந்து ப்ளுடோனியத்தை பிரிப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம்.
2.இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ரஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.
3.ஹெவி வாட்டில் இருந்து டிரிடியம் பிரிப்பதும் எங்களுக்கு தெரியும்.
இந்த குண்டு அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளி...
16/06/2016

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

13/03/2016

புற்றுநோயைத் தடுக்கும் திராட்சை!

திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.

திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்,,,.......

26/02/2016

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்

புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

Address

NETTUR Road
Alangulam
627851

Telephone

+919790680321

Website

Alerts

Be the first to know and let us send you an email when APJ Fruits &vegetables posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category