22/12/2022
நாளை காலை இந்திய நேரம் 8 மணிக்கு, நண்பர் Perumal Kasi இயக்கி வெளிவரும் படத்தின் முதல் காட்சி திரையரங்குளில் ஆரம்பமாகிறது. பதினைந்து வருடக் கனவு வெள்ளித்திரையில் ஒளிருவது என்பது விபரிக்க முடியாத மகிழ்ச்சியை அவருக்கு கொடுத்திருக்கிறது. கூடவே அச்சத்தையும் தான். தென்னிந்தியச் சூழலில் படம் திரையில் ஓடினால் வாழ்வு, திரையைவிட்டு ஓடினால் வீழ்வு. அவருக்கு வாழ்வு கிட்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இந்தப்படம் முன்பாதியில் இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய நகைச்சுவையை தாராளமாக புகுத்தியிருக்கிறார். அவரது படைப்புச் சுதந்திரத்தின் மீதான மரியாதையும் இவ்வாறான அணுகுமுறையை கையாண்டமைக்கான எனது கண்டனங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்.
இரண்டாவது, ஆங்கிலத் தலைப்பு. தமிழிலே தலைப்பு இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம் அவ்வளவே.
நானும் என்னால் முடிந்தளவு உதவியை பின்தயாரிப்பு வேலைகளிய் போது வழங்கினேன்.
One night stand என்று சொல்லும் ஒரு இரவு படுத்து காசை வாங்கி கலாதியா வாழ நினைச்சா..... அது கதையில் அழகாக பதிவு செய்திருக்கிறார். யார் இதன் பின்னணி, யார் இதனைப் பயன்படுத்துகிறார்கள், யார் இதனால் பாதிக்கப்படுகிறார்கள், இதனால் ஏற்படும் சமுக விளைவுகள் என்ன என்பதே இந்தக் கதை கையாண்டிருக்கும் களம்.
நான் கேட்டுக்கொண்டேன் என்ற ஒரு காரணத்திற்காக மறுப்புத்தெரிவிக்காமல் இந்தப்படத்தில் ஆரம்பம் முதல் இன்றுவரை தன் உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கும் NP N P Sarathy Nagappan இயக்குநர் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி.
இரண்டரைக் கோடி செலவு செய்து தானாகவே வெளியீடு செய்வது என்பது இலகுவான காரியமல்ல. ஆகவே நண்பனுக்கு வாய்பளித்த தயாரிப்பாளர் K Lakshminarayanan அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
படம் நாளை நல்ல வரவேற்பை எடுக்கும் என்று முழுமனதோடு நம்புகிறேன்.