Charan LiveStocks

Charan LiveStocks ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்புமுறை மற்றும் விற்பனை வாய்ப்பு

30/04/2020

ஒரு குட்டி கணக்கு
அதாவது பண்ணையில் அதிக எண்ணிக்கையில் இருப்பது பெட்டை ஆடுகளே, இப்படியிருக்க பெட்டை ஆடுகள் கிலோ 500-600 என்று வாங்கினால் 40 கிலோ இருக்கும் தாய் ஆட்டிற்கு 20 ஆயிரம் ஒரு ஆட்டிற்கு செலவு செய்து 50 தாய் ஆடுகள் என வைத்துக்கொள்வோம் அப்போ 10-12 இலட்சம். ஒரு ரூபாய் வட்டி போட்டால் கூட மாதம் குறைந்தது10 ஆயிரம் மற்றும் கொட்டகை ஒரு 5 இலட்சம், ஆக மாதம் 15 ஆயிரம் வட்டி வரும்...சரி மாதம் 10 குட்டிகள் விற்கிறோம் என வைத்துக்கொள்வோம். சராசரி ஒரு குட்டி 6,000 என வைத்துக்கொள்வோம் அப்போ 60 ஆயிரம். வட்டி போக 45,000. தீவன செலவு 10,000 + வேலையாட்களுக்கு 15,000..மீதம் 20,000 மாதம் இதற்கு 2 ஏக்கர் நிலம்..இறப்புகளை கணக்கிடப்படவில்லை, மருந்து செலவு கணக்கிடப்படவில்லை...இது இலாபமா இல்லை

100 குட்டிகள் 4 இலட்சத்திற்கு வாங்கி 3 மாதத்தில் 6 இலட்சம்....
3 மாத வட்டி 12,000
தீவன செலவு 3 மாதத்திற்கு 30,000
வேலையாட்களுக்கு 3 மாதத்திற்கு 45,000
ஆக செலவு 87,000+முதலீடு 4,00,000 = 4,87,000
நிகர இலாபம் 6,00,000-4,87,000 = 1,13,000(மூன்று மாதங்களுக்கு) அப்போ மாதம் 37,666
பரண் எதுவும் தேவையில்லை சாதாரணமான கீற்றுக்கொட்டகை போதும்...

தங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தா சொல்லுங்க

26/04/2020

செலவில்லா ஆடுவளர்ப்பு பற்றி தெளிவான கட்டுரை விரைவில்

19/04/2020

போயர் ஆடு அதிக பண்ணைகளில் இல்லை ஏன்?

1. விலை அதிகம்
2. ஆரம்பப்பண்ணையாளர்கள் போயரை தெர்வு செய்கிறார்கள் இருந்தாலும் அதனுடைய குட்டிகளை அவரவர்கள் வாங்கிய விலைக்கு விற்கணும் என்று, எப்படி பார்த்தாலும் முதல் தரமான போயர் போல இருக்காது
3. ஆரம்பப்பண்ணையாளர்களின் போயர் தரமில்லாதததாலும் அதிலிருந்து குட்டிகள் அதிக எடையோடு வளருவதில்லை
4. தரமில்லாத/50% போயரை தேர்வு செய்து அதிலிருந்து பிறக்கும் குட்டிகள் அதிக எடை வருவதில்லை.
5. போயர் இறைச்சியின் சுவை நல்லா இல்லையென்று. இது முழுக்க முழுக்க தவறு
6. கலப்புத்தீவணம் இல்லாமல் வளர்த்தாள் எடை கூடாது அப்புறம் போயரில் வளர்ச்சி இல்லை என்று சொல்வது.
7. போயர் என்றால் ஒரு பிராய்லர் என்று ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிவிட்டனர். இது முழுக்க பொய். இது ஒரு கலப்பின ஆடே கிடையாது.
8. கறிக்கடையில் வாங்குவது இல்லை என்று. இதுவும் முழுக்க தவறான தகவல்.
9. போயர் ஆடுகளை வளர்க்காதவங்கத்தான்
போயரை பத்தி அதிகம் பேசுராங்க

19/04/2020

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு மற்றும் விற்பனை பதிவுகள் இடம் பெரும்

Address

Kural West
Kallakkurichchi
606201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charan LiveStocks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share