NEO Mart

NEO Mart Shop easily

''மட்டக்களப்பில் சோளன் பயிர் செய்கையில் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கம்''மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை...
24/12/2020

''மட்டக்களப்பில் சோளன் பயிர் செய்கையில் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கம்''

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கத்தின் பரவல் காணப்படுவதாக மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

இதனைக் கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் களத்தில் நின்று துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இம்முறை பெரும்போக விவசாயத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளன் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான இலக்கைக் கொண்டு விவசாய நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த டிசம்பர் 15 வரையான காலப்பகுதியில் 1214 ஹெக்டேயர் சோளன் விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 738 ஹெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கத்திற்கான பரவல்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 தொடக்கம் 61 வீதமான தாக்கங்கள் இலைகளிலும், பூக்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கட்டுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த பீடைமுகாமைத்துவத் திட்டம், இயற்கை முறை மற்றும் இரசாயன கிருமி நாசினி விசிறல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

மேலும் விவசாயத் திணைக்களத்தினால் இந்நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக பௌலிஜன் எனும் திரவம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

''நாட்டில் நாணயத்தாள்களை பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை''நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் வ...
24/12/2020

''நாட்டில் நாணயத்தாள்களை பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை''

நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் இவ்வாறு போலி நாணத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும், எனவே நாணயத்தாள்களை பயன்படுத்துபவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பியகம பிரதேசத்தில் 20,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆயிரம் ரூபா பெறுமதியான 20 போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் ஹோமகம பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

''முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய இப்போது மாத்திரம் ஏன் பிரச்சினையாக இருக்கின்றது - சிங்கள ராவய''கொரோனா வைரஸ் தொற...
24/12/2020

''முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய இப்போது மாத்திரம் ஏன் பிரச்சினையாக இருக்கின்றது - சிங்கள ராவய''

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யவேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. கடந்த ஒன்பது மாதகாலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்யமுடிந்தது என்றால், இப்போது மாத்திரம் ஏன் இது பிரச்சினையாக இருக்கின்றது? என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்ற சர்ச்சையொன்று தற்போது உருவாகியிருக்கிறது. இந்நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் சடலங்களை அங்கிருந்து அகற்றும் வரையில் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து விலகியிருப்பதற்கு அவ்வைத்தியசாலையில் மருத்துவர் ஒன்றியம் தீர்மானித்திருக்கிறது.

ஏனெனில் சுகாதார நெருக்கடியொன்றின் போது அதுகுறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் சுகாதாரப்பணிப்பாளரிடமே காணப்படுகின்றது. அவர் பல மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களுக்கான இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்கு கராப்பிட்டிய வைத்தியசாலை நிர்வாகத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது காலி நீதிமன்றம் அந்த சடலங்களை பிரேத அறையிலேயே வைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறது. இதன் விளைவாக பிரேதப் பரிசோதனை வைத்தியர்களிதும் சிற்றூழியர்களினதும் சுகாதாரப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

அரசாங்கம் இப்பிரச்சினைக்கு முன்னரே தீர்வு கண்டிருக்க வேண்டும். தற்போது இது சமூகத்தின் மத்தியில் வெகுவாகப் பரவிவிட்டது. சடலங்களைத் தகனம் செய்வது குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் இனவாதத்தை நோக்கித் தள்ளப்படலாம் என்று நீதியமைச்சர் அலி சப்ரி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கின்றார்.

அவ்வாறெனின் இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி அவருக்கு சில விடயங்கள் தெரிந்திருக்கின்றன. நாட்டில் இல்லாத பிரச்சினைகளை அவர் தோற்றுவிக்கின்றார். தற்போதைய அரசாங்கத்தினதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் நற்பெயருக்கு அலி சப்ரி களங்கத்தை ஏற்படுத்துகின்றார்.

''வயது முதிர்ந்தோரையே கொரோனா அதிகம் பாதிக்கின்றது: சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே''வயது முதிர்ந்தோருக்கே கொரோனா வைரஸ் தொற்றி...
24/12/2020

''வயது முதிர்ந்தோரையே கொரோனா அதிகம் பாதிக்கின்றது: சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே''

வயது முதிர்ந்தோருக்கே கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன. இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அதற்காக விசேட சமூகப் பாதுகாப்பு செயற்திட்டமொன்றை உருவாக்கவேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

மேலும், நாட்டின் மிகமுக்கியமான பிரிவினருக்கு சேவையாற்றுகின்ற கட்டமைப்புகளாக சமூகசேவைத் திணைக்களமும் முதியோர் செயலகமும் விளங்குகின்றது. கொரோனா வைரஸ் பரவலினால் தற்போது நாடு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில், வயது முதிர்ந்தோரே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி விசேட சமூகப்பாதுகாப்பு செயற்திட்டமொன்றை உருவாக்குவதும் அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்சின், 'பத்வா கவுன்சில்' எனப்படும், அதிகாரமிக்க இஸ்லாமிய ஆணையம், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளுக்கு நே...
24/12/2020

ஐக்கிய அரபு எமிரேட்சின், 'பத்வா கவுன்சில்' எனப்படும், அதிகாரமிக்க இஸ்லாமிய ஆணையம், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளுக்கு நேற்று அனுமதி வழங்கயதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பன்றிகளில் இருந்து எடுக்கப்படும், 'ஜெலட்டின்' என்ற மூலப் பொருளை வைத்து தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மக்களுக்கு செலுத்தலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொலிஸ் அதிகாரிகளுக்கு உ...
24/12/2020

நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நத்தார் தேவ ஆராதணைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Address

London
IG1AZ

Alerts

Be the first to know and let us send you an email when NEO Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NEO Mart:

Share