Deiveegaa

Deiveegaa Spreading Knowledge

ஹரிஹர பஞ்சாக்ஷரம்:- பொதுவாக பஞ்சாக்ஷரம் என்றால் அது “நம: சிவாய” என்னும் சிவபஞ்சாக்ஷரி மந்திரம் தான் நமக்குத் தெரியும்.ஆன...
27/05/2024

ஹரிஹர பஞ்சாக்ஷரம்:- பொதுவாக பஞ்சாக்ஷரம் என்றால் அது “நம: சிவாய” என்னும் சிவபஞ்சாக்ஷரி மந்திரம் தான் நமக்குத் தெரியும்.ஆனால் நாராயண உபநிஷதத்தில் ஸ்ரீநாதனான நாராயணனுக்கும் பஞ்சாக்ஷரி மந்திரம் கூறப்பட்டுள்ளது. “नारायणाय इथि पञ्चाक्षराणी” — नारायण उपनिषदां !! “நாராயணாய இதி பஞ்சாக்ஷராணி” –நாராயண உபநிஷத்.
பொருள்:- “நாராயணாய” என்னும் ஐந்தெழுத்து. பஞ்சாக்ஷர ஜபம் என்பது இன்றி அமையாத ஒன்று.அது சிவனுடையாதாக இருந்தாலும் சரி, திருமாளுடையதாக இருந்தாலும் சரி நாமஜபம் நன்றே பயக்கும். இருவருரையும் “சிவாவிஷ்ணு” பேதம் இன்றி ஒன்றாக சேர்த்து, “நம: சிவாய ! நாராயணாய !!” என்று ஜபம் செய்தால் மிகுந்த பலன் கிட்டும்.
“சிவாய விஷ்ணுரூபாய சிவரூபாய விஷ்ணவே ! சிவஸ்ச ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணுஸ்ச ஹ்ருதயம் சிவ: !!”
பொருள்:- சிவபிரான் விஷ்ணுரூபத்திலும், விஷ்ணு சிவனின் ரூபத்திலும் உள்ளர்.விஷ்ணுவின் இதயத்துள் சிவன் மட்டுமே உள்ளார்.சிவனின் இதயத்திலும் திருமால் விஷ்ணு மட்டுமே உள்ளர்.” என்பது நம் சான்றோர் வாக்கு. ஆதலால் சைவ வைணவ பிரிவின்றி, சிவாவிஷ்ணு த்வேஷமின்றி ஹரிஹரனை வணங்குவோம்.
“நம: சிவாய ! நாராயணாய !!”

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் !சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் ...
25/05/2024

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் !
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது காரணம் கண்திருஷ்டி.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நன்மை ஏற்படும்.
மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் "கடல் தண்ணீர்".
கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.
எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள "சப்த சக்கரங்களை" பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.
கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும்."ஸ்ரீராமர்" பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார்.
கடல் நீரே விசேஷமானது

*சகல வல்லமையும் தரும்* *சதுர தாண்டவ நடராஜர்*!இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில், சடாமுடியை முடிந்து, கால்களின் கீழே ...
25/05/2024

*சகல வல்லமையும் தரும்* *சதுர தாண்டவ நடராஜர்*!
இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில், சடாமுடியை முடிந்து, கால்களின் கீழே முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர் என்ற ஆதிரை நாயகனின் திருக்கோலம் இருக்குமிடம் தெரியுமா?
அனைத்து கோவில்களிலும் நடராஜர் காலைத் தூக்கி வைத்தபடி ஆடிய கோலத்திலேயேதான் பார்த்திருப்போம்.
ஆனால் திருச்சி மாவட்டம் குமாரவயலூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் அபூர்வமாக இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில், சடாமுடி முடியப்பட்டும், கால்களின் கீழே முயலகன் இல்லாத, ஆரம்ப நிலையிலான சதுர தாண்டவக் கோலத்தில் "சதுர தாண்டவ நடராஜர் "என்ற நாமத்துடன் அற்புதத் திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீநடராஜப் பெருமான்.
சிவனார் தாண்டவமாடிய தலங்களில் ஒன்று என்பதால், இந்தத் தலத்தை உப விடங்கத் தலம் என்கிறார்கள்!
சிவனார் ஆடிய 108 தாண்டவங்களில் முதன்மையான சதுர தாண்டவக் கோலத்தில்
இங்கே காட்சி தரும் ஸ்ரீநடராஜ பெருமானை பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
சிதம்பரம் தலத்தில் தில்லை அம்பலவாணனுக்குச் செய்யப்படுவது போலவே,இங்கு அனைத்து ஆராதனைகளும் "சதுர
தாண்டவ நடராஜருக்கு" செய்யப்படுகின்றன.
கால்கள் இரண்டையும் மடக்கி, முன்னும் பின்னுமாக சதுர வடிவில் வைத்தபடி ஆடும் அரிய கோலத்தில் காட்சி தரும் சதுர தாண்டவ நடராஜரை தரிசித்து வணங்குவது சிறப்பான பலனைத் தருமாம்!
நடராஜருக்கு உகந்த ஆறு அபிஷேக காலங்களில் இவரை வணங்குவது சிறப்பு.
திருவாதிரை நட்சத்திர நாளில், இங்கு வந்து "சதுர தாண்டவ நடராஜருக்கு "அபிஷேகம் செய்து வணங்கினால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் .
முக்கியமாக, திருவாதிரை நாளில், சதுர தாண்டவ நடராஜரை வணங்கினால், பெரும் வல்லமையும் பேராற்றலும் பெறுவர்; எவரையும் வெல்லும் திறன் அதிகரிக்கும்; கலைகளில் ஆர்வமும் திறனும் ஏற்படும்.
தவிர, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்
மார்கழித் திருவாதிரையிலும் மற்ற தமிழ்மாத திருவாதிரை நட்சத்திர நாட்களிலும் இங்கு வந்து அம்பலவானனை ஆத்மார்த்தமாக வேண்டி வழிபட்டால்,அவர்களது ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரக தோஷங்கள் யாவையும் விலக்கி அனைத்து வரங்களையும் தந்தருள்கிறார் இந்த அபூர்வமான ஆதிரை நாயகன்!
ஆதிரை நாயகன் அபூர்வமான,அற்புதமான சதுர தாண்டவ திருமேனியராகக் காட்சி தரும் படம் கீழே 👇👇

*திருவேற்காடு கருமாரியம்மன்**கோயில் பற்றி பார்ப்போம்**பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில்* ...
25/05/2024

*திருவேற்காடு கருமாரியம்மன்*
*கோயில் பற்றி பார்ப்போம்*
*பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில்* *விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன், மிகப்பெரிய புற்றில்* *கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி* *உருமாறி நின்றதும் இங்குதான் அருள்* *பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி*
*சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீக்வதற்காக தேவலோகம் செல்ல* *வேண்டிவந்தது அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார்*
*அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான்* *சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி*
☄1. அந்தரக்கன்னி,
☄2. ஆகாயக்கன்னி,
☄3.பிரமணக்கன்னி,
☄4. காமாட்சி,
☄5. மீனாட்சி,
☄6.விசாலாட்சி,
☄7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள்.
*இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள் பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர்*
*சக்தியாகிய கருமாரி இரண்டு உருவம்* *கொண்டாள் முதல் உருவம்* *பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது*
*கருமாரி மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள் இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார் அப்போது அம்மன்* *அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம்* *கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன்* *கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம்* *எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது*
*அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது* *விஷேசம் மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது*
*மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது*
*இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன கடன் கந்து வட்டி தீர்தல்* *வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில்* *வேண்டிக்கொள்கின்றனர்*
*பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி* *முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது* *வழக்கமாக உள்ளது இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள்*
*பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு*
*திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப்* *பற்றி பாடியுள்ளார்,திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான* *வேதபுரீஸ்வரர் - பாலாம்பிகை ஆலயமும்* *அருகிலேயே உள்ளது*
*அகத்தியருக்குத் திருமணக் காட்சி அருளிய தலம் இது*
*அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு*
*அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு*
*கூரை வேய்ந்த கோவில் அமைத்து முதன் முதலில் கருமாரியம்மனுக்கு உருவமாக* *ஏழு கரகங்கள்" பிரதிஷ்டை செய்தவர்* *மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள்*
*தற்போது ஒவ்வொரு கருமாரியம்மனின் திருவுருவப் படத்தில் வலது புறத்தில்* *பானையுடன் முகம் அமைய பெற்று மற்றும் வேப்பிலையுடன் காட்சி* *அளிக்கிறதே அதுதான் "கரகம்". இதன்* *பொருள் கருமாரியம்மனின் ஆதி உருவம் "கரகம்" என்பதுதான்*
*மாரி என்றால் மழை போன்றவள் கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை* *போன்று அருளை வாரி வழங்கும் அம்மன்* *என்று பொருள்*
☄க - கலைமகள்;
☄ரு - ருத்ரி;
☄மா - திருமகள்;
☄ரி - ரீங்காரி (நாத வடிவானவள்)
*என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது*
*மூலவரான அன்னை சுயம்புவாக சாந்தசொரூபியாக காட்சி அளிக்கிறாள்* *இவளுக்குப் பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம் டமருகம் கபாலம் ஏந்தி* *காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி* *காட்சி தருகிறாள்*
*அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி* *நவகிரகம் சீனிவாச பெருமாள்* *ஆஞ்சநேயர் தட்சிணாமூர்த்தி*
*காயத்ரி மஹாலக்ஷ்மி அங்காளம்மன்* *சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி*
*எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள்* *இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன*
*சகல நோய்களையும் தீர்க்கும் அம்மனின் பிரசாதமான வேப்பிலையை மக்கள்* *பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர் தீர்த்தமும் வேப்பிலையும் தீராத* *நோய்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையும் பிரம்பும் கொண்டு இங்கு* *மந்திரிக்கப்பட்ட மக்கள், எந்த பயமும்* *இன்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள்*
*ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றினால் தோஷங்கள் விலகுகின்றன*
*திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல் முடிகாணிக்கை, தேர் இழுத்தல்* *குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை* *மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம்*, *பொங்கல் வைத்தல் அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம்* *கண்ணடக்கம் வெள்ளிக்காணிக்கை *செலுத்தபடுகிறது*
*ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால் கோபம் கொண்ட சக்தி* *அவனை சபித்து இருளாக்கினாள்* *பின்னர் கோபம் தணிந்த அன்னை* *சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த* *தலத்தில் அமர்ந்து சூரியனின்* *பூஜையைப் பெறுகிறாள் என்று* *வேறொரு வரலாறு கூறுகிறது*
*புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு* *கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்*
*புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள்*
*ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வாரங்களும் இங்கு* *அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாள்கள் மேலும் தை மாத பிரம்மோற்ஸவம்* *அமாவாசை, சித்ரா பௌர்ணமி* *நவராத்திரி என எல்லா மாதங்களுமே* *அம்மனுக்கு இங்கு விழா நாள்கள்தான்*
*காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு* *கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு* *ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே* *விளங்கி வருகிறது*
*இந்த ஆலயத்தில் இருக்கும் 'பதி விளக்கு* *அணையாத விளக்கு அம்மனையும் இந்த* *விளக்கையும் தரிசித்தால்மாங்கல்ய பலம்* *பெறுவார்கள் என்பது ஐதீகம்*
*தன்னை நம்பி வரும் பெண்களுக்கு* *மாங்கல்ய வரமளித்து அவர்களை* *சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம்* *காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10* *மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய* *தோஷ பரிகார பூஜை சிறப்பானது*
*தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி* *சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை* *அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது, இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது*

*ஸ்ரீசக்கரத்தின் மகிமை:* எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு.ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்க...
25/05/2024

*ஸ்ரீசக்கரத்தின் மகிமை:*
எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு.
ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
மூன்றின் பலம்
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன் பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.தேவி கட்கமாலா கூறும் நவ ஆவரணம் - சிறு விளக்கம்
முதல் நவாவரணத்தில்
முதல் ஆவரணம்
இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.
முதல் நவாவரனத்தில் முதல் ரேகை, இது பூபுரம் எனப்படும். ஸ்ரீ லலிதா மகாதிரிபுரசுந்தரியின் நகரத்தின் (ஸ்ரீ புரம் என்பது தேவியின் சாம்ராஜ்யம் ) துவக்கம். நான்கு வாயில்களுடன் கூடியது. இதில் மூன்று ரேகைகள் உண்டு. இதன் தேவி திரிபுராபகவதி.
இரண்டாவது ஆவரணம்
பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும். வெண்மை நிறமுடைய இதில் பதினாறு ஆகர்ஷன சக்திகள் உண்டு.
மூன்றாவது ஆவரணம்
பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.இதன் தேவி திரிபுரசுந்தரி. செம்பருத்தி பூ போன்ற நிறம். சிவபெருமானைத் தத்துவமாகக் கொண்டது. எட்டு தாமரை இதழ்களால் ஆனது. எட்டு தேவதைகளை கொண்ட சக்கரம். பக்தனின் அச்சத்தை நீக்கி பாதுகாப்பை அளிக்கும் தேவதைகள் .
இந்த எண்மரும் மிகவும் உக்கிரமான தேவதைகள் . ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பவர்களுக்கும், வழிபடுபவர்களுக்கும், அவர்களின் எதிரிகளை அடக்கி தேவையெனில் அழித்து பக்தர்களை காப்பாற்றுவார்கள்.
நான்காவது ஆவரணம்
இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.பரமாத்மா பதினான்கு புவனங்களிலும் நிறைந்திருப்பதை விளக்கும் வகையில் பதினான்கு முக்கோணங்களை கொண்ட சக்கரம். இது மாதுளம் பூ நிறமுடையது . இந்த ஆவரணத்தின் தலைவி திரிபுரவாஸினி .
ஐந்தாவது ஆவரணம்
பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.திரிபுராஸ்ரீ என்னும் அம்பிகையை தலைவியாக கொண்ட இந்த சக்கரம் பத்து முக்கோணங்களை கொண்டது. குருவை இறையுருவாக வழிபடுதல் இந்த சக்கரத்தின் சிறப்பு.
ஆறாவது ஆவரணம்
அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.வழிபடுவோரின் ஜீவனை பாதுகாக்கும் சக்கரம். இதில் பத்து கோணங்கள். செம்பருத்தி பூ நிறம். இதன் தலைவி திரிபுரமாலினி.
ஏழாவது ஆவரணம்
புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.ரோகம் என்பது வியாதி, ஹரம் என்பது நீக்குதல். அஞ்ஞானம் என்பதே எல்லா ரோகங்களுக்கும் காரணம் .இந்த சக்கரத்தின் தேவி திரிபுராசித்தா. சிகப்பு நிற மலர்களால் அர்ச்சிக்கப்படுகிறாள். எட்டு முக்கோணங்களை கொண்டது இந்த ஆவரணம். இந்த சக்கரத்தை வழிபடும்போது அறியாமை மட்டுமின்றி உடல் ரீதியான வியாதிகளும் நீங்கும்.
எட்டாவது ஆவரணம்
மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.சர்வ சித்தி என்பது ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும். இது மூன்று கோணங்களை உடையது. பாசம், அங்குசம், பாணம், கரும்புவில் ஆகிய ஆயுதங்களின் மண்டலங்கள் இவற்றில் உள்ளது.
இந்த யந்திரம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி வடிவமானது. அக்னி, சூரிய, சந்திர வடிவமான இந்த ஆவரணத்தின் தலைவி திரிபுராம்பா.
ஒன்பதாவது ஆவரணம்
பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.முழுநிறைவான ஆனந்தமயமான நிலையில் சிவனோடு இணைந்து அன்னை தம்பதிசமேதராக அருள் பாலிக்கும் இடம். ஸ்ரீ வித்யை, ஸ்ரீ சக்கர வழிபாடு சாக்த மரபு என்பது சிலர் கருத்து. சாக்தம் என்பது அம்பாளை மட்டுமே வழிபாடு செய்வது . ஆனால் சிவனையும் சக்தியையும் இணைத்து சிவசக்தி ஐக்கிய ரூபமாக வழிபடுதலே ஸ்ரீ வித்யையின் சிறப்பு. சிவமின்றி சக்தி இயங்காது. சக்தி இன்றி சிவமும் அசையாது.
இந்த எட்டு ஆவரணங்களையும் பூஜித்து படிப்படியாக பண்பட்டு ஒன்பதாவது ஆவரண பூஜையின் போது உபாசகன், தான் பரபிரம்மத்தின் அங்கம், தன்னுள் இறைவன் நிறைந்திருக்கிறான் என்ற உணர்வை அடைகிறான்.
இந்த ஸ்ரீசக்ரத்தில் வீற்றிருந்த அன்னையே ஸ்ரீ மகாதிரிபுரசுந்தரி. ஸ்ரீ ராஜராஜேஸ்வரியும் இந்த அன்னையே.
ஒன்பதாவது ஆவரணத்தில் வீற்றிருக்கும் அன்னைக்கு காமேஸ்வரி என்றும் சிவனுக்கு காமேஸ்வரன் என்றும் திருநாமம். இந்த சிவசக்தி ஐக்கிய நிலையே இந்து மதத்தில் வழிபாடு செய்யப்படும் அனைத்து தெய்வங்களுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ஈரேழு லோகம், உயிர்கள் அனைத்திற்கும் மூலம்.
ஓம் ஸ்ரீ லலிதாமஹா திரிபுரசுந்தரி தாயே
நமஹா!

ஸ்ரீசடாரி பற்றிய பதிவுகள் ..!பெருமாள்  கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து சிரசில் சடாரியை வைத்து அருளாசி ...
25/05/2024

ஸ்ரீசடாரி பற்றிய பதிவுகள் ..!
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.
நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார்.
உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர
ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும்.
இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும்.
மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.
சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை.
ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார் தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார்.
பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு.
அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது.
சடாரியை தலையில் தாங்கினால், நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.
சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.
ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.
எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தம் நம் மனதில் ஏற்படுகிறது.
சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி , வாய் பொத்தி குனிந்து பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்...!!
ஓம் நமோ நாராயணாய..!!🙏🌹🙏

தினம் ஒரு திவ்யபிரபந்தம் (Dinam Oru Divyaprabandham) – 3390அன்புடைய பக்தர்களே,இன்று எனது 3390ம் திவ்யபிரபந்தம் பதிவு – ந...
25/05/2024

தினம் ஒரு திவ்யபிரபந்தம் (Dinam Oru Divyaprabandham) – 3390
அன்புடைய பக்தர்களே,
இன்று எனது 3390ம் திவ்யபிரபந்தம் பதிவு – நாமழ்வார் அருளிய
திருவாய்மொழி ஆறாம்பத்து
(3390)
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலங் கண்டபின்,
அற்க மொன்றும் அறிவு றாள்மலிந் தாள்கண் டீரிவள் அன்னைமீர்,
கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல் வண்ணன் கண்ணபி ரானென்றே,
ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையுமே.

20/05/2024

💐காரிய தடை, கண் திருஷ்டி, செய்வினை, ஏவல் நீக்கி, செல்வ வளம் பெருக்கும் அசல் புனுகு!!💐

✨இலவசம்!! இலவசம்!! எங்களிடம் அசல் புனுகு பெறும் அன்பர்களுக்கு, 40 ஆண்டிற்கான முழமையான ஜாதக பலன்கள் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு தொழில், திருமணம், வீடு கட்ட உகந்த காலம், நோய், எதிராளி என அனைத்து அமைப்பிற்கான பலன்களும் ஆய்வறிக்கையாக வழங்கப்படும்.✨

☀️💥தங்களது வீட்டில் அபிசார தோஷங்களான கண்திருஷ்டி, குலதெய்வ அருள் இன்மை, லட்சுமி கடாட்சம் இன்மை, திருமண தோஷம், புத்திரபாக்கியம் இன்மை, குடும்பத்தில் அமைதி இன்மை, நல்ல வேலை கிடைக்கவில்லை, போன்ற பரிச்சனைகள் இருக்கிறதா? அல்லது வியாபாரத்தில், மந்த நிலை, நஷ்டம், கைப்பொருள் இழப்பு, பணம் கையில் தங்குவது இல்லை என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கிறதா? இது மிகவும் சுலபமான முறையாகும். முயற்சி செய்து பாருங்கள் 💥☀️

📱100% இயற்கையான, அசல் புனுகு பற்றி, மேலும் விபரங்களுக்கு 06381173205 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது whatsapp (https://wa.me/916381173205) செய்யவும். 📱

⚡️✨புனுகின் சிறப்பை அறிய ஒரு உதாரணம் – “திருப்பதி கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் வெங்கடாஜலபதி சிலைக்கு புனுகு கொண்டு பூர்ணாபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்கின்ற போது இறை சக்தி முழுமையுமாக ஸ்தாபிக்கப்படுகிறது.✨⚡️

🙏” 108 திவ்ய தேசங்களில், முதன்மையான ஶ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் பூர்னாபிஷேகத்திற்கு நாங்கள் தான் புனுகு சாற்றுகிறோம் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய ஆன்மீக பொக்கிஷம் இந்த அசல் புனுகு.🙏

💵அசல் புனுகின் விலை விபரம் ஒரு கிராம் - ரூ.1550/- மட்டுமே. 💵
1கிராம் அளவு தாராளமாக ஒரு வருட காலம் பயன்பாட்டிற்கு வரும்.
💻எங்களது ஆன்லைன் வலைத்தளத்தின் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம். www.deiveegaa.com💻
**********************************************************************
100% இயற்கையான, அசல் புனுகு பற்றி, மேலும் விபரங்களுக்கு 06381173205 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது whatsapp (https://wa.me/916381173205) செய்யவும்.

அனுமனுக்கு பூலோகம் தான் வைகுண்டம்.ஸ்ரீராமர் பூமியில் தோன்றிய காரணங்கள் நிறைவேறி விட்டன. ராமருடன் வந்த லட்சுமணன் தன் இருப...
17/05/2024

அனுமனுக்கு பூலோகம் தான் வைகுண்டம்.
ஸ்ரீராமர் பூமியில் தோன்றிய காரணங்கள் நிறைவேறி விட்டன. ராமருடன் வந்த லட்சுமணன் தன் இருப்பிடம் சேர்ந்துவிட்டான்.
சீதா தேவியாக பிறவி எடுத்த லட்சுமி தேவியோ , ராமருக்கு முன்பாகவே வைகுண்டம் சென்று காத்திருக்கிறாள்.
ஆனால் ஸ்ரீ ராமரால் காலதேவன் கேட்டுக் கொண்டதன் படி அவ்வளவு சுலபமாக பூவுலகை விட்டு செல்ல முடியவில்லை. ராஜ்யத்தை தன் பிள்ளைகளுக்கும் மற்ற சகோதரர்களின் வாரிசுகளுக்கும் பிரித்து கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கனனும் ஸ்ரீராமருடன் புறப்பட தயாரானார்கள்.
ஆனாலும் ஸ்ரீ ராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை. என்ன காரணம்???
சாட்சாத் அந்த அனுமன் தான் முக்கிய காரணம். அனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகாமையிலேயே இருந்து அவர் பணிகளை செய்கிறான்; அவரை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டான்.
பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக அனுமனுக்கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார்.
ஒரு நாள் ராமர் அனுமன் பேசிக்கொண்டிருந்தார். அனுமன் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது.
உடனே இராமன் அனுமனை நோக்கி. அனுமனே! அந்த மோதிரம் பள்ளத்தில் விழுந்து விட்டது. அந்த மோதிரத்தை எடுத்து வா என்று கூறினார்.
அனுமன் தன் உடலை மிகச்சிறிய பூச்சி வடிவாக்கிக் கொண்டு மோதிரம் விழுந்த பள்ளத்தில் நுழைந்தார்.
ஆனாலும் மோதிரமோ கழுவிக்கொண்டு பாதாளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அனுமனும் விடாமல் மோதிரத்தை பின்தொடர்ந்தார்.
இறுதியில் அந்த மோதிரம் பாதாள லோகத்தின் வாயிலை அடைந்தது. பாதாள லோகத்தில் கதவு திறந்துகொள்ள மோதிரம் உள்ளே நழுவி விட்டது. பாதாள லோகத்தில் கதவும் மூடிக்கொண்டது.
மோதிரத்தை பின்தொடர்ந்த அனுமன் பாதாள லோகத்தில் வாசலில் நின்றான். அப்போது அங்கே பாதாள லோகத்தின் காவலரான காலதேவன் அனுமன் முன் வந்து என்ன தேடுகிறாய்? எனக் கேட்டான்.
அனுமனும் பகவான் ஸ்ரீராமரின் மோதிரம் உள்ளே சென்று விட்டது அதை எடுத்துச் செல்ல வந்தேன் என்றான்.
அப்படியா என்று புன்னகைத்தவாறு கேட்ட காலதேவன் பாதாள அறையின் கதவை திறந்து விட்டான். உள்ளே சென்று உன் மோதிரத்தை எடுத்துச் செல் என்று அனுமனிடம் கூறினான்.
அனுமனும் பாதாள அறைக்குள் நுழைந்தான் ஆனால் அவன் தேடி வந்த மோதிரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆம் அந்த அறையில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவிந்து இருந்தன. அனைத்து மோதிரமும் ஒன்று போல் இருக்க அனுமன் குழம்பினான்.
காலதேவன் கூறினான். அனுமனே இவை அனைத்தும் காலச் சுழற்சியின் அடையாளங்கள். யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்.
அப்போது பிரம்மா விஷ்ணு லட்சுமி முதலான தெய்வங்கள் மீண்டும் மீண்டும் வரிசையாக அவதாரம் எடுப்பார்கள்.
அவர்கள் தாங்கள் எடுத்த பிறவியின் செயலை நிறைவேற்றுவார்கள் பின் மறைவார்கள் அவர்களை நாம் தடுக்கவோ அவர்களுடன் செல்லவோ முடியாது.
அனுமனே நீ ராமருடன் இருக்கிறார் ராமர் தன் மூல உரு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன் மோதிரத்தை தவற விட்டார். கால சுழற்சியின் விளக்கத்தை அறிந்து நீ உன் இருப்பிடம் செல்வாயாக என்று காலதேவன் அறிவுறுத்தினான்.
பிறப்பு - இறப்பின் மகத்துவம் அறிந்த அனுமனும் மனம் தெளிந்த நிலையில் மீண்டும் ராமரை அடைந்தான்.
இப்போது பகவான் ஸ்ரீ ராமர் அனுமனிடம் விடை பெற எண்ணினார். ஆனாலும் தன் மூத்த மகன் போல் விளங்கிய அனுமனை எளிதில் உதற முடியவில்லை.
ஸ்ரீராமன் அனுமனை அழைத்தார். அனுமனை உனக்கு ஒரு உரிமை தருகிறேன். உனக்கு விருப்பமானால் நான் இப்பூமியிலிருந்து செல்லும்போது நீ என்னுடன் வரலாம். என்று கண்ணீர் மல்க கூறி அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.
அனுமன் உடல் சிலிர்த்தான். உள்ளம் நெகிழ்ந்தான், சற்று ஒரு கணம் யோசித்தான்.
பிரபு தாங்கள் என்னை உங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள்.
ஸ்ரீவைகுண்டத்தில் நீங்கள் ராமனாக - என் பிரபுவாக இருப்பீர்களா ? இல்லை அவதார புருஷன் விஷ்ணுவாக இருப்பீர்களா ? என அனுமன் கேட்டான்.
ஒரு நிமிடம் திகைத்தார் ராமர்.
என்ன சந்தேகம் என் மகனே! வைகுண்டத்தில் நாம் பகவான் விஷ்ணுவாகவும், சீதை லட்சுமி தேவியாகவும், லட்சுமணன் ஆதிசேஷனாகவும், பரதன் சத்ருக்கனன், சங்கு சக்கரம் ஆகவும் அவதாரத்தில் இருப்போம் என்றார் பகவான் ராமர்.
அனுமனோ தயக்கமின்றி பிரபு, எனக்கு ஸ்ரீராமன் போதும் உங்களை ராமனாகவும் அன்னையை சீதாபிராட்டியாகவும் , மற்றவர்களை இப்புவியில் எடுத்த அவதாரங்களாவே வணங்க விரும்புகிறேன்.
நான் பூமியில் இருந்து உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன் உங்கள் நாமத்தை பிறர் சொல்வதை கேட்டபடியே இருப்பேன். எனக்கு அந்த புண்ணிய நிலையை என்றென்றும் நீங்கள் அருளினால் போதும் என்றான் அனுமன்.
பகவான் ஸ்ரீ ராமர் அனுமனின் பக்தியைப் மனம் சிலிர்க்க எண்ணி அனுமனுக்கு ஆசி வழங்கினார்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
ஸகஸ்ர நாம தஸ்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே !!!
ஜெய் ஸ்ரீ ராம

*🌷 திருச்சியில் குடிகொண்டிருக்கும் 🙏சமயபுரம் மாரியம்மன்... சக்தி வாய்ந்த 🙏அம்மனாக மாறியது எப்படி? சுவாரஸ்யமான கதை..*    ...
17/05/2024

*🌷 திருச்சியில் குடிகொண்டிருக்கும் 🙏சமயபுரம் மாரியம்மன்... சக்தி வாய்ந்த 🙏அம்மனாக மாறியது எப்படி? சுவாரஸ்யமான கதை..*
🕉️ 🙏 💐
*🌷சமயபுரம் மாரியம்மன்..!!*
💫சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வட கரையில் அமைந்துள்ள ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோயிலாகும். இந்த கோயில் தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
💫அம்மன் வழிபாட்டில் முதன்மையாக இடம்பெறும் சமயபுரம் மாரியம்மன் உருவான சுவாரஸ்யமான கதையை இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளம்.
*🌷 சமயபுரம் மாரியம்மன் தோன்றிய வரலாறு:*
💫எமதர்மனிடம் இருந்து தனது உயிரை காத்து கொள்ள சிவனிடம் தஞ்சம் புகுந்தார் மார்க்கண்டேயன். அவரை காப்பதற்காக காலசம்ஹார மூர்த்தியாக அவதரித்த சிவபெருமான், எமனை வதைத்து அவனிடமிருந்து மார்க்கண்டேயரை காப்பாற்றினார். இதனால் உயிர்களின் பிறப்பு மற்றும் இறப்பு கால சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நோய்களின் அதிபதியான மாயாசுரன் அதிக நோய்களை ஏற்படுத்தி மக்களை துன்புறுத்த ஆரம்பித்தான்.
💫மாயாசுரனின் இந்த செயலால் கோபமுற்ற பார்வதி தேவி, மாயாசுரனை அழிக்க தன்னுடைய அம்சமாக மாரியம்மனை தோற்றுவித்தார். தேவி பார்வதியின் அம்சமாக தோன்றிய மாரியம்மன், மாயாசுரனையும் அவனது தமையன்களையும் வதம் செய்து நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றினார்.
💫அதன்பிறகு சிவபெருமானிடம் ஆசிபெற்று தனது தமையன் வாழும் இடமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைஷ்ணவி தேவியாக எழுந்தருளினார். ஒருநாள் அங்கிருந்த சிலை தீப்பற்றி எரிய இதனை கண்ட கோயில் அர்ச்சகர்கள் சிலையின் மீது நீரை ஊற்றி அணைத்தனர். அதன்பிறகு அவளது திருவுருவை கண்டவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் சாந்த சொரூபியான வைஷ்ணவி தேவி கோர பற்களுடன் சிவந்த மேனியுடன் மிகவும் உக்கிரமாக காட்சியளிக்க தொடங்கினாள்.
💫ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று புரியாமல் குழம்பி போயிருந்த அர்ச்சகர்களை தெளிவாக்க ஒரு அசரீரி ஒன்று ஒலித்தது. அது மக்கள் அனைவரும் அம்மை நோயால் கடும் அவதிப்பட்டு வருவதால் அவர்களை காப்பாற்ற தன்னை இங்கிருந்து எடுத்து சென்று ஒரு தனிச்சன்னதியில் வைத்து வழிபடும்படியும் அதற்கு தானே வழிகாட்டுவதாகவும் கூறி மறைந்தது.
💫அந்த அசரீரி கூறியவாறே வைஷ்ணவி தேவி சிலையை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலிருந்து எடுத்து செல்ல அன்னை ஒளியாக வந்து தான் சேரும் இடத்திற்கான வழியை காட்டினாள். செல்லும் வழியில் இடையில் கானாடுகாத்தான் அரண்மனை அருகே சிலையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வு எடுத்தனர். பின்னர் சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு செல்ல முற்பட்டபோது சிலையை நகர்த்த முடியவில்லை. அப்போது மீண்டும் ஒரு அசரீரி கேட்டது. மக்களை அம்மை நோயில் இருந்து காப்பாற்ற தான் இந்த வேப்பமரம் நிறைந்த காட்டின் நடுவிலேயே வசிக்கப் போவதாகவும், தன்னை இங்கேயே விட்டு விட்டு செல்லும் படியும் கூறி அந்த குரலானது ஓய்ந்து போனது.
💫இப்படியாக மக்களை நோயிலிருந்து காக்க வைஷ்ணவி தேவி தனிச்சன்னதியாக குடி கொண்ட இடம் தான் சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நல்லாசி வழங்கும் தெய்வமாக இன்றும் விளங்குகிறாள் இந்த மாரி என்பது குறிப்பிடத்தக்கது
🌹 🕉️ 🙏 💐 🌹

இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ...
17/05/2024

இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ஒருசமயம் எதிர்காலத்தில் மழை பொய்த்து, நாட்டில் வறட்சி உண்டாகும் என்பதைக் கணித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவர், விஷயத்தை மக்களிடம் சொன்னார்.அதைக்கேட்டவர்கள் சிரித்தனர்.
""என்னது மழை பெய்யாமல் போய்விடுமா? வறட்சி தலைவிரித்து ஆடுமா? இந்தக் கதையை வேறெங்காவது போய் சொல்லுங்கள்,'' என அவரை ஏளனம் செய்தனர்.
""ஐயோ! மக்கள் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்களே... இவர்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் என்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான்,'' என்று நொந்து கொண்டார் இடைக்காடர்.
அவ்வேளையில் வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்தார். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிகளுக்கு, எருக்கஞ்செடியை சாப்பிடப் பழக்கினார். மேலும், கேழ்வரகு தானியத்தை, மண்ணில் கலந்து சிறிய குடிசையையும் கட்டிக்கொண்டார். இடைக்காடரின் வித்தியாசமான இந்த செய்கையைக் கண்டு சிலர் கேலியும் செய்தனர். ஆனால், இடைக்காடர் சற்றும் சளைக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்தார்.
இடைக்காடர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. நெடுநாட்களாக மழை பெய்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. முதலில் இடைக்காடர் சொன்னதை சாதாரணமாக நினைத்த மக்கள், அவர் சொன்ன உண்மையை அப்போது புரிந்து கொண்டனர். ஊரே வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறிவிட்டது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர்.
இவ்வேளையில் இடைக்காடர் தன் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை சாப்பிடக் கொடுத்தார். அதைச்சாப்பிட்ட ஆடுகள் அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டு பசியாறினார் .
இச்சமயத்தில், வானுலகில் சஞ்சாரம் செய்த கிரகங்கள், வறட்சியான இடத்தில் இடைக்காடர் கேப்பைக்கூழ் காய்ச்சுவதையும், ஆடுகள் சிரமமின்றி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவரது குடிசைக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற இடைக்காடர், ""ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே!'' என நினைத்தார்.
அவரது மூளை வேகமாக வேலை செய்தது. உடன் அவர், "கிரகங்களே! நீங்கள் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும்,'' என வேண்டினார்.
கிரகங்களும் ஒப்புக்கொண்டன. இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்து உபசரித்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் படுத்துவிட்டனர். அவர்கள் அயர்ந்து தூங்கிய வேளையில், தன் சக்தியால் அவர்களை மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்து விட்டது. பூமி, வறட்சி நீங்கி பசுமையாக மாறியது.
சிறிது நேரம் கழித்து எழுந்த கிரகங்கள், அனல் காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும்,
பெருமழையால், தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என்றெண்ணியவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டனர். சமயோசிதமாக செயல்பட்டு பஞ்சம் போக்கிய இடைக்காடரை வணங்கிய மக்கள், தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கேட்டனர்.

17/05/2024

💐காரிய தடை, கண் திருஷ்டி, செய்வினை, ஏவல் நீக்கி, செல்வ வளம் பெருக்கும் அசல் புனுகு!!💐

✨இலவசம்!! இலவசம்!! எங்களிடம் அசல் புனுகு பெறும் அன்பர்களுக்கு, 40 ஆண்டிற்கான முழமையான ஜாதக பலன்கள் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு தொழில், திருமணம், வீடு கட்ட உகந்த காலம், நோய், எதிராளி என அனைத்து அமைப்பிற்கான பலன்களும் ஆய்வறிக்கையாக வழங்கப்படும்.✨

☀️💥தங்களது வீட்டில் அபிசார தோஷங்களான கண்திருஷ்டி, குலதெய்வ அருள் இன்மை, லட்சுமி கடாட்சம் இன்மை, திருமண தோஷம், புத்திரபாக்கியம் இன்மை, குடும்பத்தில் அமைதி இன்மை, நல்ல வேலை கிடைக்கவில்லை, போன்ற பரிச்சனைகள் இருக்கிறதா? அல்லது வியாபாரத்தில், மந்த நிலை, நஷ்டம், கைப்பொருள் இழப்பு, பணம் கையில் தங்குவது இல்லை என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கிறதா? இது மிகவும் சுலபமான முறையாகும். முயற்சி செய்து பாருங்கள் 💥☀️

📱100% இயற்கையான, அசல் புனுகு பற்றி, மேலும் விபரங்களுக்கு 07708968030 என்ற எண்ணை அழைக்கவும். 📱

⚡️✨புனுகின் சிறப்பை அறிய ஒரு உதாரணம் – “திருப்பதி கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் வெங்கடாஜலபதி சிலைக்கு புனுகு கொண்டு பூர்ணாபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்கின்ற போது இறை சக்தி முழுமையுமாக ஸ்தாபிக்கப்படுகிறது.✨⚡️

🙏” 108 திவ்ய தேசங்களில், முதன்மையான ஶ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் பூர்னாபிஷேகத்திற்கு நாங்கள் தான் புனுகு சாற்றுகிறோம் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய ஆன்மீக பொக்கிஷம் இந்த அசல் புனுகு.🙏

💵அசல் புனுகின் விலை விபரம் ஒரு கிராம் - ரூ.1550/- மட்டுமே. 💵

1கிராம் அளவு தாராளமாக ஒரு வருட காலம் பயன்பாட்டிற்கு வரும்.

💻எங்களது ஆன்லைன் வலைத்தளத்தின் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம். www.deiveegaa.com💻
**********************************************************************
100% இயற்கையான, அசல் புனுகு பற்றி, மேலும் விபரங்களுக்கு 07708968030 என்ற எண்ணை அழைக்கவும்.

Address

Salem
636001

Alerts

Be the first to know and let us send you an email when Deiveegaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deiveegaa:

Share