ISD Media Tamil

ISD Media Tamil 🔹Islamic contens
Invite to the path of your Lord with wisdom and good advice(16:125)

30/03/2026

ஈமானில் உறுதியாக வாழ்ந்து உயிர் காப்பாற்றப்படும் போது.... ஹுசைன் மன்பாஇ
#மரணநேரம் #உயிர் காப்பாற்ற படல்

03/06/2024

ராசுலுல்லாஹ்வின் இறுதி நிமிடங்கள்........

எங்களை விட்டு பிரிந்த சகோதரர் #கோவைஅய்யூப் அவர்களின் உறுக்கமான உரையின் சில வரிகள்....

யா அல்லாஹ் அவரின் பணிகளை பொருந்திகொண்டு, அவர் மனிதர் என்ற அடிப்படையில் செய்த பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸில் ஒன்று சேர்ப்பயாக.......

19/01/2024

Today's jummah bayan
Dharul huda Jummah masjid Dharga town

16/01/2024

அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பு ~ சுவனம் நுழையும் கடைசி மனிதன்..... Hussain(manbai)

15/10/2023

இந்த யூ*ர்*ள் (சியோனி*ட்*ள்) எந்தளவு கொடுரமானவர்கள் என்று பாருங்கள்..... | மொவ்லவி ஹுசைன் (மன்பாஇ)

** 2015 காஸாவில் நடந்த சம்பவம் but இன்றைக்கும் பொருந்தும்

09/10/2023

மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள
இடத்தைப் பற்றி அல் குர்ஆன் கூறும் செய்திகள்.
______________________________________________

1) பறகத் பொருந்திய பூமி🌷

وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏
ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும். எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.

(அல்குர்ஆன் : 21:81)

الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ

( (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 17:1)

மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கிப் பிரயாணம் செல்வதையும், அங்கே சென்று தொழுவதையும் பாக்கியம் நிறைந்த காரியமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான், மேலும் பிரயோஜனம் தரும் மரங்களைக் கொண்டும், ஆறுகளைக் கொண்டும், பல வகையான பழங்களை வழங்கியும் அதனை சூழவுள்ள பகுதியை அல்லாஹ் செழிப்பாக்கியுள்ளான்.

2) தூய்மையான பூமி 🌺

يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَىٰ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ

21. "என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்கள்!'' (என்றும் மூஸா கூறினார்)

திருக்குர்ஆன் 5:21

அல்லாஹ்வால் இப்பூமிக்கு அனுப்பப்பட்ட பல இறைத்தூதர்கள் வாழ்ந்த பூமி அது, உலகிலே இரண்டாவதாக அல்லாஹ்வை வணங்கக் கட்டப்பட்ட இறையில்லம் அமைந்த பூமி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாமாக நின்று அனைத்து நபிமார்களுக்கும் தொழுகை நடாத்திய பூமி அது .

3) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் விண்வெளிப் பயணத்துக்காக பிரயாணம் செய்த பூமி.🍁

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 17:1)

ஒரே இரவில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு நபி (ஸல்) அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் அழைத்து சென்றார்கள் . அங்கிருந்து நபி (ஸல்) அவர்கள் புராக் எனும் வகானத்தில் விண்வெளிப் பிரயாணத்தை மேற்கொண்டார்கள்.

4) முஸ்லிம்களின் முதல் கிப்லா
அமைந்த பூமி 💓

وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏

(நபியே!) நீங்கள் (இதுவரை முன்நோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீங்கள் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாது தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காகத்தான். ஆனால் எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். தவிர, (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்களுடைய நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகக் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 2:143)

நபிகளாரின் விண்வெளிப் பயணத்தில்
ஐவேலைத் தொழுகை கடமையாக்கப்பட்டது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 16/17 மாதங்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் மஸ்ஜிதுல் அக்ஸாவை முன்னோக்கியே தொழுதார்கள். பின்னர் தான் நபிகளாரின் விருப்பப்படி மஸ்ஜிதுல் ஹராம் கஃபா கிப்லாவாக மாற்றப்பட்டது.

நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ

09/10/2023

எப்படி இருந்தாலும் இஸ்ரவேலர்கள் பாலஸ்தீனர்களைக் கொல்லத்தான் போகிறார்கள். அதற்கு நாங்கள் போராடி கௌரவமாகச் சாகிறோம் என்கிறார்கள் Gaza வில் இருக்கிற லட்சக்கணக்கான இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும்.

ஹமாஸ் க்கு எங்கிருந்து இத்தனை ரொக்கட்டுகள் கிடைத்தன என்பதுதான் BBC போன்ற கேவலங்கெட்ட மீடியா அரக்கர்களுக்கு இன்றைக்கு இருக்கிற தலையாய கேள்வியாக இருக்கிறது.
ஈரான் கொடுத்ததா, துருக்கி கொடுத்ததா எனத் துருவித் துருவிக் கேட்கிற கேவலங்கெட்ட இரட்டை வேடத்தைத் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறார்கள்.

யார் கொடுத்தால்தான் என்ன...
அங்கே போர் நடக்கிறது. குண்டு வெடிக்கும் உடல்கள் வீழும்
உயிர்கள் மாயும் நியதி அதுதான்.
எல்லாப் பக்கத்திலும் இழப்புகள் இருக்கும்.

கேவலங்கெட்ட இஸ்ரேலிய அரசு யூதர்களில் படிநிலையில் மூன்றாவதாக இருக்கிற யூதர்களை அவர்களது ஆயுதக்கிடங்குகளைச் சுற்றி குடியமர்த்தி மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள். ஆயுதங்கிடங்குகள் மீது ரொக்கட் விழுந்தால் ஹமாஸ் பொதுமக்களைக் தாக்குகிறது என உலக மீடியாக்களுக்கு படம் காட்டுகிறார்கள்

இன்றைக்கு ஒரு உலகத்தலைவர் சொல்லி இருக்கிறாரே, 'பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் நிம்மதிமாக உறங்கினால் தான் இஸ்ரவேலர்கள் இன் குழந்தைகள் நிம்மதிமாக உறங்க முடியும்' என்று.
இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது!

மேற்கத்திய ஊடகங்களே, இஸ்ரவேலர்கள் இஸ்லாமிய்ரகள் மீதும் கிருத்தவர்கள் மீதும் செய்த எந்த அட்டூழியமும் இந்த எழுத்தைப் ஆண்டுகளில் உங்களுக்குத் தெரியவே இல்லையே. நீங்கள் எல்லாம் குருடன்களா!

ஆனால் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் திருப்பி அடிக்கிற போது உங்களுக்கு இருப்புப் கொள்ளவில்லை. இவ்வளவுதான் உங்களது மாண்பும் மனிதாபிமானமும், இல்லையா! நாங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். உங்களைப் போல கேவலமான ஜந்துக்களை நாங்கள் சபிக்கிறோம்.

உங்களது பொளக்கடையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், எப்படிப் பதறுகிறீர்கள். எத்தனை எத்தனை ஆண்டுகளாக பாலஸ்தீனர்கள் அந்த மண்ணில் வதைக்கப்படுகிறார்கள். ஏன் அப்போதெல்லாம் உங்களது சதை ஆடவில்லை! உங்களது உள்ளங்களில் கருணை பொங்கவில்லை!
ஏனெனில் நீங்கள் எல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறீர்கள். உங்களது முதலாளிமார் யார் என்று நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆதலால் எங்களுக்கு ஆச்சரியங்கள் இல்லை. நீங்கள் நடத்துங்கள். உங்களது ஆட்டமும் ஒருநாள் முடிவுக்கு வரத்தானே வேண்டும்.

எழுவத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்களுக்குள் இருந்த இனவெறிக்கு இன்றை வரைக்கும் பாலஸ்தீனர்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. உங்களது கசடுகளை அவர்களின் மீது ஏற்றி விட்டீர்கள். உங்களுக்குள் அரிப்பெடுக்க, அடுப்புக் கொள்ளியால் பாலஸ்தீனர்களது தலையைச் சொறிந்து விட்டீர்கள்.
உங்களோடு கூடவே ஐரோப்பா முழுவதும் பரவி இருந்த யூதர்களை விரட்டி, அவர்களது சொத்தை எல்லாம் சுரையாடி விட்டு, பாலஸ்தீனர்களை உங்களது பாவக் கடனை அடைக்க வைக்கிறீர்கள்.நீங்கள் எவ்வளவு நல்லவர்கள்!

எத்தனை லட்சம் பேரை யூதர்கள் அந்தப் பிரதேசத்தில் இதுவரையும் கொன்றிருக்கிறார்கள்! அப்போதெல்லாம் முன்னும் பின்னும் பொத்திக்கொண்டிருந்த உங்களுக்கு, இப்போது மட்டும் நவதுவாரங்களிலும் கறித்தூளைத் தடவியது போல எரியுது!
நீங்கள் எல்லாம் நல்ல நியாயவாதிகள் ஐயா!

நீங்களும் உங்களது பசப்பும்
உங்களது கீழ் செயல்கள் ஒருநாள் உங்களையே கேள்வி கேட்கும். அப்போது உங்களது மூஞ்சை எங்கே கொண்டு வைத்துக் கொள்வீர்கள்!

✍️Who Reverted to islam

26/09/2023

வாழ்க்கையில் துன்பமா, கஷ்டமா இந்த துஆ வை தனிமையில் ஓதுங்கள் அல்லாஹ் நிச்சயம் கஷ்டத்தை நீக்குவான் | Tamil bayan | Hussain manbae

18/09/2023
14/08/2023

இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) ஒரே நேரத்தில் சுபிகளுக்கும் தாத்தாரியர்களுக்கும் எதிராக நடாத்திய போராட்டங்கள் | Hussain manbai

Address

Main Street
Aluthgama

Alerts

Be the first to know and let us send you an email when ISD Media Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share